பிளாஸ்டிக் பொருட்களை நாம் கைவிடாவிட்டால் என்ன ஆகும்?

உணவே மருந்து தமிழ்

பிளாஸ்டிக் பொருட்கள் எளிதில் மட்கும் தன்மை அற்றவை ஆகும்.ஒரே ஒரு பிளாஸ்டிக் பையானது மட்குவதற்கு பல ஆண்டுகளாகும். மண்ணின் திறன் அமைப்பிற்கும் மண்ணின் சத்துக்களுக்கும் பிளாஸ்டிக்கானது கெடுதல் புரிகின்றது. சிற்றூர் தொடங்கி பெருநகரம் வரை அனைத்து இடங்களிலும்  பிளாஸ்டிக் மாசுபடுத்தி நாட்டின் மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

பிளாஸ்டிக் என்பது நம்முடைய புவி சூழலை அழிக்கும் பொருட்களில் ஒன்றானது. பிளாஸ்டிக் பைகளே நமது அன்றாட வாழ்வில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளாய் இன்று மிகப்பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை நாம் கைவிடாவிட்டால் நிச்சயம் பின்வரும்      பாதிப்புகளை நாம் எதிர்கொள்ள நேரிடும்.

பிளாஸ்டிக் தயாரிப்பு வகைகள்

  1. அதிக அடர்த்தி உள்ள பாலி எத்திலின்கள் (உ.ம்) குளிர்பானங்களை  அடைக்கப் பயன்படுத்தும் பாட்டில்கள்
  2. குறைந்த அளவு அடர்த்தி உள்ள பாலி எத்திலின்கள் (உ.ம்) தூக்கும் பைகள்.
  3. பாலி எத்திலின் டெரித்தாலேட் (உ.ம்) குளிர்பானங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற தேவைகளுக்காக வடிவமைக்கப்படும்  பாட்டில்கள்.
  4. பாலிப்பிரோப்பலின் (உ.ம்) குளிர்பானம் உறிஞ்சி குடிக்க பயன்படுத்தும்  குழாய்கள்.
  5. பாலிசிஸ்ட்ரேன் (உ.ம்) உணவு பொருட்கள், நுரையணித் துணிகள் போன்ற பாக்கெட்கள்
  6. பாலிவினைல் குளோரைட் (உ.ம்) மின்சார காப்பர் கம்பிகளின் மேல் பயன்படுத்துபவை.
  7. அக்ரிலோ – ஹைட்ரேட் பூட்டிடேன் சிஸ்ட்ரேன் (உ.ம்) மிகவும் கடினமான பொருட்கள் தயாரிப்பு மற்றும் கார் வாகனங்கள் பொருட்கள் தயாரிப்பு.
  8. பாலி கார்பனேட் – பிளாஸ்டிக் (உ.ம்) குறுந்தகடு) போன்றவை தயாரிக்க பயன்படுகிறது.

பிளாஸ்டிக்கின் தீமைகள்

  1. வீணாகும் உணவுகளுடன் நாம் வீசும் பிளாஸ்டிக் பொருட்களை பசு, நாய், கால்நடைகள், வனவிலங்குகள் போன்றவை உட்கொள்வதால் உணவுக் குழாய் அடைப்பாட்டினால் துன்புறவும், மரணமடையவும் வழிவகை செய்கிறது.
  2. வீட்டிலிருந்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணின் தரத்தைப் பாதிக்கிறது.
  3. சாக்கடைகள் போன்ற இடங்களில் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் குடிதண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் போன்றவை எக்காலத்திலும் அழியாது. இவைகள் அடைத்து கொண்டு பல இன்னல்களை ஏற்படுத்துகின்றன.
  4. நம் அன்றாட வாழ்வில் தூக்கியெறியப்படும் பிரிக்காத குப்பைகளினால் கொசுக்களால் மூலம் பரவும் கொடிய நோய்கள் உருவாக காரணமாகிறது.
  5. பிளாஸ்டிக் உறைகளால் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட  உணவுப் பொருட்களால் உடலுக்கு பல தீமை விளைகிறது.
  6. பிளாஸ்டிக் பைகளில் தேங்கும் கழிவு நீரால் புதிய நோய்கள் பரவவும், சுகாதாரக் கேடு உருவாகவும் பிளாஸ்டிக் காரணமாகிறது.
  7. பிளாஸ்டிக் பைகள் மற்றும் தூக்கி எரியப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மழை நீர் ஊடுருவி நிலத்தடி சென்றடைய இடையூறாக உள்ளது.

பிளாஸ்டிக்கை தவிர்க்கும் போது விவசாய நிலம், மணல்,  நீர் நிலைகள், விலங்கினங்கள், சுற்றுச்சூழல் மேம்பாடு அடைதல், தட்பவெப்ப நிலையை சமன்படுத்துதல் போன்றவைகள் மூலம் நம் நாடு தூய்மையாகவும், பசுமையாகவும் இருக்க உதவும்.பிளாஸ்டிக் இல்லாத நாடாக உருவாக்குவோம் என ஒவ்வொரு குடிமகனும் தனக்கொரு உறுதிமொழியை ஏற்படுத்தி கொள்ளுதல் அவசியம்.