காய்கறிகளுள் மிகவும் சிறியது சுண்டைக்காய். இதனை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்றே கூற வேண்டும்.உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து கொழுப்பைக் கரைப்பது வரை பெரிய வேலைகளைச் செய்யக்கூடிய மாபெரும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. வைட்டமின் ஏ,சி,இ போன்ற சத்துக்களை அதிகமாக உள்ளடக்கியது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய தேவையான வைட்டமின் சி-யை ஆரஞ்ச் , கொய்யா, பப்பாளிக்கு நிகரான அளவு இந்த சிறிய சுண்டைக்காயில் உண்டு.
- ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தியைக் கொண்டது. ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது.
- வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.
- ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடிய இரும்புச் சத்தைக் கொண்டுள்ளது.
- காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன் , காயங்களையும் , புண்களையும் ஆற வைக்கும்.
- இதிலுள்ள தையமின், ரிபோஃப்ளேவின் போன்றவை வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்கிறது.
- நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்ககூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும் இது உதவி புரிகிறது.
- சித்த மருத்துவத்தில், பல மருந்து தயாரிப்புகளுக்கு இதை உபயோகிக்கிறார்கள்.
- பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக கொடுக்கப்படும் அங்காயப் பொடியில் முக்கியமானதாக சேர்கக்ப்படுவதே சுண்டைக்காய்தான்.
- தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி , உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.
- சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன. எனவே உடல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
- சுண்டைக்காயை வாரம் இருமுறை சமைத்துச் சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடையும். உடல்சோர்வு நீங்கும். சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக்கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.
- சுண்டைக்காய் இலைகள் ரத்தக் கசிவை தடுக்கக்கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன.