நோய்களும் காரணங்களும்

தாய்ப்பாலுக்கு நிகரான சத்து இளநீரில் உள்ளது

குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே அவர்களின் உணவாகும். அதில் மனிதர்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது.இதைப் போலவே இளநீரிலும் ஏராளமான புரதம், கொழுப்பு, பொட்டாசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கலோரி, கால்சியம், இரும்புசத்து, தயமின், ரிபோபிளேவின், நியாசின்,மக்னீசியம்,மாங்கனீசு, வளர்ச்சியை ஊக்குவிக்கும் கரிமப்பொருட்கள் போன்றவை மிகுந்து உள்ளன. இளநீரின் மருத்துவ குணம் மாறாமல் இருக்க வேண்டுமென்றால் அதை வெட்டிய அரை மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். இத்தகைய தன்மைகளை கொண்ட இளநீரின் நோய் தீர்க்கும் …

தாய்ப்பாலுக்கு நிகரான சத்து இளநீரில் உள்ளது Read More »

குளிர் பானத்தில் இருக்கும் சர்க்கரை அளவு எவ்வளவு தெரியுமா?

கொக்ககோலா,மிரண்டா,பெப்சி,மௌன்டைன் டியு போன்று ஏராளமான குளிர்பானங்கள் இந்த நாட்களில் மக்கள் பருகுகிறார்கள்.அவற்றில் சர்க்கரை ஒரு மூலப்பொருள் ஆகும். மேலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த சர்க்கரை எவ்வளவு போடுகிறார்கள் என்று புட்டிகளில் குறிப்பிடவும் செய்கிறார்கள். ஆனால் நாம் தான் கவனிப்பதில்லை.பின்வரும் காணொளியில் இவற்றிலுள்ள சர்க்கரை அளவு பற்றி தெரிந்து கொண்டு, அதற்கு மாற்றாக இயற்கை பானங்களை அருந்தலாம்.

வெள்ளை சர்க்கரை எப்படி செய்கின்றனர்?

லட்டு,ஆப்பிள் ஹல்வா, சர்க்கரை பொங்கல், எள்ளு உருண்டை, கோதுமை மாவு கேசரி, பரங்கிகாய் வெல்லம் ஹல்வா, ஜவ்வரிசி பருப்பு பாயாசம், கேரட் சேமியா பாயாசம், ஜவ்வரிசி கொழுக்கட்டை, கல்கண்டு (சர்க்கரை மிட்டாய்) பொங்கல், கோதுமை ரவா இனிப்பு பொங்கல், உருளைக்கிழங்கு பாயாசம் என அனைத்து இனிப்பு வகைகளை நினைத்தவுடன் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும்.பழங்காலத்தில் இவற்றில் இனிப்பு சுவைக்காக வெல்லத்தையும், பனை வெல்லத்தையும், தேனையும் தான் உபயோகித்தார்கள். ஆனால் தற்பொழுது வெள்ளை சர்க்கரையை பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்.இதனை …

வெள்ளை சர்க்கரை எப்படி செய்கின்றனர்? Read More »

நெல்லிக்காய் சாறு

வைட்டமின் சி பற்றாக்குறையால் ஏற்படும் நோய் தான் ஸ்கர்வி. இதனால் நாம் சோர்வாக, ஒரு மந்தமான நிலையில் இருப்போம். இது நமது உடலின் எலும்பு மற்றும் தசைகளின் வலிமையை பாதித்து ஒட்டு மொத்த நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைத்து விடுகிறது. மேலும் இதன் பற்றாக்குறையால் அதிக இரத்த அழுத்தம், பித்தப்பை பிரச்சினைகள், பக்கவாதம், சில வகை புற்றுநோய்கள், பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சினைகளும் நம் உடலில் ஏற்படுகின்றன. எனவே, அனைவருக்கும் ஏற்றதாகவும்,விலை குறைவாகவும் வைட்டமின் சி அதிகமாகவும் …

நெல்லிக்காய் சாறு Read More »

செல்போன் கதிர்வீச்சி ல் இருந்து தப்பிக்க முடியுமா?

