மன அழுத்தத்தை போக்க என்ன செய்வது?

மன அழுத்தத்தை போக்க என்ன செய்வது?

●மூச்சுப்பயிற்சி . அதிகாலையில் மூச்சுப்பயிற்சி செய்வது சிறந்தது 5 – 10 நிமிடங்கள் செய்தாலே மன அமைதி வரும்.

●கார்ட்டிசால் (cortisol) ஹார்மோன்  சுரப்பதை குறைக்க வேண்டும் எப்படி குறைப்பது வடிவேலு காமெடி பார்த்தால் குறையும் வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க cortisol ஹார்மோன்  சுரப்பது குறையும்.

●சமுகவலைதளம் – இங்கே வந்து உரையாடல் நடத்துங்கள் எண்ணங்கள் மாரும் கவிதைகள் தத்துவங்கள் மீம்ஸ்கள் உங்கள் மனநிலையை

மாற்றிவிடும்.

●மனம் குரங்கு போல செயல்படும் அதை கட்டுப்படுத்த நினைத்தால் எதை மறக்க நினைகின்றோமோ அதை மறுபடியும் மறுபடியும் காட்டும்  அதனால் மனதிற்கு கடிவாளம் போட வேண்டாம்.

●உங்களுக்கு பிடித்த செயல்களை பட்டியலிடுங்கள் அல்ப்பதனமாக இருந்தாவலும் பரவாயில்லை அதை மீண்டும் செய்ய துவங்குங்கள். ( உதாரணம் எனக்கு ஏழு கழுதை வயசாச்சு – இப்ப கூட சிறுவர் பூங்கா போனா சறுக்கல் விளையாட்டு விளையாடுவேன்)

●dark chocolate சாப்பிட stress  மன  அழுத்தத்தை  ஏற்படுத்தும் (cortisol, epinephrine, adrenocorticotropic hormone [ACTH], and norepinephrine)  போன்ற ஹார்மோன்களை சுரக்கவிடாமல் தடுக்கின்றது.