பாகற்காய் மிக சிறந்த மருந்து குணம் கொண்ட காய் இந்த பாகற்காயில் உள்ள நமக்கு நன்மை தரும் விஷயங்களை பற்றி நாம் பார்போம்.
1. நீரிழிவு நோய் ( diabetes – சர்க்கரை நோய் )
2018 ம் ஆண்டு கணக்கெடுப்பு படி 425 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயாளிகளாக வாழ்ந்து வருகின்றனர் . பாகற்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது 4 வாரம் type 1 diabetes உள்ள மக்களுக்கு 2000mg அளவுக்கு பாகற்காய் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டதன் விளைவாக இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு கணிசமாக குறைந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.
நீங்களும் உணவில் பாகற்காய் சேர்த்து உண்டு சர்க்கரை நோயை கட்டுப்படுத்துங்கள்.
2.கெட்ட கொழுப்பை குறைக்க ( reduce bad cholesterol level )
பாகற்காய் ஜுஸ் ஒரு anti-inflammatory இது கெட்ட கொழுப்பின் அளவை குறைப்பது மட்டுமல்லாமல் இரத்த அழுத்தத்ததை சமநிலையில் வைத்திருக்கும் மற்றும் இதில் இருக்கும் பொட்டாசியம் , சோடியம், இரும்புச்சத்து மற்றும் folic acid இதயம் சம்மந்தபட்ட நோய்களை வரவிடாமல் தடுப்பது மட்டுமின்றி பக்கவாதம் ஏற்படுவதையும் தடுக்கிறது.
3.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க.
பாகற்காய் நோய்களை உண்டாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து சண்டையிடும் . 2010, ம் ஆண்டு the Pharmaceutical Research Journal வெளியிட்ட அறிக்கையில் பாகற்காய் anti-carcinogen and anti-tumour கொண்டுள்ளது எனவும் இது புரோஸ்டேட், மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும் தன்மை உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
சுருக்கமாக சொன்னால் பாகற்காய்
● இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது
● கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது
● மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது.
● இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும்.
● பக்கவாதம் வருவதை தடக்கும்
●நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.