Ustrasana – Camel Pose – உஷ்ட்ராசனம்

இடுப்பு, தோள்கள், கழுத்துக்கு வலிமை தரும் உஷ்ட்ராசனம்.
இந்த ஆசனம் செய்து வந்தால் கழுத்து, தோள்கள், முதுகெலும்பு, நுரையீரல், சுவாசக்குழாய், தொடைகள், இடுப்பு கைகள் வலுப்பெறும். இடுப்பு வலி, கழுத்து வலி, தொடைகள், மார்பு அழகான வடிவம் பெறும்.
உஷ்டிர என்றால் ஒட்டகம் என்று பொருள். இந்த ஆசனம் ஒட்டகம் போன்ற வடிவில் இருப்பதால் உஷ்டிராசனம் என்று அழைக்கப்படுகிறது.

Strengthens: Human back
Stretches: Thorax, Quadriceps femoris muscle, Abdomen, MORE
Preparatory poses: Bhujangasana, Dhanurasana, Virasana, Salabhasana,Urdhva Mukha Shvanasana, Supta Virasana
Follow-up poses: Dhanurasana, Chakrasana, Virasana, Sarvangasana, Dandasana, Janusirsasana
Pose type: Chest opener,Backbend
Also known as: Ushtrasana, Camel pose
Note: Consult a doctor before beginning an exercise regime.

பயன்கள்:
1. கழுத்து, தோள்கள், முதுகெலும்பு, நுரையீரல், சுவாசக்குழாய், தொடைகள், இடுப்பு கைகள் வலுப்பெறும்.
2. இளமை மேலிடும். நினைவாற்றல் அதிகரிக்கும். மூச்சுத் திணறல், மூக்கடைப்பு, இடுப்பு வலி, கழுத்து வலி, மலச்சிக்கல் நீங்கும், முக அழகு அதிகரிக்கும், கழுத்து, இடுப்பு, தொடைகள், மார்பு அழகான வடிவம் பெறும்.
3. தைராய்டு மற்றும் தைமல் சுரப்பிகள் நன்கு செயல்படும்.
4. தொண்டை சதை வளர்ச்சிக்கும், நுரையீரல் கோளாறுகளுக்கும் பயனுள்ளதாகிறது.
5. ஜீரண சக்தி அதிகரிக்கும்.