இன்றே புகை பிடிப்பதை விட்டுவிடுங்கள் இல்லையேல்
புகையிலை உடல்நலத்தைக் கடுமையாகப் பாதிப்பதால் வளர்ந்துவரும் புகையிலைப் பயன்பாடு உலகம் முழுவதும் கவலையோடு கவனிக்கப்படுகிறது. இந்த புகையிலைப் பயன்பாட்டுடன் தொடர்புடைய குருதியோட்டக்குறை இருதய நோய்கள், புற்றுநோய்கள், நீரிழிவு, கடுமையான சுவாச நோய்கள் ஆகிய பரவா நோய்கள் உலகம் முழுவதும் அதிக மரணத்துக்குக் காரணமாக உள்ளன. அனைத்து வயதினரையும் பாதிக்கும் பல நோய்களுக்கு புகையிலையே முக்கியமான ஆபத்துக் காரணி. புகையிலையில் 5000 நச்சுப்பொருட்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானதும் ஆபத்தானதுமானவை பின்வருமாறு 1) நிக்கோட்டின் புகையிலையின் விளைவுகளுக்கு முக்கிய காரணம் அதில் …