வணிக அரசியல்

நாம் தவிர்க்கவேண்டிய 10 செயற்கை மூலப்பொருட்கள்

உணவு நிறுவனங்கள் தங்களால் தொகுக்கப்பட்ட தயாரிப்புகளில் 3,000 க்கும் மேற்பட்ட செயற்கை உணவு சேர்க்கைகளைப் பயன்படுத்துகின்றன. அவற்றில் பாதுகாப்புகள், சுவைகள் மற்றும் வண்ணங்கள் அடங்கும்.சில பாதிப்புகளும் உள்ளன. அவற்றைப் பற்றி இங்கு காணலாம். 1. செயற்கை இனிப்புகள் இவை இயற்கை சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது.இவை  மூலிகைகள் அல்லது சர்க்கரை உள்ளிட்ட இயற்கையாகவே உருவாகும் பொருட்களிலிருந்து பெறப்படலாம். ஆனால் இவற்றில் இனிப்பு சுவை மிகவும் அதிகமாக காணப்படுகிறது. அசெசல்பேம் பொட்டாசியம், அஸ்பார்டேம், சாக்கரின், சுக்ரோலோஸ், உயர் பிரக்டோஸ் சோளம் …

நாம் தவிர்க்கவேண்டிய 10 செயற்கை மூலப்பொருட்கள் Read More »

பிளாஸ்டிக் பொருட்களை நாம் கைவிடாவிட்டால் என்ன ஆகும்?

பிளாஸ்டிக் பொருட்கள் எளிதில் மட்கும் தன்மை அற்றவை ஆகும்.ஒரே ஒரு பிளாஸ்டிக் பையானது மட்குவதற்கு பல ஆண்டுகளாகும். மண்ணின் திறன் அமைப்பிற்கும் மண்ணின் சத்துக்களுக்கும் பிளாஸ்டிக்கானது கெடுதல் புரிகின்றது. சிற்றூர் தொடங்கி பெருநகரம் வரை அனைத்து இடங்களிலும்  பிளாஸ்டிக் மாசுபடுத்தி நாட்டின் மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பிளாஸ்டிக் என்பது நம்முடைய புவி சூழலை அழிக்கும் பொருட்களில் ஒன்றானது. பிளாஸ்டிக் பைகளே நமது அன்றாட வாழ்வில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளாய் இன்று மிகப்பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை …

பிளாஸ்டிக் பொருட்களை நாம் கைவிடாவிட்டால் என்ன ஆகும்? Read More »

நிகோடின் தான் உங்களை மீண்டும் மீண்டும் அதை செய்ய சொல்கின்றது

சிகரெட்டில் நிகோடின் என்ற நஞ்சு இருக்கிறது. அந்த நஞ்சு நரம்புகளில் பாய்ந்து நரம்பு மண்டலத்தை சேதப்படுத்துவது மட்டுமின்றி, மீண்டும் மீண்டும் புகை பிடிக்கும் எண்ணத்தைத் தூண்டுகிறது. கன்னக் கதுப்புகளில், உதடுகளில், ஈறுகளில் அந்த ரசாயனம் தாக்கும்போது ஒரு விறுவிறுப்பு ஏற்படுகிறது. இதனால் ஒரு குணமாற்றம் ஏற்படுகிறது. சிகரெட் புகையை இழுத்து நுரையீரலில் தேக்கும்போது அங்கிருந்து, அந்த நச்சுப்பொருள் உடம்பிலுள்ள எல்லா ரத்த அணுக்களுக்கும் பரவி, எல்லா இடங்களிலும் ஒரு அமைதி உணரப்படும். கண்களுக்கு ஒரு கிறக்கமான நிலைமை …

நிகோடின் தான் உங்களை மீண்டும் மீண்டும் அதை செய்ய சொல்கின்றது Read More »

பூச்சி கொல்லி விஷத்தின் பெயர்கள்

பூச்சி கொல்லி என்பது மனிதனுக்கும், பயிர்களுக்கும் பாதகமான பூச்சிகளை அழித்தல், தடுத்தல், விரட்டுதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்ட ஏதாவதொரு பொருளையோ பொருள்களின் கலவையையோ குறிக்கும். பூச்சிக்கொல்லிகள், பூச்சிகளின் வளர்ச்சிக் கட்டங்களின் பல மட்டங்களில் அவற்றைத் தாக்குகின்றன. எடுத்துக்காட்டாகச் சில பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளின் முட்டைகளையோ, அவற்றின் லார்வாக்களையோ அழிக்க வல்லவை.இவை வேளாண்மையிலும் மருத்துவத்திலும் தொழிலகத்திலும் பயன்படுகின்றன. இவை இருபதாம் நூற்றாண்டின் வேளாண் விளைச்சலைப் பெருக வழிவகுத்துள்ளன பூச்சிக் கொல்லிகளுள் பல விவசாயத்தில் பயன்படும் வேதிப் பொருள்களாகும். இவை சுற்றுச் …

பூச்சி கொல்லி விஷத்தின் பெயர்கள் Read More »

மினரல் வாட்டர் (சுத்திகரிக்கப்பட்ட நீர்) நமக்கு நல்லதா?

