immunity booster-நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 10 உணவுகள் :
1.பூண்டு:
பூண்டை தினமும் ஒரு பல் பச்சையாக சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதற்கு காரணம் இதில் உள்ள அலிசின் என்ற வேதிப்பொருள் தான். இது சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை உடலுக்கு தரக்கூடியது. இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் தொண்டை எரிச்சல், சுவாசப் பாதை தொற்றுகளின் தீவிரத்தையும் மேலும் ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் கோளாறுகளுக்கு இது சிறந்த பலனைத் தரக்கூடியது.
தீவிர மூச்சுக்குழாய் வளர்ச்சியையும் குறைக்கும். மேலும் இரத்த அழுத்தத்தை சீராக்கும். கொழுப்பை கட்டுப்படுத்தும். செரிமானக் கோளாறையும் சரி செய்யும்.
2 .எலுமிச்சை பழம்:
பொதுவாக சிட்ரஸ் பழங்கள் உடல் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, நோய் தொற்றிலிருந்து உடலை பாதுகாக்கும்.
அத்துடன் காய்ச்சல் போன்ற உடல்நல பாதிப்பிலிருந்து காக்கும். மேலும் விட்டமின் c யை இயற்கையாக உற்பத்தி செய்ய மற்றும் சேமிக்க முடியாது என்பதால் தொடர்ந்து ஆரோக்கியத்திற்கு விட்டமின் சி தேவைப்படுகிறது. அந்த வகையில் எளிதில் கிடைக்கக்கூடிய சிட்ரஸ் பழமான எலுமிச்சை ஜூஸ் போட்டு குடித்து வரலாம்.
3.கருஞ்சீரகம்
தாவரங்களிலே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருள் என்றால், அது கருஞ்சீரகம் தான். இந்த கருஞ்சீரகத்தில் உள்ள தைமோகுயினோன் என்ற வேதிப்பொருள் தான் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. மேலும் இதில் முக்கிய அமினோ அமிலங்கள்,அவசியமான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், பீட்டா கரோட்டின், கால்சியம், இரும்பு சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகளை கொண்டுள்ளது.
எனவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கால் டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். முக்கியமாக இதய நோய், புற்றுநோய் போன்றவற்றை குணப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இந்த கருஞ்சீரகம் உள்ளது.தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும்.
4.பெரிய நெல்லிக்காய் :
இதில் விட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளதால் உடலுக்கு அதிக நோய் எதிர்ப்பாற்றலை தரக்கூடியது. அதாவது தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் ஒரு ஆப்பிள் சாப்பிட்டதற்கு சமம். மேலும் இது நரைமுடி ஏற்படாமல் தடுக்கும். மூளைத் திறனை அதிகரிக்கும். பாக்டீரியா வைரஸ் போன்ற தொற்று ஏற்படாமல் தடுக்கக் கூடியது.
5.நாட்டுக்கோழி முட்டை:
பொதுவாக மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு புரதச்சத்து மிகவும் அவசியம். மேலும் மஞ்சள் கரு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமல்ல முட்டைகளில் அதிக அளவு விட்டமின் டி உள்ளதால் எலும்புகளின் வலிமைக்கு மட்டுமல்லாது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.
மீன்களில் உள்ளது போன்றே முட்டையிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. அதனால் தினமும் முட்டை சாப்பிடுவது கண்பார்வைக்கு, மூளை செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது. மீன் பிடிக்காதவர்கள் கூட முட்டை சாப்பிடுவதன் மூலம் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நன்மை உடலுக்கு கிடைத்துவிடும்.
6.மஞ்சள் தண்ணீர்:
ஒரு டம்ளர் தண்ணீரில் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் கலந்து கொதிக்க வைத்து வெதுவெதுப்பான நிலையில் குடித்து வரலாம்.பெரியவர்கள், குழந்தைகள் என பருகி வரலாம். மஞ்சள் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது. இது உடலை நோய் தாக்காமல் பார்த்துக் கொள்ளும். எனவே இந்த மஞ்சள் நீரை பருகி வரும்பொழுது காய்ச்சல் நம்மை அண்டாது. செரிமான சக்தி அதிகரிக்கிறது. சர்க்கரை அளவு திடீரென உயர்வதும் கட்டுப்படும்.
7 .மீன்கள்:
கடல் மீன்களில் மத்தி மீன் ,கானாங்கெளுத்தி ,சால்மன் போன்ற எளிதில் கிடைக்கும் மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, இதயத்தையும் பாதுகாக்கிறது. பொதுவாக மீன்களை எண்ணெயில் வறுத்து சாப்பிடுவதை விட குழம்பு வைத்து சாப்பிட்டால் இதன் முழுப்பலனையும் பெற முடியும், எனவே வாரத்தில் 2 முறை இது போன்ற மீன்களை சாப்பிட்டு வருவது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
8.மிளகு:
மிளகின் காரத்தன்மைக்கு காப்சைசின் என்ற வேதிப்பொருள் காரணமாக உள்ளது. மேலும் உடலில் உள்ள செல்களை பாதுகாக்கும் தன்மையும் உள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். மேலும் சளி, இருமல், தொண்டை வலி போன்றவை இருந்தால் ஒரு டீ ஸ்பூன் மிளகை நெய்யில் வறுத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் உடனடி பலன் கிடைக்கும்,
9.இஞ்சி :
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய இஞ்சி ஒரு சிறிய துண்டு அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக வற்றியதும் இறக்கியவுடன் அதில் தேன் கலந்து சாப்பிட்டு வரலாம் .இதனால் மூச்சுத்திணறல், வைரஸ் காய்ச்சல், சளி, தலைவலி, மூக்கடைப்பு எல்லாவற்றிற்கும் இந்த இஞ்சி டீ நல்ல பலனை தரும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும், ஜீரண சக்தியும் அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்தது.
10.சின்ன வெங்காயம் :
தினமும் மூன்று சின்னவெங்காயத்தை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும். இதில் உள்ள பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
இதனால் மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். சின்ன வெங்காயம் கொழுப்பை உடனே கரைக்கும் தன்மை கொண்டது .மேலும் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்திற்கும் உதவுகிறது. இழந்த சக்தியை மீட்கும் தன்மை உடையது.
[highlight color=”blue”][/highlight]