What foods should heart patients avoid to lower cholesterol?மாரடைப்பு எதனால் வருகிறது ?
What foods should heart patients avoid to lower cholesterol?மாரடைப்பு என்பது ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உடல் உழைப்பு இல்லாமை, முறையற்ற உணவுப் பழக்க வழக்கம் இவை தான் இந்த நோய்கள் அதிகரிக்க காரணம். பார்க்கும் உணவுகளை எல்லாம் சாப்பிட்டு விடுகிறோம், அது நமக்கு நல்லதா? கெட்டதா? என்று கூட யோசிப்பதில்லை. மாரடைப்பு என்பது நமது உடலில் உள்ள அதிகளவு கொழுப்புகள் இதய ரத்த குழாய்களில் படிவதால் உண்டாகிறது .எனவே முதலில் நாம் செய்ய வேண்டியது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் .
கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது எப்படி ?
கொலஸ்ட்ரால் அளவை எப்படி குறைப்பது என்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை .நாம் அன்றாடம் உண்ணும் அதிகப்படியான கொழுப்பு உணவுகளை தவிர்த்தாலே மாரடைப்பு வராமல் தடுக்கலாம் . கொலஸ்ட்ரால் என்பது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது.
80% கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் உற்பத்தி செய்கிறது மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் கிடைக்கிறது. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன அப்பொழுதே கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல் தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும் அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.
உடலில் உள்ள 100 மில்லி ரத்தத்தில் 150 மில்லிகிராம் முதல் 200 மில்லி கிராம் அளவுதான் கொலஸ்ட்ரால் இருக்க வேண்டும். இந்த அளவு அதிகரிக்கும் போது தான் உடல் நலம் சீர்குலைகிறது. அவற்றின் செயல் திறனை அடிப்படையாகக் கொண்டு அடர்த்தி குறைந்த கொழுப்புப் புரதத்தைத் தீமை தரும் கொலஸ்ட்ரால் அதாவது எல்டிஎல்(LDL) கொலஸ்ட்ரால் என்றும் அடர்த்தி மிகுந்த கொழுப்புப் புரதத்தை நன்மை தரும் கொலஸ்ட்ரால் எச்டில்(HDL) கொலஸ்ட்ரால் என்றும் ,கூறப்படுகிறது. இந்த நன்மை தரும் கொலஸ்ட்ரால் ரத்தக் குழாய்களில் படியும்.
பொதுவாக சிறு வயதிலிருந்தே கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வந்தவர்களுக்கு 50 வயதில் வரவேண்டிய நோய்கள் 30 வயதிலேயே வந்து விடுகிறது. இரத்த குழாய்கள் மற்றும் பிற உறுப்புகளின் கெட்ட கொழுப்புகள் ரத்த அழுத்தத்தை மிகைப்படுத்தி இறுதியில் மாரடைப்பை உருவாக்கி இளம் வயதிலேயே இழப்பை ஏற்படுத்துகிறது.
அதாவது எல்டிஎல் கொலஸ்ட்ரால் காரணமாக உடலின் மொத்த கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளது என்றால் அது இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படும்.எனவே உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் இங்கே பார்க்கும் உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
மாரடைப்பை ஏற்படுத்தும் உணவுகள் :
1.மட்டன்:
இதில் அதிகப்படியான கொழுப்பு உள்ளதால் சாப்பிடாமல் தவிர்ப்பது தான் நல்லது .அதிலும் ஈரலில் கொலஸ்ட்ரால் மிக அதிகமாக உள்ளது எனவே அதற்கு பதிலாக மீன் சாப்பிடலாம்.
2.பாப்கான் :
பாப்கான் ஆரோக்கியமான நொறுக்குத் தீனி என்று சொல்லப்பட்டாலும், இதனை கொலஸ்ட்ரால் அதிகமுள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும். ஏனென்றால் மைக்ரோவேவ் மூலமாக தயாரிக்கப்படும் பாப்கானில் அதிகப்படியாக எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்திருப்பார்கள். அதோடு சுவைக்காக சேர்க்கப்படும் ரசாயனங்கள் உடலுக்கு நல்லதல்ல.
3.சர்க்கரை :
இது உங்கள் உடலில் இருக்கும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை குறைத்துவிடும் சராசரியாக ஒரு நாளைக்கு பெண் என்றால் 6 ஸ்பூன் ஆண் என்றால் 9 ஸ்பூன் சர்க்கரை அளவுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். முக்கியமாக பாக்கெட்டில் அடைக்கப்பட்ட குளிர் பானம் குடிப்பதை அறவே நிறுத்தி விடவேண்டும்.
அதில் சேர்க்கப்படும் கெமிக்கல்கள் உடலுக்கு பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல், இது இனிப்புகள் சேர்க்கப்பட்டு சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் என்பதால் அதனை கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது.
4.வெண்ணை:
வெண்ணை உணவுகளில் சுவைக்காக சேர்க்கப்படும் இதனையும் தவிர்ப்பதுதான் நல்லது. இதில் அதிகப்படியான கொழுப்பு இருக்கும் என்பதால் இதனை பயன்படுத்த வேண்டாம். விலங்குகளிடமிருந்து கிடைக்கும் உணவு வகைகளிலும் பால், பால் சார்ந்த பொருட்கள் போன்றவற்றில் கொலஸ்ட்ரால் மிக அதிகமாக உள்ளது. ஒரு கப் தயிரில் சுமார் 35 கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. அனைவரும் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீம்கள் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தவிர்த்துவிடுவது நல்லது.
5.உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கு எல்லோருக்கும் பிடித்த உணவு என்றாலும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்துவிடும் உருளைக்கிழங்கை எந்த வகையிலும் எடுத்துக்கொள்ளக்கூடாது.
6.முட்டையின் மஞ்சள் கரு:
அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் சாப்பிடாமல் தவிர்ப்பது தான் நல்லது. அதேபோன்று பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளையும் வாரம் ஒருமுறை என்ன செய்யப் போகிறது என்று நினைக்காமல் சாப்பிடாமல் தவிர்த்து விடுவதுதான் நல்லது .
எனவே அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டு உடற்பயிற்சி செய்தால் மட்டுமே இதயத்தை பாதுகாக்க முடியும். பொதுவாக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் உடலின் எடையை சீரான அளவில் வைத்துக் கொண்டு, நார்ச்சத்து நிறைந்த தானியங்கள், காய்கறிகள், பழங்கள் அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள். ஆண்டுக்கு ஒருமுறை உங்களுடைய ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.