7 main foods that protect the kidneys – சிறுநீரகத்தை பாதுகாக்கும் 7 முக்கிய உணவுகள்

7 main foods that protect the kidneys


சிறுநீரகத்தை பாதுகாக்கும் 7 முக்கிய உணவுகள்

1 . பூண்டு

பூண்டின் நன்மைகளை சொல்லவே தேவை இல்லை தினமும் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் இதய நோய் வருவதை தவிர்ப்பதோடு, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும். இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக நடக்கும். முக்கியமாக, சிறுநீரகத்தில் kidneyல் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் சிறுநீரகக் குழாய்களில் ஏற்படும் தொற்று போன்றவற்றிற்கு பெரிதும் துணை புரிகிறது. எனவே, தினமும் ஒரு பல் பூண்டு பச்சையாகவே சாப்பிடுவது நல்லது .

2 . திராட்சை

திராட்சையில் வைட்டமின் சி வளமையாக உள்ளது . இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் .ரத்த ஓட்டத்தை சீர்படுத்த உதவும். மேலும், ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு தேவையான முக்கியமான கூறுகளில் இதுவும் ஒன்றாகும். அதேபோன்று திராட்சை சாப்பிடுவதால் அதிகப்படியான கொழுப்பை குறைத்து மாரடைப்பை தடுப்பது, சிறுநீரகத்தில் கல்  (kidney stone) ஏற்படுவதை தடுக்கிறது.

3 .முட்டைகோஸ்

முட்டைகோஸ் ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு சிறந்த உணவுகளில் முட்டை கோசு ஒன்று. அதிலுள்ள வளமையான ஊட்டச்சத்துக்கள் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு பயன்படுவதோடு மட்டுமல்லாமல் பிற உறுப்புகளுக்கும் நன்மையை ஏற்படுத்தும். புற்றுநோய் அணுக்களை எதிர்த்து போராட உதவும் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் இதில் வளமையாக உள்ளது. அது மட்டுமல்லாமல், முட்டைக்கோஸில் வைட்டமின் k , போலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு  இது ஒரு சக்தி வாய்ந்த உணவாக திகழ்கிறது .

4 . மீன்கள்

மீன்களில் ஒமேகா-3 ஃகொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் இவை சிறுநீரகத்தை நோய் தாக்காமல் பாதுகாக்கிறது. அதிலும் சால்மன் மீன்களில் மத்தி மீன்கள், கானாங்கெளுத்தி மற்றும் சூரை போன்ற கடல் மீன்கள் ஆரோக்கியமானது.

5.கொத்தமல்லி

கொத்தமல்லியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு ஒரு பத்து நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டி ஆறிய உடன் அந்த நீரை ஒருடம்ளர் அளவு குடித்து வந்தால் சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்கள் அதாவது நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும். இதை வாரம் மூன்று முறை செய்யலாம்.

6.இஞ்சி

இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்கு மிகவும் நல்லது. மேலும், இது ரத்தம் மற்றும் சிறுநீரகங்களைச் சுத்தப்படுத்தும் சக்தி கொண்டது. அஜீரணக் கோளாறு போன்றவை பொதுவாக ஜீரண மண்டலம் சரிவர இயங்கினால் சிறுநீரகத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

7.வெங்காயம்

வெங்காயத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் வருவதை இயற்கையாகவே தடுக்கலாம். மேலும் இது சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். எனவே, அடிக்கடி சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வருவது நல்லது. 

மேலும் சிறுநீரை அடக்கி வைக்கக் கூடாது. மது புகை பிடிக்க கூடாது. தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் குளிக்கும்போது இனப்பெருக்க உறுப்புகளை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். முக்கியமாக தினமும் குறைந்தது இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால், ஆரோக்கியமான சிறுநீரக செயல்பாட்டிற்கு தண்ணீர் மிக அவசியம். அதேபோன்று, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது. சர்க்கரை நோய் இருந்தால் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். அதிலும் உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. எனவே, உணவு கட்டுப்பாடு என்பது மிக அவசியம். எனவே இங்கே சொன்ன உணவுகளை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்து கொண்டாலே பிரச்சினை என்பது வரவே வராது.

இதை நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் நமது உணவே மருந்து செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்