அரிசி, கோதுமை இரண்டும் உலகளவில் அதிக மக்களால் உண்ணப்படும் தானியங்கள் ஆகும்.இவை போலவே பல சத்துக்கள் நிறைந்த உணவாக உட்கொள்ளக்கூடிய சிறு தானியங்களுள் ஒன்று தான் கம்பு. இதனைக் கூழ், களி, அடை, தோசை, முளைவிட்ட பயிர் என பக்குவப்படுத்தி சாப்பிடலாம்.
- கம்பு பல அத்தியாவசிய சத்துகள் நிறைந்தது.இதை தினந்தோறும் காலையில் கூழ் அல்லது களியாக சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்புகள் தங்குவதை தடுத்து, தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை தந்து, உடல் பலத்தை பெருக்குகிறது.
- நீரிழிவு நோயாளிகள் அரிசிக்கு மாற்றாக தினமும் கம்பு கூழ், களி, தோசை போன்றவற்றை செய்து சாப்பிடுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மேலும் கம்பு இழந்த உடல்சக்திகளை மீண்டும் தர வல்ல ஆற்றல் படைத்தது.
- சிறுதானியமான கம்பில் உடலுக்கு தேவையான பல சத்துகளும், வேதிப்பொருள்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இந்த கம்பை தொடர்ந்து உணவாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உடலில் நோயெதிர்ப்பு திறன் அதிகரித்து, உடலை பல நோய்களின் தாக்கத்திலிருந்து காக்கிறது.
- கம்பு நார்சத்து அதிகம் கொண்டதால் வயிற்றில் செரிமான கோளாறுகள் மற்றும் புண்கள் கொண்டவர்கள் தொடர்ந்து உண்டு வருவதால் வயிறு சம்பந்தமான அத்தனை குறைபாடுகளையும் இது நீக்கும்.
- உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் கம்பு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை உண்பதால் பசியை சரியான நேரத்தில் மட்டுமே எடுக்கச் செய்து, இவர்களின் உடல் எடையை குறைத்து விடும்.
- கம்பு உணவுகளை தினந்தோறும் ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
- கம்பு அதிகம் உட்கொண்டால், அவர்களின் ரத்தத்தில் இருக்கும் செல்களின் பிராண வாயு உபயோகிப்பை அதிகப்படுத்துவதால், அவர்களின் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, தோல் பளப்பளபையும் இளமை தோற்றத்தையும் தருகிறது. மேலும் முதுமை அடைவதை தாமதப் படுத்துகிறது.
- புதியதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் தினமும் கம்பு கூழ் அல்லது களி போன்றவற்றை உண்பதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
- பருவமடைந்த பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சமயங்களில் அதிக ரத்த போக்கும், அடிவயிற்று வலியும் ஏற்படுகின்றன. இப்படியான நேரங்களில் இளம் சூடாக கம்பு கூழ் அல்லது கம்பு சூப் அருந்த மேற்கண்ட பிரச்சனைகள் தீரும்.
- கம்பு ரத்தத்தில் இறுக்கத்தன்மையை தளர்த்தி பிராணவாயு கிரகிப்பை அதிகப்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் வாய்ப்பை தடுத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
- கம்பு ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி, ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது.
- முடி நன்கு தழைத்து வளர காரணமாகும் கெராட்டீன் எனும் புரதம் கம்பில் அதிகம் நிறைந்துள்ளது. இதை உணவாக அதிகம் உண்பவர்களுக்கு முடி கொட்டுவது குறையும்.
- சிலருக்கு சுற்றுப்புற சூழலாலும், உடலில் ஏற்படும் மாற்றங்களினாலும் உடல் அதிகம் வெப்பமடைந்து, அதனால் சில பாதிப்புகளை சந்திக்கின்றனர். இவர்கள் தினமும் காலை வேளைகளில் கம்பு கூழை பருகி வந்தால் உடல் அதிகம் உஷ்ணமடைவது குறையும்.
- கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
- உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.
- கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
- உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்.
அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.