brain tumor மூளையில் கட்டி
உங்கள் மூளையில் தேவையற்ற செல்களின் அபரிதமான வளர்ச்சியை brain tumor என்று சொல்லப்படுகிறது இது மூளையில் உள்ள மற்றவைகளை வளரவிடாமல் தடுப்பது மிக முக்கியமாக தடையாக இருக்கிறது இது கேன்சரை உருவாக்கும்
மொத்தம் நான்கு வகையாக இதை பிரிக்கின்றனர் முதல்வகை எளிதில் அறுவை சிகிச்சையின் மூலம் இந்த கட்டிகளை அகற்றி விடலாம் , இரண்டாம் வகையும் மூன்றாம் வகையும் மெதுவாக வளர்ந்து அருகில் உள்ள திசுவுக்கு பரவி கொஞ்சம் கொஞ்சமாக brain tumorரை வர வைக்கின்றன ,
நான்காம் வகை மிகவும் சிக்கலானது .
carcinogen எனும் கதிர்வீச்சு புற்றுநோய் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன இந்தக் கதிர்வீச்சு மரபணுவை சேதப்படுத்த கூடியது. செல் வளர்சிதைமாற்ற செயல்முறைகளுக்கு இடையூறாக இருக்கின்றது, காமா கதிர்கள் மற்றும் ஆல்பா துகள்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
புற்றுநோய் வருவதற்கான அறிகுறி களை இப்போது பார்ப்போம் தலைவலி குறிப்பாக அதிகாலையில் அதிகமாக இருக்கும் குமட்டல் அல்லது வாந்தி ,களைப்பு ,சோர்வு, தூக்கமின்மை ,ஞாபக மறதி போன்றவை இதற்கான அறிகுறிகள். அடிக்கடி இந்த பிரச்சனை இருந்தால் உடல் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் நல்லது .
மூளையை இது போன்ற சிக்கல்களில் இருந்து பாதுகாக்க கீழ்கண்ட உணவு முறைகளை பின்பற்றுவது நல்லது மூளைக்கு வைட்டமின்களும் மினரல்களும் தேவைப்படுகின்றன அதாவது பீட்டாகரோட்டின் உணவு செலினியம் உணவு விட்டமின் சி உணவு விட்டமின் ஈ உணவு eicosapentaenoic acid உணவு உதாரணம் கீரைகள் ,கேரட் ,சக்கரை வள்ளி கிழங்கு, பழங்கள் மற்றும் மீன்.
இதை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் மூளை செயல்பாடு நன்றாக இருக்கும்.
மேலும் கதிர் வீச்சு நமது மீது படாத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும்.