கேழ்வரகு தோசை செய்வது எப்படி ?
கேழ்வரகு (ராகி) சிறுதானியங்களில் ஒன்றாகும்.இதில் புரதம்,நார்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது. இவற்றின் பயன்களில் பற்கள் மற்றும் எலும்புகள் பாதுகாப்பு,உடல் எடை குறைத்தல்,உடல் சூடு குறைத்தல், மன அழுத்தம் சரி செய்தல்,தாய்ப்பால் அதிகரித்தல்,தோல் பராமரிப்பு ஆகியவை அடங்கும். இதனை களி,கூழ்,கஞ்சி என பல்வேறு விதமாக உட்கொள்ளலாம். இந்த காணொளியில் ராகியை பயன்படுத்தி தோசை எவ்வாறு செய்யலாம் என்பதை காணலாம்.