தண்ணீரின் தேவைகள்
நம் உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது நீர் தான். 5 முதல் 10 சதவீதம் வரை உடலில் இருந்து தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் 15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது உயிரிழப்பை ஏற்படுத்திவிடும்
உடல் உறுப்புகள் முறைப்படி செயல்படுவதற்கு உராய்வு எண்ணெய் போன்று தண்ணீர் செயலாற்றுகிறது. நம்முடைய தோலினை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக் கொள்வதற்கும் உடலில் உள்ள தண்ணீரே பங்காற்றுகிறது. வயது முதிர்வடையும் போது தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கும் உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைவதே காரணம்.
உமிழ்நீரை உருவாக்குவதில் தண்ணீர் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது இந்த உணவை நன்றாக வாயில் அரைக்கும் போது உமிழ்நீருடன் சேர்த்து செரிமான மண்டலத்திற்கு செல்வதால் செரிமான பிரச்சனை வருவது தடுக்கப்படுகிறது
உங்கள் உடலின் வெப்பத்தை கட்டுப்பாட்டில் வைப்பது தண்ணீர் தான் இந்த தண்ணீர் வியர்வை மூலம் உடலில் இருந்து அனைத்து பகுதிகளிலும் வெளியேறி உடலை குளிர்ந்த நிலையில் வைக்கிறது வியர்வை வெளியேற்றபட்ட பிறகு நீரை பருகுவது மிக மிக அவசியமாகும் இல்லையேல் உடலில் உள்ள எலக்ட்ரோலைட் குறைந்து சேர்வு நிலையில் நாம் தள்ளப்படுவோம்.
அதிகமாக நீர் அருந்தி வந்தால் இரத்தம்ஓட்டத்தின் மூலம் அதிக ஆக்ஸிஜன் உடலின் அனைத்து பகுதிக்கும் செல்லும்
உடலில் உள்ள தேவையற்ற செல்களை வியர்வை மூலமாகவும் சிறுநீர் மூலமாகவும் வெளியேற்றப்படுகிறது.
ஆண்கள் 3.7 லிட்டர் தண்ணீரும் பெண்கள் 2.7 லிட்டர் தண்ணீரும் தினமும் பருகவேண்டும்.
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
– திருவள்ளுவர்.
“நீர் இல்லாவிட்டால் எந்த உயிரும் வாழாது, உலக ஒழுங்கு கெட்டு, உலக வாழ்வே முடிந்து விடும்’
தண்ணீரை பூமிக்குள் தேடாதே அது ஆபத்தானது வானத்தில் இருந்து வரவழைத்து கொண்டு வா –
மதிப்பிற்குரிய ஐயா கோ. நம்மாழ்வார்
இன்று நாமே தண்ணீருக்காக தெருவில் அழைக்கின்றோம் நமது அடுத்த சந்ததியினர் ?