Sore Throat, Colds/தொண்டைக் கரகரப்பு, தொண்டைவலி, சளி, மார்புச்சளி, உடனே குணமாக தினமும் திரிகடுக காபி சாப்பிடுங்க
திரிகடுகம் : சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று இன்றியமையாத பொருள்களின் சரிசமமான கலவையை திரிகடுகம் எனப்படும். இந்த திரிகடுக பொடியை வைத்து தயாரிக்கப்படும் காபி தான் திரிகடுகம் காபி. சளி, மார்பு சளி, இருமல், தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, வறட்டு இருமல் போன்ற நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இந்த திரிகடுகம் காபி உதவும்.