Reason for heart attack – இதய நோய் வருவதன் காரணம் – தீர்வு

Reason for heart attack – இதய நோய் வருவதன் காரணம் – தீர்வு


இதயநோய் வர காரணம் இன்று இருக்கும் காலகட்டத்தில் அதிகப்படியான இளைஞர்களுக்கு அதாவது 25 முதல் 35 உள்ள நபர்களுக்கு இதய நோய் எனப்படும் ( heart attack ) வருகிறது இது மிகவும் ஆபத்தானது .

முன்பெல்லாம் 50 வயதிற்கு மேல் மேல் ( heart attack ) வந்தால் அதை பெரிதாக நினைப்போம் தற்பொழுது அது சாதரணமாக 25 முதல் 35 வரை உள்ள இளைஞர்களுக்கு வருகிறது .

இதற்கு முக்கிய காரணம் அளவுக்கு அதிகமான மன அழுத்தம் சாப்பாட்டு பழக்கமும் சரியில்லாமல் போனது தான் மூன்றாவது நாம் உடற்பயிற்சி செய்வதே கிடையாது.

உயிர் இழப்பு என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் மன அழுத்தம் காரணமாகவும் இதய நோய் வருகின்றது என்பதை உணர்ந்து கொண்டு அந்த மன அழுத்தத்தை நாம் கட்டுப்படுத்த முயற்சி செய்யவேண்டும்.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது எப்படி ?

தினமும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம் இது மன அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.

தினமும் குறைந்தது 30 முதல் 60 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதை நோக்கமாகக் கொள்ளுங்கள்
வழக்கமான, தினசரி உடற்பயிற்சி உங்கள் இதய நோய் அபாயத்தை குறைக்கும். உடல் செயல்பாடு உங்கள் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் type 2 நீரிழிவு போன்ற உங்கள் இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய பிற நிலைமைகளை உருவாக்கும் வாய்ப்புகளை குறைக்க உதவுகிறது.

வாரத்திற்கு 150 நிமிடங்கள் விறுவிறுப்பான வேகத்தில் நடப்பது போன்றவை ஓடுவது போன்ற செயல்பாடுகளை வாரத்தில் 75 நிமிடங்கள் செய்வது இதயத்திற்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றன,

உணவு முறை

வெள்ளை சர்க்கரையை தவிர்ப்பது மிகவும் நல்லது refind செய்யப்பட்ட அந்த வெள்ளை சர்க்கரை உடலுக்கு மிகவும் ஆபத்தானது முக்கியமாக இதய நோய்க்கு அது மூலகாரணமாக 90 சதவீதம் இருக்கிறது அதனால் குறைக்க முயற்சி செய்ய வேண்டும் .

அதற்கு பதிலாக நாட்டுசர்க்கரை இருக்கிறது வேறு பல நம்ம பாரம்பரிய சர்க்கரை வகைகள் உண்டு அதனால் பெரிய அளவு பாதிப்பு ஏற்படாது.

நீங்கள் எவ்வளவு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள் சாப்பிடுகிறீர்களோ, அவ்வளவு இன்சுலின் உங்கள் உடல் வெளியிடுகிறது மற்றும் உடல் பருமனுக்கான ஆபத்து அதிகமாகும் – இருதய நோய் ஆபத்து அதிகமாகும் .சர்க்கரை நிறைந்த உணவு உண்பதால் நீங்கள் அதிக எடை கூடாவிட்டாலும் இதய நோயால் இறக்கும் அபாயத்தை உயர்த்தக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகிறது .

 

  • தினமும் காய்கறிகளை உட்கொள்வது மிகவும் அவசியம் ஒரு வேளையாவது காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்ளுங்கள் முக்கியமாக பீட்ரூட் காய் கறிகளை எண்ணையில் வதக்கி சாப்பிடுவதும் ரத்த நாளங்களில் கொழுப்பு படுவதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது எண்ணையில் காய்கறிகளை வதக்குவதை குறைத்து கொள்ளவேண்டும் .

 

  • மற்றும் ஆரஞ்சு மாதுளை எனும் பழ வகைகளையும் உ சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

இதை நாம் வாழ்க்கை முறையாக மாற்றிக்கொண்டு தினமும் பின்பற்றி வந்தால் இதய நோயை முடிந்த அளவுக்கு கட்டுக்குள் வைக்க முடியும்.

குறைந்த வயதில் உயிரிழப்பு ஏற்படுவதை நம்மால் தடுக்க முடியும் மாற்றத்தை ஏற்படுத்த வெகுநாட்கள் தேவையில்லை ஒரு நொடி பொழுது போதும் இப்பொழுதே மாறுவோம் உணவு பழக்கத்தையும் உடற்பயிற்சி செய்வதையும் மன அழுத்தத்தை குறைப்பது போன்ற முக்கிய காரணிகளில் நம் கவனம் செலுத்தினாலே இதயநோய் நமக்கு வராது.

மறக்காமல் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி

உணவே மருந்து – தமிழ