நமது வாழ்வின் இன்றியமையாத பொருளாக கைப்பேசி மாறிவிட்டது.அதிலிருந்து வெளியிடப்படும் கதிர்வீச்சானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் நோய் எதிப்புத் திறனிற்கு ஏற்ப பாதிக்கிறது. நமது அன்றாட வாழ்வில் நிறைய பொருட்களில் இருந்து கதிர்வீச்சு வெளிப்படுகிறது. இதனை தடுப்பது என்பது இயலாத காரியம்.எனவே, இதன் பாதிப்புகளையும்,நம்மை நாமே எவ்வாறு பாதுகாத்து கொள்ளலாம் எனவும் கீழே வரும் காணொளியில் கண்டு தெரிந்து கொள்ளலாம்.  

மாரடைப்பு காரணமும் தீர்வும்

நம் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு மட்டுமே மாரடைப்பிற்கு காரணம் என்ற கருத்து எங்கும் பரவியுள்ளது. வைட்டமின் A மற்றும் சில வகை வைட்டமின்கள் குறைவதும் காரணம் என்றும், அவை எவ்வாறு என்றும், எந்த வகையான உணவுகளை எடுத்துக் கொண்டால் மாரடைப்புக்கு தீர்வு கிடைக்கும் என்றும் கீழ்வரும் காணொளியில் காணலாம்.  

சுற்றுச்சூழலை பாதிக்கும் மாசுபாடு

சுற்றுசூழல் என்பது நிலம்,நீர் மற்றும் காற்றுடன் சேர்ந்து உயிரினங்களும் ஆகும்.அவற்றை பேணி காப்பது என்பது நமது தலையாய கடமையாகும்.ஆனால் பெரும்பாலும் மனிதனின் செயல்கள் சுற்றுசூழலை பாதிக்குமாறு விளங்குகிறது. ஐம்பூதங்களும் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது மற்றும் அவற்றை சரியாக்க செய்ய வேண்டிய செயல்களை பின்வரும் காணொளியில் கண்டு, முடிந்தவரை நாமும் கடைபிடித்து, நம்மை சுற்றியுள்ளோர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்தலாம். https://youtu.be/u5YCXIzskyI பகிர்ந்து கொள்ளுங்கள்

தலைவலியை ஏற்படுத்தும் முக்கியான 5 காரணங்கள்

தலைவலியின் காரணங்கள் மற்றும் தடுக்கும் முறை தலைவலியை ஏற்படுத்தும் முக்கியான ஐந்து காரணங்களை இப்போது பார்ப்போம்  வலிப்பும் ஒற்றைத் தலைவலியும் மூளையில் திடீரென ஏற்படும் ஒரு  தாக்கமே. ஒற்றைத் தலைவலி இருப்பவர்களுக்கு வலிப்பும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது . தலை வலி ஏற்படுவதன் முக்கிய காரணங்களை இப்பொழுது பார்ப்போம் 1.கண் தொடர்பான நோய்கள் கண் பார்வைக்கும் தலைவலிக்கும் சம்மந்தம் உண்டு ஒளி விலகல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் சிவத்தல், பார்வை குறைபாடு கண்ணில் காயம் ஆகியவற்றால்  கண்வலி …

தலைவலியை ஏற்படுத்தும் முக்கியான 5 காரணங்கள் Read More »

கேழ்வரகு தோசை செய்வது எப்படி ?

கேழ்வரகு (ராகி) சிறுதானியங்களில் ஒன்றாகும்.இதில் புரதம்,நார்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது. இவற்றின் பயன்களில் பற்கள் மற்றும் எலும்புகள் பாதுகாப்பு,உடல் எடை குறைத்தல்,உடல் சூடு குறைத்தல், மன அழுத்தம் சரி செய்தல்,தாய்ப்பால் அதிகரித்தல்,தோல் பராமரிப்பு ஆகியவை அடங்கும். இதனை களி,கூழ்,கஞ்சி என பல்வேறு விதமாக உட்கொள்ளலாம். இந்த காணொளியில் ராகியை பயன்படுத்தி தோசை எவ்வாறு செய்யலாம் என்பதை காணலாம்.

நுரையீரல் பாதிப்புக்களை தவிர்க்கும் முறைகள்

நாம் உண்ணும் உணவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். இவை நம் உடலில் வளர்சிதை மாற்றத்திற்கு உட்பட்டு நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. இந்த செயலின் பொழுது உருவாகும் கார்பன் டை ஆச்சைடை வெளியேற்றவும், இதற்கு தேவையான ஆக்சிஜனை உள்ளிழுக்கவும் நுரையீரல் பயன்படுகிறது. நுரையீரல் இந்த செயலை ஆற்ற தேவையான வைட்டமின் c நிறைந்த நெல்லிக்கனி பற்றி பின்வரும் காணொளியில் காணலாம்.