உணவே மருந்து

மண்பானை உணவு ரத்தக் குழாய்களைச் சீராக்க உதவும்

நம் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று பொங்கல் கொண்டாட்டத்தில், புத்தாடை உடுத்தி, வாசலில் கோலமிட்டு,  புதிய மண்பானையைக் கொண்டு  புதியதாக விளைந்த அரிசியில் பொங்கலிடுவது வழக்கம். இவ்வாறாக  பொங்கல் திருநாளில் மட்டுமல்லாது முந்தைய தலைமுறை மக்கள் அன்றாட சமையல் பயன்பாட்டில், மண்பாண்டங்கள் முக்கிய இடம் பிடித்தன. முன்பெல்லாம், நாம் சமைக்கிற பாத்திரம் மட்டுமில்லாமல், தண்ணீர் சேமிக்கும் பாத்திரம் முதல் சாப்பிடக்கூடிய தட்டு வரைக்கும் எல்லாமே மண் பாத்திரங்கள்தான். இரும்பு, பித்தளை, வெண்கலம்னு என பலவகையான பாத்திரங்கள் வந்தாலும் அதை …

மண்பானை உணவு ரத்தக் குழாய்களைச் சீராக்க உதவும் Read More »

வைட்டமின் K

நமது உடல் நலமுடன் இருக்க போதுமான ஊட்டச்சத்துகளும் அவசியம். அதில் வைட்டமின்  K போன்ற ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு அத்தியாவசியமான ஒன்று என்கிறார்கள் மருத்துவர்கள். வைட்டமின்  K நீரில் கரையைக் கூடிய ஊட்டச்சத்தாகும். இது இரண்டு வகைகளில் காணப்படுகிறது. ஒன்று K1 மற்றொன்று K2. நமது குடலில் உள்ள பாக்டீரியா மூலம் K1 விட்டமீனை K2 ஆக மாற்றம் செய்யப்படுகிறது.இதை நமது உடல் நிறைய வகைகளில் பயன்படுத்தி கொள்கிறது. வைட்டமின்  K பாக்டீரியாவால் குடலில் இயற்கையாகவும் உற்பத்தி …

வைட்டமின் K Read More »

கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

சராசரியாக ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறதோ அதை விட கர்ப்பகாலத்தில் 350-500 கலோரிகள் அதிகமாக தேவைப்படும். அந்த காலகட்டத்தில் பெண்களுக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் இல்லை என்றால் குழந்தை வளர்ச்சி என்பது பெரும் அளவில் பாதிக்கப்படும். அதே நேரத்தில் அளவுவிற்கு அதிகமாக ஊட்டச்சத்துக்கள் உடல் எடையை மிக அதிகமாக கூட்டி விடும்.இது கர்ப காலத்தில் பெண்களுக்கு பெரும் பிரச்சனையாக அமையும். கர்ப்பிணிகள் உண்ணும் சில உணவுகளில் கருச்சிதைவையோ அல்ல‍து கரு வளர்ச்சியில் பாதிப்பையோ ஏற்படுத்தும். எனவே ஒவ்வொரு …

கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் Read More »

நெல் ரகங்கள் , மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்

நம் முன்னோர்கள் சாகுபடி செய்த பாரம்பரியமிக்க நெல் ரகங்கள் படிப்படியாக மறையத் தொடங்கியதால், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் வளரும் உணவு தானியங்களால், மண் வளம் பாதிக்கப்பட்டு விளை நிலங்கள் பாலைவனங்களாக மாறிவிட்டன, இதை உண்பவர்களும் விதவிதமான நோய்களுடன் உலவி வருகின்றனர். இச்சூழலில் நாம் தற்போது பயன்படுத்திவரும் அரிசி ரகங்களை விட பல மடங்கு புரதச்சத்து, நார்ச்சத்து பாரம்பரிய நெல் ரகங்களில் உள்ளன.அவற்றை பற்றி இங்கு காண்போம். பூங்கார் : கர்பிணிப் பெண்களுக்குப் பூங்கார் அரிசியைக் …

நெல் ரகங்கள் , மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் Read More »

Junk Food அதிகமா சாப்பிடுவது ஆண்மைக்கு ஆபத்து – ஆய்வில் தகவல் | Fast Food Disadvantage

Fast Food Disadvantage : பீட்ஸா, பர்கர், உள்ளிட்ட ஜங்க் புட் எனப்படும் தீனிகளை உட்கொள்ளும் இளைஞர்களின் உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நொறுக்குத் தீனிகளில் உள்ள டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பே இதற்கு காரணம் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது. டிரான்ஸ் பேட் கொழுப்பு: தினசரி உணவில் 2 கிராம் டிரான்ஸ் ஃபேட் போதுமானது. ஆனால் இந்த நொறுக்கு தீனி வகைகளில் அவை கூடுதலாக இருப்பது இளைஞர்களிடம் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் …

