உண்மையில் அவை, உடல் உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் ஏதாவது ஒரு நோயின் வெளிப்பாடாக இருக்கலாம். உடலின் எந்தப் பகுதியில் கிருமித்தொற்று ஏற்பட்டாலும், அதனருகே இருக்கும் `லிம்ப் நோடு’ (Lymph Node) எனப்படும் நிணநீர்க்கட்டி வீங்கிவிடும். கழுத்தின் பின்பகுதியில் தலைமுடிக்குச் சற்றுக் கீழே சிறு கட்டிகள் காணப்படும். தலையில் பேன், பொடுகு, வேனல் கட்டி போன்றவற்றால் இவை ஏற்படலாம். இந்த வகைக் கட்டிகள் அரை சென்டிமீட்டர் முதல் ஒரு சென்டிமீட்டர் அகலம்வரை இருக்கும். லேசாக உருளும் தன்மையுடன், சற்று வலுவாக இருக்கும். ஒன்றுடன் ஒன்று ஒட்டாது. தலையில் காணப்படும் பேன், பொடுகு போன்றவற்றை குணப்படுத்தினால், இவை தாமாக மறைந்துவிடும். முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள் பயன்பெறுங்கள். #நிணநீர்_கட்டி_குணமாக # Lymphatic_Drainage_Massage