வைட்டமின் C பயன்கள் மற்றும் உணவுகள்

நாம் சாப்பிடும் உணவுகளில் பல வகையான சத்துகள் இருக்கின்றன. அதில் வைட்டமின் சத்து மிக முக்கியமானதாக இருக்கிறது. வைட்டமின் சத்துக்கள் பல வகைகளாக இருக்கின்றன. அதில் ஒரு முக்கியமான சத்தாக அஸ்கார்பிக் அமிலம் எனப்படும் வைட்டமின் சி சத்து இருக்கிறது. வைட்டமின் சி சத்து நாம் சாப்பிடும் பல காய்கறிகள்,பழங்கள்,கீரைகள் போன்றவற்றில் நிறைந்திருக்கின்றன. அப்படி சாப்பிடப்படும் வைட்டமின் சி சத்தால் நமக்கு நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வைட்டமின் சி பயன்கள்

  • வைட்டமின் சி என்பது நோய் எதிர்ப்பு சக்தி ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்த ஒரு சத்தாகும். இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திகளை வலுவூட்டி, சுலபத்தில் நமது உடலை தொற்றுநோய்கள் அணுகா வண்ணம் காவல் காக்கிறது.
  • வைட்டமின் சி சத்து உடலின் செல்களில் தொற்று நோய் கிருமிகள் பரவாமல் தடுத்து, உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு கூட்டுகிறது.
    ரத்த அழுத்தம் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் பிராண வாயு மற்றும் சத்துக்கள் சென்றடைவதை நமது உடலில் ஓடும் ரத்தம் உறுதி செய்கிறது. வைட்டமின் சி சத்துகள் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது.

 

  • இயற்கையான உணவு வகைகளில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. அவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவது குறைகிறது.
  • வைட்டமின் சி சத்து கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகம் சேராமல் தடுத்து இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது.
  • நமது உடலில் இருந்து சிறுநீர் வழியாக பலவிதமான நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் வெளியேறுகின்றன. அதில் ஒன்று யூரிக் அமிலம். வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உட்கொண்டவர்களுக்கு சிறுநீரில் யூரிக் அமிலத்தின் அளவு வெகுவாக குறைந்து, எதிர்காலத்தில் சிறுநீரகங்களில் கற்கள் உருவாவது மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கிறது.
  • ஆர்த்தரைடீஸ் என்பது உடலில் மூட்டு பகுதிகளான முழங்கை, முழங்கால் மற்றும் இதர எலும்பு மூட்டுகளில் மிகுந்த வலியை ஏற்படுத்தக்கூடிய ஒரு நோயாக இருக்கிறது. இந்த நோய் வயதானவர்களிடம் அதிகம் ஏற்படுகிறது. ரத்தத்தில் அதிக அளவு யூரிக் அமிலம் உருவாகி, அவை இந்த மூட்டுப் பகுதிகளில் படிந்து விடுவதால் மேற்கண்ட ஆர்த்தரைடீஸ் பிரச்சினை ஏற்படுகிறது. வைட்டமின் சி சத்துகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் யூரிக் அமிலங்கள் குறைந்து, ஆர்த்தரைடீஸ் நோய் பாதிப்பு நீங்கி, மூட்டுக்களில் வலி ஏற்படுவது குறைந்து விடும்.

 

  • மனிதர்களின் உடலில் இன்றியமையாதது இரும்புச்சத்து ஆகும். ரத்தம் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பாய்வதற்கும், சிவப்பு இரத்த அணுக்கள் பெருக்கத்திற்கும் இரும்புச்சத்து அவசியம். வைட்டமின் சி சத்துகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு, உணவுகளிலிருந்து இரும்புச்சத்து அதிக அளவில் ரத்தத்தில் சேர உதவுகிறது.
  • மனிதர்களின் ரத்தத்தில் வெள்ளை இரத்த அணுக்கள் சரிசமமான அளவில் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருக்கும். வைட்டமின் சி சத்துக்கள் சரியான அளவில் சாப்பிடுபவர்களுக்கு உடலில் உள்ள இரத்த அணுக்கள் மற்றும் லிம்போசைட் அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குகிறத.
  • நிமோனியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வைட்டமின் சி சத்தை அதிகம் உட்கொண்டால், வெகு சீக்கிரத்தில் அந்நோயிலிருந்து விடுபடலாம்.

 

  • டிமென்சியா என்பது சிந்திக்கும் திறன் குறைபாடு மற்றும் அதீத ஞாபக மறதி ஆகியவற்றை கொண்டவர்கள் எதிகொள்ளும் ஒரு நோய் ஆகும்.வைட்டமின் சி சத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்தது என்பதால் வைட்டமின் சி சத்துகளை மேற்கூறிய குறைபாடு கொண்டவர்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், அவர்களின் சிந்திக்கும் திறனில் முன்னேற்றம் மற்றும் ஞாபகத் திறன் மேம்படும்.
  • ஸ்கர்வி என்பது உடலில் எலும்புகள், நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் போன்றவை மிகவும் வலுவிழந்து விடுவதை குறிக்கும் ஒரு வகை நோய் ஆகும். குறிப்பாக இந்த நோய் வளரும் குழந்தைகளையே அதிகம் தாக்குகின்றன. இந்த நோய் ஏற்படுவதற்கான பிரதான காரணம் உடலில் வைட்டமின் சி சத்து குறைபாடே ஆகும். வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த உணவுகளை வளரும் குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுப்பதன் மூலம் இந்த ஸ்கர்வி நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

 

  • அதிக புரதம் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதாலும், முதுமை மற்றும் பிற காரணங்களாலும் பலருக்கு கண்புரை நோய் ஏற்படுகிறது. இந்த கண்புரை நோய் ஏற்படுவதற்கு மற்றொரு முக்கிய காரணமாக உடலில் வைட்டமின் சி சத்து குறைபாடே ஆகும். கண்களின் பார்வைத் திறன் தெளிவாக இருக்கவும் கண்புரை மற்றும் இதர கண் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் தினந்தோறும் வைட்டமின் சி சத்து இருக்கின்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் சி நம் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். இந்த வைட்டமின் நீரில் கரையக் கூடியது. மேலும் இவை ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன. நமது உடலில் உள்ள திசுக்களுக்கு இவை மிகவும் முக்கியமானது. இதய நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், மகப்பேறு காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள், கண் நோய்கள், சரும சுருக்கங்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்க வைட்டமின் சி பயன்படுகிறது.

வைட்டமின் சி உள்ள உணவுகள்

  • ஆரஞ்சு
  • கொய்யா
  • குடைமிளகாய்
  • ஸ்ட்ராபெர்ரி
  • ப்ரக்கோலி
  • தக்காளி
  • நெல்லி