Junk Food அதிகமா சாப்பிடுவது ஆண்மைக்கு ஆபத்து – ஆய்வில் தகவல் | Fast Food Disadvantage Read More »

தொற்று நோய்களை விட தொற்றாத நோய்களால் பாதிப்பு அதிகம்( தொற்றாத நோய் கேன்சர் இதய நோய் உடல் பருமன்)

மருத்துவ சோதனையில், ஒரு நோயானது நோயை உருவாக்கும் பண்பு கொண்ட வைரசு, பக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா, மற்றும் பல்கல ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களின் காரணமாக ஏற்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அந்நோய் தொற்றுநோய் என அழைக்கப்படுகிறது. பல தொற்றுநோய்களை முழுமையாக அழித்தும், வேறு பல தொற்றுநோய்களை கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டு வந்ததால், வீழ்ச்சியடைந்து வந்த தொற்றுநோய் இறப்புக்கள், கடந்த 30 ஆண்டு காலத்தில் சூழலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் காரணமாக, புதிய தொற்றுநோய்களாலும், தொற்றுநோய்த் தடுப்புக்கும், தொற்றுநோய்க்கு எதிரான மருந்துகளுக்கும் …

தொற்று நோய்களை விட தொற்றாத நோய்களால் பாதிப்பு அதிகம்( தொற்றாத நோய் கேன்சர் இதய நோய் உடல் பருமன்) Read More »

இரத்த சோகையை சரி செய்யும் பசலைக்கீரை

அனைத்து தாவரங்களும் நிறைய மருத்துவ குணம் கொண்டது. மிகவும் சாதாரணமாக காணப்படும் இந்த வகை தாவரங்கள் மனிதர்களான நமக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் மருந்தாகிறது. பொதுவாக  நாம் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, யானை, குதிரை, ஒட்டகம், மற்றும் சில வளர்ப்பு பிராணிகளுக்கு நோய்கள் வந்தால் கால்நடை மருத்துவரிடம் செல்லுவோம். ஆனால் இந்த மருத்துவம் செல்லும் உயிரினங்கள் வெறும் 3 சதவீதம் மட்டுமே மற்ற 97 சதவீத உயிர்களுக்கான மருதுக்கடை தான் இந்த தாவரங்கள். …

இரத்த சோகையை சரி செய்யும் பசலைக்கீரை Read More »

பனங்கிழங்கை பற்றி 13 முக்கிய தகவல்கள்

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு மூன்று விதைகளை கொண்டிருக்கும். இளசாக இருக்கையில் அதைச் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். ஆனால் முற்றிப் போனால் சாப்பிட முடியாது. இந்த முற்றிய நுங்கினை மண்ணில் புதைத்துவிட, சில நாட்கள் கழித்து அது முளை விட்டு பனை செடியாக வளர ஆரம்பித்துவிடும். அப்படி முளைவிட்ட உடனே  புதைத்த இடத்தில் தோண்டிப் பார்த்தால், நீண்ட குச்சி போல காணப்படுவதுதான் பனங்கிழங்கு. அதை வேரோடு பிடுங்கி வந்து, வேகவைத்து சாப்பிடலாம்.பனம் கிழங்கின் முனை …

பனங்கிழங்கை பற்றி 13 முக்கிய தகவல்கள் Read More »

சிறுநீரக கோளாறு வராமல் இருக்க பினபற்ற வேண்டியவை

சிறுநீரகங்களின் முக்கிய பணி உடலில் தேவைக்கு அதிகமாக சேரும் நீர், உப்புகள், நஞ்சை போன்றவற்றை வடிகட்டி, வெளியேற்றுவது.சிறுநீரில் இருக்கும் தாதுக்கள் மற்றும் அமில உப்புகள் படிவதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன. இந்தக் கற்கள்தான் சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகக் குழாயில் தோன்றுகின்றன. இது நாளடைவில் சிறுநீரக கோளாறை உருவாக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தேவையைவிட குறைவாக சுரக்கும். இதனால் ரத்தத்தில் குளுக்கோசின் அளவு கூடுதலாகிறது. இதை வெளியேற்ற சிறுநீரகங்கள் அதிக வேலை செய்யவேண்டியுள்ளது. இதனால்தான் அவை …

சிறுநீரக கோளாறு வராமல் இருக்க பினபற்ற வேண்டியவை Read More »

பனையின் முக்கிய நன்மைகள்

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரின் பயன்கள் பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது.   இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது. கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது.   இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல …

பனையின் முக்கிய நன்மைகள் Read More »