வெள்ளரிக்காயின் நன்மைகள்
அனைத்து வகையான பழங்களும் காய்கறிகளும் பலவிதமான சுகாதார நன்மைகளை கொடுக்கின்றன அந்த வகையில் வெள்ளரிக்காயின் நன்மைகளை பார்ப்போம் .
வெள்ளரி காய்கள் இதை உண்பதால் உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற நோய் அதிக அளவில் வருவதில்லை , அதே நேரத்தில் வெள்ளரி காய்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது .
1) நீரேற்றம்
நீர் சத்து மற்றும் அதிக எலக்ட்ரோலைட்டுகளைக் கொண்டிருப்பதால் வெப்பமான நேரத்தில் இதை சட்டப்பிடால் உடலுக்கு நீர் சக்தியையும் ஆற்றலையும் கொடுக்கிறது பயணத்தின் பொது கூச்ச படாமல் வெள்ளரிக்காய் வாங்கி சாப்பிடுங்கள் . குடலை பராமரிக்க , மலசிக்கல் வராமல் இருக்க , சிறுநீரக கற்கள் வராமல் இருக்க நீர் சத்து மிக முக்கியம் .
2) எலும்பு ஆரோக்கியம்
வைட்டமின் k போதுமான அளவு உட்கொள்வது எலும்பை ஆரோக்கியமாக வைக்க உதவும் மற்றும் எலும்பு முறிவை குறைக்கும் .
ஒரு கப் வெள்ளரியில் 8.5 micrograms (mcg) வைட்டமின் K உள்ளது . 19 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் ஒவ்வொரு நாளும் 90 micrograms (mcg) வைட்டமின் K, மற்றும் ஆண்கள் micrograms (mcg) வைட்டமின் K வை உட்கொள்ள வேண்டும் என்று உணவு சப்ளிமெண்ட்ஸ் அலுவலகம் (ஓ.டி.எஸ்) பரிந்துரைக்கிறது. இதில் கால்சியமும் உள்ளது. வைட்டமின் கே கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்த உதவுகிறது. வைட்டமின் கே மற்றும் கால்சியம் எலும்பை உறுதி படுத்துகிறது .