உணவே மருந்து

இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு

எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின ஈ, இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து உள்ளது.அதனால் நாம் அடிக்கடி எள்ளை உட்கொள்வதினால் ஏற்படுத் நன்மைகளை காண்போம்.கொள்ளுவில் அதிகளவு இரும்பு மற்ற பருப்புகளை விட அதிகமாக உள்ளது. புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. இந்த எள்ளும் கொள்ளும் தீர்க்கும் பிரச்சனைகளை பின்வரும் காணொளியில் காணலாம்.

இருமல் சளியை உடலில் இருந்து வெளியேற்றுவது எப்படி?

நாம் பல மருந்தக் கடைகளில் இருமலைப் போக்க மாத்திரைகளை வாங்கி இருப்போம்.ஆனால் நாம் தான் இருமல் அதிகரிக்க உதவி புரிய வேண்டும் எனவும் அதற்கு எளிதில் கிடைக்கக் கூடிய சின்ன வெங்காயம், துளசி, கற்பூரவள்ளி,மிளகு,முட்டைகோஸ்,தூதுவளை முதலிய பொருட்கள் தான் பயன்படுகின்றன எனவும் கீழ்வரும் காணொளியில் கண்டு சளியை விரட்டுங்கள்.

உணவே மருந்து – நம்மாழ்வார்

நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒரு உணவுப் பழக்கத்தை கொள்வதன் மூலம் பல நோய்களை தவிர்க்கலாம்.நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இயற்கையான உணவு பொருட்களை உண்டு நாளடைவில் படிப்படியாக நோயிலிருந்து விடுபடலாம். எடுத்துக்காட்டாக சர்க்கரை வியாதிக்கு ஆவாரம்,துளசி மற்றும் சிறுநீரக பிரச்சினைகளுக்கு நெருஞ்சி என நமது உணவே மருந்து என்று ஐயா நம்மாழ்வார் திருகுறளுடனும்,பழங்கால பாடல் வரிகளுடனும் எடுத்துரைப்பதை கீழ்வரும் காணொளியில் காணலாம்.

தாய்ப்பாலுக்கு நிகரான சத்து இளநீரில் உள்ளது

குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே அவர்களின் உணவாகும். அதில் மனிதர்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது.இதைப் போலவே இளநீரிலும் ஏராளமான புரதம், கொழுப்பு, பொட்டாசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கலோரி, கால்சியம், இரும்புசத்து, தயமின், ரிபோபிளேவின், நியாசின்,மக்னீசியம்,மாங்கனீசு, வளர்ச்சியை ஊக்குவிக்கும் கரிமப்பொருட்கள் போன்றவை மிகுந்து உள்ளன. இளநீரின் மருத்துவ குணம் மாறாமல் இருக்க வேண்டுமென்றால் அதை வெட்டிய அரை மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். இத்தகைய தன்மைகளை கொண்ட இளநீரின் நோய் தீர்க்கும் …

தாய்ப்பாலுக்கு நிகரான சத்து இளநீரில் உள்ளது Read More »

குளிர் பானத்தில் இருக்கும் சர்க்கரை அளவு எவ்வளவு தெரியுமா?

கொக்ககோலா,மிரண்டா,பெப்சி,மௌன்டைன் டியு போன்று ஏராளமான குளிர்பானங்கள் இந்த நாட்களில் மக்கள் பருகுகிறார்கள்.அவற்றில் சர்க்கரை ஒரு மூலப்பொருள் ஆகும். மேலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த சர்க்கரை எவ்வளவு போடுகிறார்கள் என்று புட்டிகளில் குறிப்பிடவும் செய்கிறார்கள். ஆனால் நாம் தான் கவனிப்பதில்லை.பின்வரும் காணொளியில் இவற்றிலுள்ள சர்க்கரை அளவு பற்றி தெரிந்து கொண்டு, அதற்கு மாற்றாக இயற்கை பானங்களை அருந்தலாம்.

