மா, பலா, வாழை என்று முக்கனிகளில் கடைசி பழமாக இது இருந்தாலும் உலக மக்களால் தினமும் விரும்பி சாப்பிடப்படும் முதல் பழமாக வாழைப்பழம் திகழ்கிறது.எந்த காலத்திலும் எப்போதும் எந்த இடத்திலும் கிடைக்கக்கூடிய பழம் வாழைபழம் தான்.
பழங்கள் பல வகை உண்டு அவைகள்.
பேயன் , ரஸ்தாளி , பச்சை , நாட்டு பழம், மலை வாழைப்பழம், பூவன் , கற்பூரம் , மொந்தன் , நேந்திரம், கருவாழைப்பழம், நவரை வாழைப்பழம், சர்க்கரை வாழைப்பழம், செவ்வாழைப்பழம்,அடுக்கு , வெள்ளை , ஏலரிசி , மோரீஸ் என பலவகைகள் உள்ளன.
அனைத்து விதமான பழங்களிலும் நன்மைகள் உள்ளது.
தற்போது 5 வாழைபழத்தின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.
● பேயன்வாழைப்பழம்
குழந்தைகளுக்கு ஏற்படும் கணச் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது மலச்சிக்கலை நீக்கும் த
உடம்பில் அதிக குளிர்ச்சி கொண்டவர்கள் இப்பழத்தை உண்பது நல்லதல்ல.
● மலை வாழைப்பழம்
தினமும் பகல், இரவு உணவுக்கு பின்னர் சற்று கழித்து சாப்பிட்டு வந்தால் இரத்த விருத்தி ஏற்படும் நல்ல ஜீரண சக்திக்கு பயன்படும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும் தன்மை கொண்டது ஜீரண கோளாறு நீங்க ஆமணக்கு எண்ணெயை சிறிதளவு எடுத்து மலை வாழைபழத்தில் விட்டு பிசைந்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் ஜீரண கோளாறுகள் நீங்கும். இரத்த சோகை கொண்டவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்தம் அதிகமாகும்.
● கற்பூர வாழைப்பழம்
உடல் ஆரோக்கியத்திற்கும், ரத்த விருத்திக்கும், மூளை வளர்ச்சிக்கும் நன்கு பயன்படுகிறது.தோலில் ஏற்படும் சொறி, சிரங்குகள், புண்கள் விரைவில் ஆற உதவுகிறது . தலைபாரம் நீங்கப் பயன்படும்.
● செவ்வாழைப்பழம்
செவ்வாழைப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர உடலில் நோய் எதிர்ப்ப சக்தி அதிகமாகும். தொற்றுநோய்கள் இவர்களுக்கு வரவே வராது . குழந்தையில்லாத ஆணும், பெண்ணும் செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டு வந்தாலே போதும். கர்ப்பம் தொடர்பான சிறுதடைகள், நோய்கள் நீங்கி, பிள்ளை பாக்கியம் உண்டாகும்.
●நேந்திரம்பழம்
நேந்திரன் மூளையின் செல்களுக்கு வலுவூட்டியாக இருக்கிறது நினைவுகள சிதறாமல் பாதுகாப்பதாக இப்பழத்தின் சத்துக்கள் உருதுணையா க இருக்கின்றன .நல்ல சத்துக்கள் நிரம்பியதாக இருக்கிறது.உடம்புக்கு குளிர்ச்சியை தரும். இரத்தத்தை விருத்தி செய்ய இப்பழம் மிகவும் உதவி செய்யும்