உணவே மருந்து

சளி இருமலுக்கு இந்த குழம்பு போதும்

இப்பொழுதெல்லாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி இருமலுக்கு மாத்திரைகளையே எடுத்துக் கொள்கிறார்கள்.ஆனால் வீட்டிலேயே மிக எளிதில் கிடைக்க கூடிய பொருட்களான மிளகு,வெந்தயம்,   அரிசி,சீரகம்,பெருங்காயம்,சின்ன வெங்காயம்,பூண்டு,துவரை,உளுந்து,கொத்த மல்லி ஆகியவற்றை பயன்படுத்தி குழம்பு தயாரித்து சளியைக் குணப்படுத்த பின்வரும் காணொளியைக் காணுங்கள்.  

உடனே தொப்பை குறைய எளிய வைத்தியம்

அதிக சர்க்கரை,ஆல்கஹால்,எபோதும் சாப்பிடுவது,பல மணி நேரம் உட்கார்து வேலை பார்ப்பது,புரத குறைபாடு,ஈஸ்டிரோஜன் ஹார்மோன் அளவு குறைவது போன்றவை தொப்பை உருவாக காரணங்கள் ஆகும்.எனவே தொப்பையை குறைக்க நார்சத்து மற்றும் புரதம் உணவினை அதிகம் எடுப்பது, அதிக கொழுப்புகள் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்ப்பது, மது பழக்கத்தை கைவிடுவது, ஏரோபிக் வகையான உடற்பயிற்சியும், யோகாவும் வயிறு பருமன் குறைய வெகுவாய் உதவுகின்றது.கீழ்வரும் காணொளியில் நார்ச்சத்து நிறைந்த முருங்கை கீரையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று காணுங்கள்.

அத்தி பழத்தை தினமும் சாப்பிட்டு பாருங்கள்

கடும் வெப்பம் மற்றும் குளிர் நாடுகளை தவிர சீதோஷ்ண நிலை கொண்ட ஆசியாவில் அத்தி மரங்கள் வளர்க்கப்படுகின்றன. அத்திப் பழங்கள் அப்படியே சாப்பிடுவதற்கு ஏற்றது. ஆனால் புதிய பழங்களை எடுக்கும் பொழுது பெரும்பாலும் பூச்சிகள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே நன்றாக சோதனை செய்து உபயோகிக்கலாம்.தற்காலத்தில் இவை அனைத்து பகுதிகளிலும் பதப்படுத்தபட்ட நிலையிலும் பயன்படுத்துகிறார்கள். இந்த பழத்தில் நார்ச்சத்து,குறைந்த கலோரிகள்,பொட்டாசியம், மாங்கனீசு,புரதம் கால்சியம்,வைட்டமின் பி6,A,C. எனவே அத்தி பழத்தை தினமும் சாப்பிட்டு கிடைக்கும் நலன்களை பின்வரும் காணொளியில் காணலாம்.

உலர்ந்த திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் 8 முக்கிய நன்மைகள்

பழங்கள் பொதுவாகவே ஆரோக்கியமானவை தான். அதில் திராட்சையை எடுத்துக் கொண்டால், கருப்பு திராட்சை உடலிலுள்ள யூரிக் அமில அளவைக் குறைக்கிறது, கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்,செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.எளிதில் கிடைக்கும் பொழுது திராட்சையை எடுத்துக் கொள்ளலாம். மேலும் அவற்றை உலர் திராட்சையாகவும் பயன்படுத்தலாம். புதிய பழங்களிலிருந்து உலர்ந்தவைக்கு முக்கிய வேறுபாடு அதிக கலோரி மற்றும் அதிக சர்க்கரை உள்ளடக்கம் ஆகும்.எடுத்துக்காட்டாக ஒரு கிண்ண திராட்சை 30 கலோரிகள்களையும் அதே அளவு உலர் திராட்சையில் 250 கலோரிகள் உள்ளன.ஆனால் …

உலர்ந்த திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் 8 முக்கிய நன்மைகள் Read More »

முருங்கையின் 8 முக்கிய நன்மைகள்

முருங்கையின் 8 நன்மைகள் பண்டைய காலங்களிலிருந்து முருங்கை மருத்துவ குணங்கள் மற்றும் பல்வேறு சுகாதார நன்மைகளுக்காக பயன்படுகிறது. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்த மரம் இன்று ஆசியா முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. இது ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் சில இடங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதன் இலைகள் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் தாவர அடிப்படையிலான புரதங்களை கொண்டுள்ளது . இந்த தாவர சாற்றில் காணப்படும் சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வைட்டமின் ஏ, பி வைட்டமின்கள், தியாமின், ரைபோஃப்ளேவின் …

முருங்கையின் 8 முக்கிய நன்மைகள் Read More »

கத்தரிக்காயின் 6 முக்கிய நன்மைகள்.