சுத்திகரிக்கப்படும் தண்ணீரில் தாதுக்கள் பெரும்பாலும் நீக்கப்பட்டு விடுகின்றன. ஒவ்வொரு முறையும் தண்ணீரை சுத்திகரிக்கும்போதும் விடுபட்ட தாதுக்களுக்காக மீண்டும் தாதுக்களைச் சேர்க்க வேண்டும். கேன்களில் தண்ணீர் நிரப்பும்போது கேன்கள் முறையாகச் சுத்தம் செய்யப்பட வேண்டும்.தண்ணீரில் உள்ள தாதுக்கள் நீக்கப்பட்ட நிலையில் இருக்கும் தண்ணீர் குடிக்கத் தகுந்தது அல்ல. அது உடல் நலத்துக்கு கேடு. இதலால் நுரையீரல் கோளாறு, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எனப் பல பிரச்னைகள் மனிதர்களுக்கு வரும் வாய்ப்பு அதிகம். மேலும் பிளாஸ்டிக் கேனின் உள்ளே இருக்கக்கூடிய …

மினரல் வாட்டர் (சுத்திகரிக்கப்பட்ட நீர்) நமக்கு நல்லதா? Read More »

சர்க்கரை ஒரு உயிர் கொல்லி

சர்க்கரை சத்து நமது உடலுக்கு மிகவும் தேவை.ஆனால் அவற்றை நமது உணவிலிருந்து உடலே தயாரித்துக் கொள்ளும்.மேலும் இந்த செயலுக்கு இன்சுலின் மிகவும் முக்கியமானதாகும். இந்த இன்சுலின் சுரக்கப்படும் அளவை நாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ எடுத்துக் கொள்ளும் சர்க்கரை பாதிக்கிறது என்பதை பின்வரும் காணொளியில் காணுங்கள்.

துரித உணவின் மறுபக்கம்

தேசிய சத்துணவுக் கழகம் புரதம், விட்டமின் , கனிச் சத்துக்கள் மிகக்குறைந்த அளவு அல்லது அறவே இல்லாத மிகுந்த உப்பும் , கொழுப்பும் கொண்ட உணவுகள் துரித உணவுகள் என்று வரையறைத்துள்ளது. பெரும் இலாபம் இதில் கிடைப்பதால் மக்களின் உடல்நலத்தைப் பற்றியோ அக்கறை காட்டுவது இல்லை.அவர்களின் நோக்கம் மிகச்சுவையான உணவு தயாரித்து இலாபத்தை ஈட்டுவது. துரித உணவில் கலக்கப்படும் இரசாயணப் பொருட்கள் துரித உணவு மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைககளிலும் உள்ள இரசாயன உப்பு எவ்வளவு …

துரித உணவின் மறுபக்கம் Read More »

பல்பொருள் அங்காடி (சூப்பர் மார்க்கெட்) வியூகம் – யோசிக்க

நமது ஊரில் பல்பொருள் அங்காடி என்று சொல்லக் கூடிய சூப்பர் மார்க்கெட் தெருவுக்கு தெரு வந்து விட்டது. அதில் கடை வைத்த அத்தனை பேரும் வெற்றி பெருகின்றர்களா? அத்தனை பேரும் லாபத்துடன் தொழில் பண்ணுகிறார்களா? ஆம் என்று உறுதியாக கூறிவிட முடியாது. ஏன் ஒரு சில கடைகள் மட்டும் பிரபலமடைகிறது? அதற்கான பல காரணங்களில் ஒரு தந்திரத்தைக் கீழ்வரும் காணொளியில் காணுங்கள் மற்றும் உங்களது பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு வாங்கி அவர்களின் எதிர்பார்ப்பிலிருந்து முடிந்தால் தப்பித்துக் கொள்ளுங்கள்.

குளிர் பானத்தில் இருக்கும் சர்க்கரை அளவு எவ்வளவு தெரியுமா?

கொக்ககோலா,மிரண்டா,பெப்சி,மௌன்டைன் டியு போன்று ஏராளமான குளிர்பானங்கள் இந்த நாட்களில் மக்கள் பருகுகிறார்கள்.அவற்றில் சர்க்கரை ஒரு மூலப்பொருள் ஆகும். மேலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த சர்க்கரை எவ்வளவு போடுகிறார்கள் என்று புட்டிகளில் குறிப்பிடவும் செய்கிறார்கள். ஆனால் நாம் தான் கவனிப்பதில்லை.பின்வரும் காணொளியில் இவற்றிலுள்ள சர்க்கரை அளவு பற்றி தெரிந்து கொண்டு, அதற்கு மாற்றாக இயற்கை பானங்களை அருந்தலாம்.

இயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி ஐயா நம்மாழ்வார் உரை

விவசாயத்தில் பயிர்களைச் சேதப்படுத்தி தீமை விளைவிக்கும் பூச்சிகளை அழித்து நன்மை தரும் பூச்சிகள் இயற்கையாகவே ஒவ்வொரு வயலிலும் உள்ளன. எடுத்துக்காட்டாக கிரைசோபா,முட்டை ஒட்டுண்ணிகளான டிரைக்கோகிரம்மா டெலிநாமஸ், டெட்ராஸ்டிக்ஸ் வகை ஒட்டுண்ணிகள்,அன்சிர்டிட்ஸ் முட்டைப் புழு ஒட்டுண்ணி,செலானஸ்குளவி, நீளக்கொம்பு வெட்டுக்கிளிளவி,பிகோனிட் குளவி,டாகினிட் ஈ,பொறி வண்டு,சிலந்திகள் போன்ற நன்மை தரும் பூச்சிகளை விவசாயிகள் அடையாளம் கண்டு, அதை அழிக்காமலிருக்க செயற்கை பூச்சிக்கொல்லி மருந்தின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். தீமை செய்யும் பூச்சிகளை அழிக்க நாம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் நன்மை தரும் பூச்சிகளும் …

இயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி ஐயா நம்மாழ்வார் உரை Read More »