5 சிறப்பம்சம் நெல்லிக்காயை பற்றி

நெல்லிக்காய் நன்மைகள் 

நெல்லிக்காயில் நிறைய  ஆரோக்கிய நன்மைகளை உண்டு ,  வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகளவில் நெல்லிக்காயில் இருக்கின்றது . குறிப்பாக நெல்லிக்காயில் , ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது .

1. இதய ஆரோக்கியம்

நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள்  இதய தசைகளை வலிமையாக்கி , இரத்த ஓட்டத்தை சீராக்கி , இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் . மேலும் நெல்லிக்காயில் இருக்கும்  இரும்புச்சத்து, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது , உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்த ஓட்டம் சீராக வைக்கவும்  நெல்லைக்காய் பயன்படுகிறது.

2. புற்றுநோய் செல்லின் எதிரி 

நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் உருவாவதை  தடுக்கும் தன்மை கொண்டது . இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க உதவுவதாக  ஆய்வில் தெரிய வந்துள்ளது.

3.நோய் எதிப்பு திறனை அதிகரிக்க 

நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நோய் எதிர்ப்பு  சக்தியை அதிகரிக்கும் . இது ப்ரீ-ராடிக்கல்களால் உடலினுள் ஏற்படும் பாதிப்பை எதிர்த்துப் போராடும். முக்கியமாக நெல்லிக்காய் சாப்பிடுவதால்  இரத்த வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு உடலை  தாக்கும் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் . நோய்  திப்பு சக்தி குறைந்த குழந்தைகள் மற்ற மனிதர்கள் நோய் தாக்குதல்களில் இருந்து விலகி இருக்க தினமும் ஓர் நெல்லிக்கனி சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆரோக்கியமாக வாழலாம்.

4.நரை முடி பிரச்சனைக்கு 

இன்றைய தலைமுறை பிள்ளைகளுக்கு மிகபெரிய பிரச்னை தலையில் உள்ளது ஆமாம் நரை முடி பிரச்னை , இளம் வயதில் இதை வரவிடாமல் தடுக்கமுடியும்  . நெல்லிக்காய் சாறு மற்றும் பாதாம் எண்ணெய் இரண்டையும் சரிபங்கு அளவு  எடுத்துக்கொண்டு, அதில் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்த கலவையை இரவில் கூந்தலில் தேய்த்து, காலையில் கழுவிவிடலாம். விரைவில் கூந்தல் கறுப்பாக  மாறும்.

5.சுருக்கமாக.,

வைட்டமின் சி அதிகம்  …

உங்கள் கண்களுக்கு நல்லது. …

உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்துகிறது. …

எலும்பு வலிமை. …

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும். …

எடை இழப்பை  ஊக்குவிக்கிறது. …

நன்கு செரிமானம் ஏற்பட உதவுகிறது..