நிகோடின் தான் உங்களை மீண்டும் மீண்டும் அதை செய்ய சொல்கின்றது

சிகரெட்டில் நிகோடின் என்ற நஞ்சு இருக்கிறது. அந்த நஞ்சு நரம்புகளில் பாய்ந்து நரம்பு மண்டலத்தை சேதப்படுத்துவது மட்டுமின்றி, மீண்டும் மீண்டும் புகை பிடிக்கும் எண்ணத்தைத் தூண்டுகிறது. கன்னக் கதுப்புகளில், உதடுகளில், ஈறுகளில் அந்த ரசாயனம் தாக்கும்போது ஒரு விறுவிறுப்பு ஏற்படுகிறது.

இதனால் ஒரு குணமாற்றம் ஏற்படுகிறது. சிகரெட் புகையை இழுத்து நுரையீரலில் தேக்கும்போது அங்கிருந்து, அந்த நச்சுப்பொருள் உடம்பிலுள்ள எல்லா ரத்த அணுக்களுக்கும் பரவி, எல்லா இடங்களிலும் ஒரு அமைதி உணரப்படும். கண்களுக்கு ஒரு கிறக்கமான நிலைமை ஏற்படுகிறது.

இந்தப் புகையை உள்வாங்கியதால் புகை நுரையீரலுக்கு மட்டுமல்லாது இரைப்பைக்கும் செல்லும் வாய்ப்பு அதிகம். இரைப்பையில் புகை தங்கி மேல் வயிறு பெரியதாகி, உடல் பருமனையும் சில சமயம் அதிகரித்து, ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.எனவே சிகரெட் பிடிப்பவர்கள் உடனடியாக அந்த பழக்கத்தை கைவிடுங்கள். சிகரெட் உங்களை ஒருநாள் மிக நிதானமாக கொல்லுகின்ற ஒரு விஷயம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இந்த இருமல், முதுகு குனியல், தளர்வு, வேதனையெல்லாம் சிகரெட் பிடிப்பதால் விரைவாக ஒரு மனிதனுக்கு வரும். நல்லபடியாக சுவாசம் செய்து கொண்டிருந்தால் எழுபத்தைந்து வயது வரை ஆரோக்யமாக நிச்சயம் இருக்கலாம்.மேலும் புகை பிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது மற்றும்  உங்கள் குடும்பத்திற்கும் தீங்கானது. உங்கள் வாழ்க்கையை சிதறடிக்கப் போவது.

புகை பிடிப்பதால் வரும் தீமைகள்

  • சிகரெட்டினால் ஏற்படும் துர்நாற்றம், புகைப்பவர்களின் உடைகள், வியர்வை எல்லாவற்றிலும் பரவிவிடுகிறது. புகை பிடிக்காதவர்கள், இந்த துர்நாற்றத்தின் காரணமாகவே இவர்களை விட்டு விலக நேரலாம்.
  • மூச்சுவிடுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன
  • தொடர்ச்சியான இருமலும், சிலருக்கு ஒற்றைத்தலைவலியும் தோன்றலாம்.
  • புகை பிடிக்கப் பிடிக்க, இன்னும் அதிக அளவில் தொடர்ச்சியாகப் புகைக்க வேண்டும் என்ற தூண்டுதல் தோன்றும். இதனால், சங்கிலித்தொடர் போல புகைக்கத் தொடங்கிவிடுவர். இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அப்படிப் புகைக்காவிடில், உடல் சோர்வும், தலைசுற்றலும் கூட ஏற்படலாம்.
  • உதடுகளும் பற்களும் கறைபடிந்து அருவருக்கும் அளவு மாறிவிடும். விரல் நுனிகளும் சிலருக்கு மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

 

  • அடிக்கடி தொண்டையில் சளி அடைப்பது போன்ற உணர்வு தோன்றுவதால், செருமிக்கொண்டே இருக்க நேரிடும். சிலருக்கு இந்த அடைப்பினால் பேக்சும் தடைபடும்.
  • நாளடைவில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
  • புகை பிடிக்கையில் தோன்றும் திருப்தி தற்காலிகமே. பிடித்து முடித்ததும் மீண்டும் பதட்டமும் இறுக்கமும் தோன்றிவிடும்.
  • சளித்தொல்லை, ஆஸ்த்மா போன்றவை உண்டாகும்.
  • சுவை அரும்புகள் தமது ஆற்றலை இழந்து விடுவதால், நாளடைவில் உணவின் மீது நாட்டமானது குறையத்தொடங்கும்.

புகைபிடிப்பதை நிறுத்தியவர்களுக்கு ஆதரவளிக்கும் குழுக்கள் நிறைய உண்டு. இவற்றில் அவர்கள் சேரவேண்டும். இதன்மூலம், தங்களுக்கு வரக்கூடிய பிரச்னைகளைச் சமாளிக்க அவர்களால் இயலும்.

இத்துடன், நிகோடின் பயன்பாடு, சமாளிக்கும் திறன்களைப் பற்றிய விவரங்களும் அவர்களுக்குத் தரப்படுகின்றன. ஒருவர் புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டு, புகையிலை இல்லாமல் வாழவேண்டுமென்றால், அவருடைய நணர்கள், குடும்பத்தினர், ஆதரவுக் குழு உறுப்பினர்கள் என எல்லாரும் அவர்களுக்கு உதவவேண்டும்.