[box type=”shadow” align=”” class=”” width=””]நமது அன்றாட உணவில் உடலுக்கு தேவையான பல சத்துகளை அளிக்க கூடிய காய்கள் அதிகம் இருக்க வேண்டியது அவசியம். தினமும் ஒவ்வொரு வகையான காய்கறிகளை நாம் சாப்பிடுவதால் நன்மைகள் அதிகம் கிடைக்கின்றன. அந்த வகையில் நாம் “வெண்டைக்காய்” சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.[/box]
- மூளையின் சுறுசுறுப்பாக இயக்கத்தை அதிகரித்து,அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்ய வெண்டை பேருதவி புரிகிறது. நமது நாட்டில் பல காலமாகவே வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும் என்கிற அடிப்படையில் இந்த காயினை அதிகம் சாப்பிட்டு வருகின்றனர். மேலும் கல்வி பயிலும் குழந்தைகள் இதனை அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் மூளை செயல் திறன் அதிகரித்து கல்வியில் சிறந்து விளங்க முடியும்.
- வயதானவர்க்களுக்கு ஞாபக மறதி ஏற்படுவது இயற்கையான ஒன்றாகும். எனவே வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வருவதால், மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டவும், அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும் முடியும்.
- நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்பொழுதும் வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.எனவே வாரத்திற்கு குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று முறையாவது வெண்டைக்காய் சாப்பிடுவதை வழக்கமாக வைத்து கொள்வது நன்மை பயக்கும்.
- நமது உடலில் மீண்டும் மீண்டும் உண்டாகும் புற்று நோய் செல்கள் வளரக்கூடியவை. இத்தகைய தீமையான செல்களை அழித்து, ஆரோக்கியமான செல்களை உடலில் வளர்ச்சி பெற செய்யும் ஆற்றல் வெண்டைக்கு. எனவே புற்று நோய் ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்களும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் அடிக்கடி வெண்டைக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.
- குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்த அளவில் பெற்றவர்கள், வெண்டை காயை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு உடலில் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
- தற்காலத்தில் பலருக்கும் வயிற்றில் குடற்புண், செரிமானமின்மை, வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமசீரற்ற நிலை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்சனை உள்ளவர்கள் அவ்வப்போது வெண்டைக்காய்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் நிவாரணம் கிடைக்கும்.
- கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் சிலருக்கு கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இந்த பிரச்னையை சரி செய்வதில் வெண்டைக்காய் சிறப்பாக செயல்படுகிறது.
- சிறுநீரகம் உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் அனைத்து வகையான நச்சுக்களையும் சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேறுகிறது. ஒரு சிலருக்கு பல காரணங்களால் உடலுக்கு தேவையான சத்துகளும் சிறுநீர் வழியாக வெளியேறி விடுகிறது. இதனால் தோன்றும் சத்துக்குறைபாடு வெண்டைக்காய் அடிக்கடி சாப்பிட்டு வருவதால் பெறலாம்.
- உடலின் தேவையான அளவு கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பின் அளவு இருக்க வேண்டியது அவசியம். எனவே உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் வெண்டைக்காயை, உடலில் கொலஸ்ட்ரால் சரியான அளவில் இருக்க விரும்புவார்கள் தாராளமாக சாப்பிடலாம்.
- உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அடிக்கடி எதையாவது சாப்பிடுவது தான். வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால், இந்த அதீத பசி உணர்வை குறைத்து, அளவுக்கதிகமாக சாப்பிட தூண்டும் உடல் வேட்கையை கட்டுப்படுத்தும்.
- வெண்டைகாய் சாப்பிடுவதால் உடலுக்கு அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும் அதே நேரத்தில் அதிகமான உடலின் எடையும் சீக்கிரமாக குறையும்.
- கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது. கர்ப்பத்தில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் போது குழந்தையின் நரம்புக் குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த ஃபோலிக் அமிலமானது மிகவும் அவசியம்.
- இந்தக் காயின் வழவழப்பில் உள்ள நார்ச்சத்து வயிற்றுப் புண்ணால் பாதித்தவர்களுக்கு அருமருந்து. இதைத்தவிர, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்தக் கூடியது.
- இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது.
- இதன் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் தன்மை, புற்றுநோய்க்குக் காரணமான செல்களின் வளர்ச்சியையும் தவிர்க்கக் கூடியவை.
- வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி, ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியது. இதில் உள்ள ஃபோலேட், எலும்புகளை உறுதியாக்கி, ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பைக் குறைக்கிறது.
- வெண்டைக்காய் ரத்த விருத்திக்கு உதவும் மற்றும் கொனோரியா எனப்படுகிற முழங்கால் வளைவுப் பிரச்னைக்கு உதவும்.