5 morning drinks இனிமேல் காலையில் டீ,காபி வேண்டாம்!

5 morning drinks இனிமேல் காலையில் டீ,காபி வேண்டாம்!

5 morning drinks நிறையப்பேர் காலையில் எழுந்ததும் காபியோ அல்லது டீயோ சாப்பிட்டால் தான் அடுத்த வேலையை செய்ய முடியும் என்பார்கள். காபி, டீ நல்லதா? கெட்டதா? என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது. உண்மையில் இதில் சேர்க்கப்படும் பாலில் கலப்படம் அபாயமான வெள்ளை சர்க்கரை இவற்றை கணக்கில் கொண்டால் நல்லது இல்லை என்று தோன்றுகிறது.

அந்த வகையில் உடலுக்கு நல்லதாகவும் இருக்க வேண்டும், எந்த பக்கவிளைவும் இருக்கக்கூடாது அப்படி என்றால் என்ன சாப்பிடுவது! காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ, காபிக்கு பதிலாக என்ன சாப்பிட்டால் நல்லது.

1.எலுமிச்சை சாறு

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் காபி, டீ சாப்பிடுவதை தவிர்த்து வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். இதனால் உடல் எடையும் குறையும்.

காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த குழாய்கள் விரிவடையும், இதனால் ரத்த ஓட்டம் சீராக செயல்படும்.மேலும் செல்களுக்கு ஊட்டச்சத்து, ஆக்ஸிஜன் கிடைப்பதால் உடலும் ஆரோக்கியமாக செயல்படும். முக்கியமாக, செரிமான கோளாறு, மலச்சிக்கல் என்பது இருக்கவே இருக்காது.

அதே போன்று, நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதால் நமக்கு வயதான தோற்றமும் ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகள் சீராக இருக்கும்.

2.வெந்தயத்தண்ணீர்

இதில் நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன.வெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இரத்த அழுத்த பிரச்சினைகள் என்பது இருக்காது. மேலும், வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால் இதய பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை. அதே போன்று, இதில் உள்ள அமினோ ஆசிட் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும்.

எனவே, நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது. மேலும், வெந்தயத்தில் நார்ச்சத்து இருப்பதால் செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். அதேபோன்று, அல்சர் இருந்தாலும் குணமாகிவிடும். ரத்தசோகை நீங்கும்.

இதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடையை குறைக்க உதவும். சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்களை முற்றிலும் வெளியேற்றும். அதுமட்டுமல்ல, வெந்தயம் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். கல்லீரலில் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடல் முழுவதும் இரத்தம் சீராக பாய உதவி புரியும். முக்கியமாக, உடல் சூடு குறையும்.

3.தேன்

வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு நல்ல பலம் தரும். சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்து. இது மேலும், குரலை மென்மையாக்கும், இரத்தத்தை சுத்தம் செய்யும், இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

வயிற்று எரிச்சலை குறைக்கும், செரிமானத்திற்கு உதவும் நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடையும். அதேபோன்று, மலச்சிக்கலை சரிசெய்யும் உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றும்.

வாயுதொல்லை நீங்கும், இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை சருமத்தை பாக்டீரியாக்களின் தாக்குதலில் இருந்து பாதுகாத்து சுத்தமான மற்றும் பொலிவான சருமத்தைப் பெற உதவும். முக்கியமாக ரத்த சர்க்கரை அளவு சீராக இருப்பதோடு, உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவும் குறையும். மேலும், தேனில் உள்ள பிலேவனாய்டு, இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடல் எடையையும் குறைக்கும்.

READ THIS : தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் உள்ளதா ?/Beetroot Juice Benefits

4.சீரக தண்ணீர்

ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சீரகத்தை சேர்த்து கொதிக்க வைத்து, அந்த நீரை அருந்துவதால் பல உடல் உபாதைகளை நீக்குகிறது. உயர் ரத்த அழுத்தம் இருந்தால் குறையும். மலச்சிக்கல், செரிமான பிரச்சினைகள் நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

இது ஹீமோகுளோபினை அதிகரிப்பதால் ரத்த சோகையும் நீங்கும். முக்கியமாக, தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடை குறையும். உடலிலிருந்து கிருமிகளை வெளியேற்றுகிறது, உடல் இயக்கத்திற்கு மிகுந்த நன்மை தரும். முடி கொட்டும் பிரச்சனை இருந்தால் இப்படி சாப்பிடும் போது வேர் கால்கள் வலிமை அடைந்து முடி கொட்டுவது நிற்கும்.

5.நீராகாரம்

முதல் நாள் வடித்த சாதத்தில் தண்ணீரை ஊற்றி வைத்திருந்து அடுத்த நாள் வெறும் வயிற்றில் அந்த நீரை குடித்து வந்தால் உடல் எடை குறைவதோடு, உடல் கழிவுகளை வெளியேற்றும். செரிமான பிரச்சினைகள் இருக்காது. உயர் ரத்த அழுத்தம் இருந்தால் குறையும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வயிற்றுப்புண் நீங்கும். உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் இதில் இருப்பதால் வாதம், பித்தம், கபம் இந்த மூன்றையும் சமநிலையில் வைத்திருக்கும். மேலும் இது உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியது.

இந்த ஐந்துமே உடலுக்கு நன்மையைத் தவிர எந்த தீங்கும் தரக்கூடியது இல்லை. இதை ஒவ்வொரு மாதமும் ஒன்று என்று மாற்றி, மாற்றி சாப்பிட்டு வரலாம். உண்மையில் இது போன்று, வந்தால் ஒரு மாதத்திலேயே உடலில் நல்ல மாற்றம் தெரியும்.