நெல்லிக்காய் சாறு

வைட்டமின் சி பற்றாக்குறையால் ஏற்படும் நோய் தான் ஸ்கர்வி. இதனால் நாம் சோர்வாக, ஒரு மந்தமான நிலையில் இருப்போம். இது நமது உடலின் எலும்பு மற்றும் தசைகளின் வலிமையை பாதித்து ஒட்டு மொத்த நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைத்து விடுகிறது. மேலும் இதன் பற்றாக்குறையால் அதிக இரத்த அழுத்தம், பித்தப்பை பிரச்சினைகள், பக்கவாதம், சில வகை புற்றுநோய்கள், பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சினைகளும் நம் உடலில் ஏற்படுகின்றன. எனவே, அனைவருக்கும் ஏற்றதாகவும்,விலை குறைவாகவும் வைட்டமின் சி அதிகமாகவும் …

நெல்லிக்காய் சாறு Read More »

நெல்லிக்காயின் விலை குறைவு, சத்துக்கள் அதிகம்

நமது உடலுக்கு தேவையான சத்துக்களில் வைட்டமின் சி மிகவும் முக்கியமானது.கொய்யா,குடை மிளகாய்,கிவிப்பழம்,ப்ராக்கோலி, லிச்சி,பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி ,ஆரஞ்சு,எலுமிச்சை,சாத்துக்குடி,அன்னாச்சிப்பழம்,மாம்பழம் முதலியன வைட்டமின் சி நிறைந்த பழங்கள் ஆகும். ஆனால்,பணக்காரர்களை போல் இவற்றை ஏழை மக்கள் தொடர்ச்சியாக வாங்கி உண்பது என்பது இயலாத ஒன்றாகிறது.எனவே, அனைவருக்கும் ஏற்றதாகவும்,விலை குறைவாகவும் வைட்டமின் சி அதிகமாகவும் உள்ள நெல்லிக்காயின் பயன்களையும்,எந்தெந்த நோய்களை குணமாக்குகிறது என்றும் பின்வரும் காணொளியில் காணலாம்.

இதை பின்பற்றி பாருங்கள்

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழிக்க வேண்டும் கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும். காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். மலம் கழிக்க வேண்டும். கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். காலை, மாலை இருவேளை குளிக்க வேண்டும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும். உள்ளாடைகள் கிழியாவிட்டாலும் 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். ஒவ்வொரு நாளும் உள்ளாடையை …

இதை பின்பற்றி பாருங்கள் Read More »

தினமும் மாதுளை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

தினசரி உணவில் பழங்களை எடுத்து கொள்வது என்பது மிகவும் பயனுள்ள செயலாக கருதப்படுகிறது.அனைத்து பழங்களும் நமது உடலுக்கு தேவையான நிறைய சத்துக்களை கொண்டுள்ளது. கீழ்வரும் காணொளியில் அதிக நார்சத்து மற்றும் வைட்டமின்கள் அடங்கிய மாதுளையின் பயன்களை தெரிந்து கொண்டு, நமது ஆரோக்கியமான வாழ்விற்கு வித்திடுவோம் வாருங்கள்  

எவ்வளவு குண்டாக இருந்தாலும் ஒல்லியாகி விடலாம்

உடல் எடை குறியீட்டு எண்ணின் (BMI) அடிப்படையில், நமது உயரத்திற்கு தகுந்த எடையை விட அதிகமாக இருப்பவர்கள் குண்டாக இருப்பதாக கருதப்படுகிறார்கள். அதிக உடல் எடை நமது தோற்றத்தையும், ஆரோகியத்தையும் படிப்படியாக இழக்க செய்கிறது.எண்ணெயில் பொறித்த உணவுகள்,பால் சார்ந்த பொருட்கள் மற்றும் இனிப்புகளை தவிர்த்து இயற்கையான காய்கறிகள்,கனிகளை எடுத்துக் கொண்டால் எளிதில் நாம் சரியான உடல் எடையை பெறலாம். கீழ்வரும் காணொளியில் வெள்ளரி,புதினா,எலுமிச்சை,இஞ்சி,பனை வெல்லம் போன்ற எளிதில் கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி எடையைக் குறைக்கும் பானத்தை …

எவ்வளவு குண்டாக இருந்தாலும் ஒல்லியாகி விடலாம் Read More »