உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பூண்டினை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் மற்றும் பூண்டினை ஒரு இயற்கை மருத்துவ பொருளாக பயன்படுத்தலாம் என நம் முன்னோர்கள் கூறிச்சென்றுள்ளனர்.
பூண்டினை அடிக்கடி சாப்பிடுவது உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். பூண்டினை உணவில் சேர்த்துக் கொள்வது புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறுபட்ட நோய்களையும், ஆரோக்கிய குறைபாடுகளையும் தடுத்து, அவற்றை போக்க உதவுகிறது. பூண்டில் அல்லிசின், சல்ஃபர், ஜிங்க் மற்றும் கால்சியம் போன்ற அத்யாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளதால் நோய் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்தி, ஆரோக்கிய நன்மைகளையும் அழகு நன்மைகளையும் வழங்குகின்றன. இதிலுள்ள செலினியம் சத்து புற்றுநோய்க்கு எதிராக போராடவும்,
வைட்டமின் இ சத்துடன் இணைந்து உடலின் ஆன்டி ஆக்சிடென்ட் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இரத்தத்தை மெலிதாக்க உதவும் சாலிசிகேட் சத்து பூண்டில் அடங்கியுள்ளது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதய சுற்றோட்ட ஆரோக்கியம் மேம்பட வைக்கிறது. மேலும் இதய நோய்களை தடுப்பது, நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, பல்வேறு புற்றுநோய்களை தடுப்பது என பலதரப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றது
- உடல் எடையை குறைக்க 3-4 பல் பூண்டுகளைதினமும் சாப்பிடலாம். இது உடல் எடை அதிகரிப்பின் ஆதி காரணத்தை கண்டறிந்து, அதனை களைய உதவுகிறது.மேலும் கெட்ட கொழுப்புகள் மற்றும் அடிபோஜெனிக் திசுக்கள் உடலில் உருவாவதை தடுத்து, தெர்மோஜெனிசிஸ் திசுக்களின் உருவாக்கத்தை அதிகரிக்கிறது.
- ஒரு முதிர்ந்த பூண்டில் உயிரியக்க சல்ஃபர் மற்றும் அல்லில் சிஸ்டெய்ன் போன்ற பொருட்கள் காணப்படுகின்றன. உடலில் இரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணமாக திகழ்வது சல்ஃபர் ஆகும். எனவே நாம் உயிரியக்க சல்ஃபரை உடலுக்கு அளிப்பதன் மூலம் உடலில் இரத்த அழுத்த அளவை ஒரு கட்டுக்குள் வைக்கலாம்.
- நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஒருவர் அல்லது சர்க்கரை நோயாளி, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைத்து, இன்சுலின் அளவை அதிகரிக்க பூண்டினை சாப்பிடலாம்.
- உடலில் ஏற்படும் இருமல் மற்றும் சளி போன்ற சாதாரண நோய்களைக் குணப்படுத்த வெற்றிலையின் காம்பு, பூண்டு, திப்பிலி, வசம்பு ஆகியவற்றை அரைத்து, வெந்நீரில் சேர்த்து கஷாயம் செய்து பருகலாம்.
- சமைக்கப்படாத 1-2 பூண்டுப்பற்களை, தினந்தோறும் உண்டு வந்தால், உடல் பருமனை அதிகரிக்கும் LDL கொழுப்பின் அளவைக் குறைக்கலாம் . வெள்ளைப்பூண்டில் காணப்படும் நீர் மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய உறுப்புகள், உடலில் கொலஸ்ட்ரால் சேர்வதை 20-60% குறைக்க உதவுகின்றன.
- வெள்ளைப்பூண்டு எல்லாவித இருதய நோய்களையும் தடுக்கும் தன்மை கொண்டது. பூண்டு, உடலின் கொலஸ்ட்ரால், ட்ரைகிளிஸெரைட் சீரம், பிளேட்லெட் திரட்டல் போன்றவற்றை குறைத்து, ஆன்டி ஆக்சிடென்ட் செயல்பாடுகளை அதிகரிக்க உதவுகிறது. மேலும் அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் குறைபாட்டிற்கு எதிராக போராடும் தன்மை கொண்டதாக வெள்ளைப்பூண்டு விளங்குகிறது
- எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த பச்சையான 2-3 பூண்டுப்பற்களை உண்ணலாம்.மேலும் எலும்பு முறிவு மற்றும் இளமையிலேயே ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் பூண்டை சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்த நோய்க்கு எதிராக போராடும் தன்மையைப் பெறலாம்.
- கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வெள்ளைப்பூண்டினை உட்கொள்வதால், உடல் எடை, உயர் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை போன்றவை கட்டுக்குள் இருக்கும். மேலும் அபாயகரமான நோய்களை தடுக்க உதவும்.
- கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டினை உண்பதால் பல நன்மைகள் விளையும். ஆனால், அளவு அதிகமானால் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். ஆகையால் உரிய மருத்துவ ஆலோசனைக்கு பின் உட்கொள்வது நன்மை உண்டாகும்.
- பூண்டில் காணப்படும் பைட்டோ ஊட்டச்சத்துக்கள், இயற்கையில் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் ஆகும். இவை உடலில் ஏற்படும் விஷத்தன்மையை போக்கி, ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. இந்த ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், உடல் நோய்தொற்றுக்கு உள்ளாவதை அல்லது DNA பிறழ்வுகள் மற்றும் தொந்தரவுக்குள்ளான செல் செயல்பாடுகள் போன்றவற்றை தடுக்கப் பயன்படுகிறது.
- மது பழக்கம் இல்லாத நபர்கள் சந்திக்கும் கல்லீரல் கொழுப்பு பிரச்சனையை போக்க பூண்டு பயன்படுகிறது. மேலும் கல்லீரல் அழற்சியை சரி செய்ய,இதிலுள்ள S-அல்லைல்கேப்டோசிஸ்டெய்ன் (SAMC) உதவுகிறது.
- பூண்டில் உள்ள டைஅல்லைல் டைசல்ஃபைடு, ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கவும், பூண்டிலிருக்கும் செலினியம் புற்றுநோய்க்கு எதிராக போராடவும், டிஎன்ஏ பிறழ்ச்சி மற்றும் கட்டுக்கடங்காத செல் பெருக்கம், மெட்டாஸ்டாஸிஸை தடுக்கவும் உதவுகின்றன.
- நம்மில் சில நபர்களுக்கு நீண்ட நேரம் தண்ணீர் உள்ள இடத்தில் இருந்தால், கால் மற்றும் பாதங்களில் பூஞ்சைத்தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டு. இத்தகைய ஒவ்வாமை உள்ளவர்கள் தங்களது உணவு முறைகளில் பூண்டினை சேர்த்து கொண்டால், அது ஒவ்வாமையை போக்கி விடலாம்.