மூன்று முக்கிய ஊட்டச்சத்துக்களின் நன்மைகள்
நார்ப்பொருட்களின் அவசியம்
உணவுப்பொருட்களில் உள்ள தாவர பகுதிகளே நார்ப்பொருள் எனகூறப்படுகிறது . நார்ப்பொருட்கள் தண்ணீரை உறிஞ்சிக்கொள்ளுதல் மற்றும் பருப்பொருளை அதிகப்படுத்துதல் ஆகிய பணிகளை செய்கின்றன. பெருங்குடலில் செயல்பாட்டின் வேகத்தை அதிகரிக்கிறது மற்றும் குடலில் மலம் தங்கியிருக்கும் நேரத்தை குறைக்கிறது. பித்த உப்புக்களை ஒன்றாக்குதல், கொழுப்பை குறைத்தல் போன்ற முக்கிய பணிகளை செய்கிறது, அரிசியில், பிற தானியங்களை விட குறைவான நார்ப்பொருளே உள்ளது. சோளத்தில் 89.2%, கம்பில் 122.3% மற்றும் கேழ்வரகில் 113.5% நார்ப்பொருட்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சுண்ணாம்புச்சத்தின் அவசியம்
கர்ப்பம் மற்றும் பாலூட்டும் காலங்களில் சுண்ணாம்புச்சத்து குறைந்து காணப்பட்டால், குழந்தையின் எலும்பு வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் . இதனால், தாயின் உடல்நலத்தில் குறைபாடுகள், தாயின் எலும்பில் உள்ள சுண்ணாம்புச்சத்தை குழந்தை எடுத்துக்கொள்ளுதல் மற்றும் தாய்ப்பால் குறைபாடுகள் அகியவையும் உண்டாகிறது. சுண்ணாம்புச்சத்து குறைபாட்டால், தாய்க்கு இரத்த ஓட்ட பாதிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவையும் ஏற்படும்.
சிறுதானியங்களில், கேழ்வரகு மற்றும் கம்பு ஆகியவற்றில் அதிக சுண்ணாம்புச்சத்து மற்றும் நார்ப்பொருட்கள் உள்ளன
Vitamin A அவசியம்
கரையக்கூடிய கொழுப்பு சேர்மங்களின் ஒரு குழுவின் பொதுவான சொல், இது மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. ஆரோக்கியமான பார்வையை பராமரித்தல், உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் மற்றும் உடல் உறுப்புகளின் இயல்பான செயல்பாட்டை உறுதி செய்தல் மற்றும் கருப்பையில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுதல் உள்ளிட்ட உங்கள் உடலில் உள்ள பல செயல்முறைகளுக்கு அவை அவசியம்.
ஆண்களுக்கு 900 எம்.சி.ஜி,
பெண்கள் 700 எம்.சி.ஜி மற்றும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் ஒரு நாளைக்கு 300–600 எம்.சி.ஜி வைட்டமின் ஏ பரிந்துரைக்கப்படுகிறது.
வைட்டமின் ஏ கலவைகள் விலங்கு மற்றும் தாவர உணவுகள் இரண்டிலும் காணப்படுகின்றன.