கத்தரிக்காயின்   6 முக்கிய நன்மைகள். காய்கள்  பல  நோய்கள்  தீர இதய ஆரோக்கியம் கத்தரிக்காய்களில் உள்ள ஃபைபர், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி 6 மற்றும் பைட்டோநியூட்ரியண்ட் இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கின்றன . இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை ஊக்குவிக்க உங்கள் உணவில் கத்தரிக்காய்களைச் சேர்ப்பது உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். கத்தரிக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது செரிமான அமைப்பை அப்படியே கடந்து செல்கிறது  நார்ச்சத்து செரிமான விகிதத்தை குறைப்பதன் …

கத்தரிக்காயின் 6 முக்கிய நன்மைகள். Read More »

துரித உணவு என்றால் என்ன?

துரித உணவு என்றால் என்ன? புரதம் , கனிமச் சத்துக்கள் , விட்டமின் மிகக்குறைந்த அளவு அல்லது அறவே இல்லாத மிகுந்த உப்பும் , கொழுப்பும் கொண்ட உணவுகள் துரித உணவுகள் துரித உணவு அறிமுகம் ஏன்? துரித உணவுகளினால் தான் தொற்றுநோய் அல்லாத நீரழிவு, இருதய நோய்கள், புற்று நோய்கள், பற்களில் வரும் நோய்கள், எலும்பு மற்றும் மூட்டுக்களில் வரும் நோய்கள், நாளமில்லாச் சுரப்பிகளில் வரும் நோய்கள் (முன்கழுத்து கழலை, தைராயிட்) போன்றவை வருகின்றன மருத்துவத்தின் …

துரித உணவு என்றால் என்ன? Read More »

துரித உணவும் ,உலக அரசியலும், உலகமயமாக்கல் கொள்கையும்! LPG

துரித உணவும் ,உலக அரசியலும், உலகமயமாக்கல் கொள்கையும்! LPG உலகம் முழுவதும் உள்ள மக்களின் குறிப்பாக நமது மக்களின் பாரம்பரிய உணவுப் பழக்கத்தை மாற்றி அமைத்து மேலை நாடுகளின் பன்னாட்டு துரித உணவுக் கம்பனிகள் துரித உணவு வகைகளை அறிமுகப்படுத்தி நம் மக்களை அந்த உணவுகளுக்கு அடிமைகளாக மாற்றி வருகின்றன.இதன்மூலம் ஒவ்வொரு பகுதியிலும் உற்பத்தி செய்யப்பட்ட தனிச்சுவையுடன் கூடிய உணவுவகைகள் அழிக்கப்பட்டு ஒரே மாதிரியான உணவு வகைகள் மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகின்றன. இந்த துரித உணவுகளில் …

துரித உணவும் ,உலக அரசியலும், உலகமயமாக்கல் கொள்கையும்! LPG Read More »

துரித உணவின் ஆபத்து என்ன?

துரித உணவின் ஆபத்து என்ன? பரோட்டோ, நூடில்ஸ், பன், சமோசா,பீசா,குல்சா,பர்கர் போன்றவற்றில் நார்ச்சத்து என்பது இருக்காது. மேலும் துரித உணகளில் சேர்க்கப்படும் சாயம் மற்றும் அஜினோமோட்டோ போன்ற வேதிப் பொருட்கள் நமது குடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் கொலஸ்ட்ரால் கூடுவதற்கும் காரணமாக இருக்கிறது. ஏற்படும் தீமைகள் 1. துரித உணவுகள் சாப்பிடுவதாலும், உடற்பயிற்சி செய்யாததாலும் நீரழிவு நோய் ஏற்படும் .இதில் அலட்சியம் காட்டினால் உடலின் மற்ற உறுப்புகள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2. ஞாபக …

துரித உணவின் ஆபத்து என்ன? Read More »