HDL (High Density Lipoproteins) என்பது அதிக அடர்த்தி கொண்ட கொழுப்புப் புரதங்கள். LDL (Low Density Lipoproteins) என்பது குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்புப்புரதங்கள். ஹார்மோன் உற்பத்தி, விட்டமின் டி உற்பத்தி, உணவு செரிமானம் போன்ற உடலியல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கும் கொழுப்பு என்பது ஒட்டும் தன்மை கொண்ட வலுவலுப்பான பொருள். மனித உடலிற்கு தேவையான கொழுப்புக்கள் அனைத்தும் இரத்தத்தில் உள்ள லிப்போ புரதம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. லிப்போ புரதம் என்பது உட்புறம் கொழுப்பும், வெளிப்புறம் புரதமும் கொண்டது.இதைத்தான் இரு வகையாக HDL மற்றும் LDL என்று குறிப்பிடுகிறார்கள்.
உடலின் மொத்த கொலஸ்ட்ரால் (கொழுப்பு) அளவு அதிகமாக உள்ளது என்றால் அது இருதயம் சார்ந்த நோய்கள் அல்லது வாதத்திற்கு இட்டுச் சென்று விடும் என்பதால் குறையடர்த்தி லிப்போ புரதம் உடலிற்கு தீயது எனவும், உடலின் மொத்த கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக உள்ளது என்றால் அது மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்குவதில்லை என்பதால் மிகையடர்த்தி லிப்போ புரதம் உடலிற்கு நன்மை எனவும் சொல்லப்படுகிறது.
உடலில் மொத்த கொலஸ்ட்ரால் அளவு இருநூறுக்கு குறைவாக இருப்பது நல்லது.குறையடர்த்தி லிப்போ புரதத்தின் அளவு நூற்று முப்பதுக்கு குறைவாக இருப்பது நல்லது. ஆனால் இவை உங்களின் இருதய நோயின் ஆபத்தைப் பொறுத்தது. மிகையடர்த்தி லிப்போ புரதம் அளவு அறுபது மற்றும் அறுபதுக்கு மேல் இருப்பது உங்களின் இருதய நோய்க்கான ஆபத்தைக் குறைக்கும்.
நம் உடலில் பயன்படுத்தாத கொழுப்பு தமனிகளில் சேர்ந்து கொழுப்புத் தகடு போன்ற ஒன்றினை உருவாக்குகிறது. மேலும் தொடர்ச்சியாகத் தமனிகளில் சேரும் அதிகப்படியான கொழுப்புத் தகடு கடினமடைந்து தமனிக் குழாய்களைக் குறுகலடையச் செய்கிறது.இன்னும் மிகுதியான கொழுப்புத் தகடு தமனியில் அடைப்பை ஏற்படுத்தும். கொழுப்புத் தகடு அதிகமாக அதிகமாக, அது இரண்டு பகுதியாக்ப் பிரிந்து இரத்த உறைதலுக்கு கூட வழிவகுத்து விடுகிறது. இதனால் தமனியின் வழியே இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் பாதிப்படைகிறது. மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனியில் அடைப்பு ஏற்பட்டால் வாதம் ஏற்படும்.
நாள்தோறும் உடற்பயிற்சி இல்லாமல் செயலற்று இருப்பதும், அதிகப்படியான உடல் உழைப்பு இல்லாமலும், உடல் பருமனாக இருப்பதும் கொலஸ்ட்ராலின் அதிகரிக்க காரணமாகிறது. இவ்வாறு கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாவது இதயம் சார்ந்த நோய்களுக்கு வழிவகுக்கும்.
நல்ல கொழுப்பு அதிகரிக்க செய்ய வேண்டியவை
- தினசரி உடற்பயிற்சி
- புகைபிடிக்கும் பழக்கத்தை விடுதல்
- புரத எண்ணெய் உபயோகிப்பதை குறைத்தல்
- தினமும் பாதி அளவு வெங்காயத்தை சாப்பிடும் போது, HDL அளவு 25 சதவீதம் அதிகரிக்கும். மேலும், வெங்காயத்தை இப்படி சாப்பிட முடியாதவர்கள் மற்ற காய்கறிகளுடன் சேர்த்துக் கலவையாக சாப்பிடலாம்.
- சோயாபீன்ஸ் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, HDL என்ற நல்ல கொலஸ்ட்ரால் உர வழிவகை செய்கிறது.
- ராஜ்மா,மூக்கடலை, வெள்ளை மூக்கடலை போன்ற முழு தானிய பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
- தியான பயிற்சிகளும், எப்போழுதும் மனதிற்கு சந்தோஷமான சூழ்நிலையும் HDL கொலஸ்ட்ரால் உயர வழித்துணை புரிகின்றன.
கெட்ட கொழுப்பு குறைக்க செய்ய வேண்டியவை
- கெட்ட கொழுப்பை உடற்பயிற்சிகள் மூலமாகவும் உணவு முறை மாற்றத்தாலும் குறைக்கலாம். உணவுகள் பின்வருமாறு
- பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, இருக்கும் கொலஸ்ட்ராலும் கரைந்து விடும்.
- கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு அல்லது கலோரிகளே இல்லை என்று சொல்லலாம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும்.
- மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம்.
- ஆப்பிளில் வைட்டமின் `சி’ மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைத்து விடலாம்.
- ஓட்ஸை காலை உணவாக உட்கொண்டால், நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் தங்கியிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவும் குறையும்.
- முழு தானியங்களிலும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. எனவே தினை, கேழ்வரகு போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.
- சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி ஆகியவையும் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் என்பதை அதிகளவில் கொண்டுள்ளது இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
- பூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவும். அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் நன்கு தெரியும்.
- கத்திரிக்காயைப் போன்றே வெண்டைக்காயும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் இதில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளும் இதனை உட்கொண்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.