பழச்சாறு

புளித்த ஏப்பம், அஜிரணம், அசிடிட்டியை உடனடியாக போக்கும் சுவையான புதினா லெமோனெட் ஜூஸ் | Mint Juice

புளித்த ஏப்பம்

புளித்த ஏப்பம், அஜீரணக்கோளாறு, செரிமான பிரச்சனை போன்ற பாதிப்புகளும், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் தீரவும்.  நன்கு பசி எடுக்காத அவர்களுக்கு பசியைத் தூண்டுவதற்கும் இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். கீழே உள்ள படத்தை கிளிக் செய்து காணொலியை பாருங்கள் பயன் பெறுங்கள்

உணவே மருந்து – நம்மாழ்வார்

நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒரு உணவுப் பழக்கத்தை கொள்வதன் மூலம் பல நோய்களை தவிர்க்கலாம்.நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இயற்கையான உணவு பொருட்களை உண்டு நாளடைவில் படிப்படியாக நோயிலிருந்து விடுபடலாம். எடுத்துக்காட்டாக சர்க்கரை வியாதிக்கு ஆவாரம்,துளசி மற்றும் சிறுநீரக பிரச்சினைகளுக்கு நெருஞ்சி என நமது உணவே மருந்து என்று ஐயா நம்மாழ்வார் திருகுறளுடனும்,பழங்கால பாடல் வரிகளுடனும் எடுத்துரைப்பதை கீழ்வரும் காணொளியில் காணலாம்.

குளிர் பானத்தில் இருக்கும் சர்க்கரை அளவு எவ்வளவு தெரியுமா?

கொக்ககோலா,மிரண்டா,பெப்சி,மௌன்டைன் டியு போன்று ஏராளமான குளிர்பானங்கள் இந்த நாட்களில் மக்கள் பருகுகிறார்கள்.அவற்றில் சர்க்கரை ஒரு மூலப்பொருள் ஆகும். மேலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த சர்க்கரை எவ்வளவு போடுகிறார்கள் என்று புட்டிகளில் குறிப்பிடவும் செய்கிறார்கள். ஆனால் நாம் தான் கவனிப்பதில்லை.பின்வரும் காணொளியில் இவற்றிலுள்ள சர்க்கரை அளவு பற்றி தெரிந்து கொண்டு, அதற்கு மாற்றாக இயற்கை பானங்களை அருந்தலாம்.

நெல்லிக்காய் சாறு

வைட்டமின் சி பற்றாக்குறையால் ஏற்படும் நோய் தான் ஸ்கர்வி. இதனால் நாம் சோர்வாக, ஒரு மந்தமான நிலையில் இருப்போம். இது நமது உடலின் எலும்பு மற்றும் தசைகளின் வலிமையை பாதித்து ஒட்டு மொத்த நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைத்து விடுகிறது. மேலும் இதன் பற்றாக்குறையால் அதிக இரத்த அழுத்தம், பித்தப்பை பிரச்சினைகள், பக்கவாதம், சில வகை புற்றுநோய்கள், பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சினைகளும் நம் உடலில் ஏற்படுகின்றன. எனவே, அனைவருக்கும் ஏற்றதாகவும்,விலை குறைவாகவும் வைட்டமின் சி அதிகமாகவும் …

நெல்லிக்காய் சாறு Read More »

நெல்லிக்காயின் விலை குறைவு, சத்துக்கள் அதிகம்

நமது உடலுக்கு தேவையான சத்துக்களில் வைட்டமின் சி மிகவும் முக்கியமானது.கொய்யா,குடை மிளகாய்,கிவிப்பழம்,ப்ராக்கோலி, லிச்சி,பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி ,ஆரஞ்சு,எலுமிச்சை,சாத்துக்குடி,அன்னாச்சிப்பழம்,மாம்பழம் முதலியன வைட்டமின் சி நிறைந்த பழங்கள் ஆகும். ஆனால்,பணக்காரர்களை போல் இவற்றை ஏழை மக்கள் தொடர்ச்சியாக வாங்கி உண்பது என்பது இயலாத ஒன்றாகிறது.எனவே, அனைவருக்கும் ஏற்றதாகவும்,விலை குறைவாகவும் வைட்டமின் சி அதிகமாகவும் உள்ள நெல்லிக்காயின் பயன்களையும்,எந்தெந்த நோய்களை குணமாக்குகிறது என்றும் பின்வரும் காணொளியில் காணலாம்.