பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் 10 நன்மைகள் :
உடல் ஆரோக்கியம் மேம்பட காய்கறிகள் மிகவும் இன்றிமையாத ஒன்று .அதிலும் பீட்ரூட் நம் உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை தரக் கூடியது .பீட்ரூட் இரத்த சோகை மட்டுமில்லாமல் நம் உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு நோய்களையும் குணமாக்கும் மற்றும் வராமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு .
அப்படி, இந்த பீட்ரூட்டில் என்னென்ன சத்துக்கள் உள்ளது ,என்றால் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ,நைட்ரேட் ,கால்சியம் ,காப்பர், செலினியம், ஜிங்க் ,இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கும். பீட்ரூட் இவ்வளவு சத்துக்கள் கொண்டது என்றாலும் அதை பலரும் பெரிதும் விரும்ப மாட்டார்கள் அப்படி சாப்பிட விரும்பாதவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்து வரலாம்.
1.ரத்த ஓட்டம் சீராகும்
பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து குழாய்களில் இரத்த ஓட்டத்தை சீராக்கும் ,இதன் மூலமாக ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
2.புற்றுநோய் வராமல் தடுக்கும்
தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வர இதில் இருக்கும் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு உண்டாவதற்கான காரணிகளையும் அழிக்கும்.
3. ரத்தசோகை குணமாகும்
மிக முக்கியமாக உடலின் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.பீட்ரூட்டில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கத் தேவையான இரும்புச்சத்து வைட்டமின் பி மற்றும் புதிய ரத்த அணுக்கள் உற்பத்திக்கு தேவையான சத்துக்கள் வளமான அளவில் இருக்கிறது . தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த பீட்ரூட் ஜூஸ் குடித்து வர ரத்த சோகை விரைவில் குணம் ஆகும்.
4 .உடல் நச்சுக்களை வெளியேற்றும்
நம் உடலில் நச்சு கழிவுகள் அதிகமாவதால் தான் உடலில் பல்வேறு நோய்கள் உண்டாகிறது .இத்தகைய டாக்ஸின்களை உடலில் இருந்து வெளியேற்றும் ஆற்றல் இதற்கு உண்டு . இதன் மூலமாக பிற நோய்கள் வருவது தடுக்கப்படுவதோடு ,உடல் சுறுசுறுப்பாக இருக்கும் .
5.கல்லீரலை புதுப்பிக்கும்
பீட்ரூட் ஜூஸை குடித்து வர இதில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரல் செல்கள் பாதிப்படைவதைத் தடுப்பதோடு புதிய செல் உற்பத்திக்கு உதவி செய்கிறது. கல்லீரல் தங்கியிருக்கக் கூடிய நச்சுக் கழிவுகளையும் வெளியேற்றி கல்லீரல் சிறப்பாக செயல்படவும் துணைபுரிகிறது .
6. உடல் எடையை குறைக்கும்
பீட்ரூட் ஜூஸில் கலோரிகள் குறைவு ஆனால் நார்ச்சத்து அதிகம் மற்றும் கொழுப்புகள் கிடையாது.அதிக உடல் எடையினால் அவதிப்படுபவர்கள் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வர உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது .
7.அஜீரணக் கோளாறுகளை போக்கும்
தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வர இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து உடலில் செரிமான உறுப்புக்களை சீராக இயக்கி உணவு செரிமானம் சீராக நடைபெற உதவி செய்யும் .இதன் மூலமாக வயிற்று வலி, வயிறு உப்புசம் ,அஜீரணக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும்.
8.உடல் சோர்வை நீக்கும்
உடல் இயக்கத்திற்கு தேவையான சக்தி கிடைக்காமல் போகும் போதுதான் உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் வரும். இது நம் உடல் செல்களுக்குத் தேவையான ஆக்சிஜனை சீராக கிடைக்க உதவி செய்யும். இதன் மூலமாக, உடல் சுறுசுறுப்பாக இருப்பதோடு புத்துணர்ச்சியாக இருக்கும்.
9 .இருதய நோய்கள் வராமல் தடுக்கும்
உடலில் பொட்டாசியம் என்பது ஒரு எலக்ட்ரோலைட் ரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு குறையும் போதுதான் இருதய படபடப்பு ,சோர்வு ,மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் உருவாகும் உடலில் பொட்டாசியத்தின் அளவைக் குறைப்பதோடு தசைகளை வலுவாக்க கூடியது பீட்ரூட் ஜூஸ் மட்டும் குறிப்பாக இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து மற்றும் ஃப்ளேவோனாய்டு இரத்த குழாய்களில் படியும் கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய அடைப்பை தடுக்கும் இதன் மூலமாக இருதய சம்பந்தமான பிரச்சினைகள் வரும் எடையை குறைக்க உதவி செய்யும் இருதய நோய்கள் வராமல் தடுக்கும் .
10. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான விட்டமின் இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற ஏராளமான சத்துக்கள் பீட்ரூட் ஜூஸில் அடங்கியிருக்கும்.பீட்ரூட் ஜூசுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்து வர நோய் எதிர்ப்பு சக்தி வேகமாக அதிகரிக்கும்.