[box type=”shadow” align=”” class=”” width=””]பயிறு வகைகளில் மிக முக்கியமான சத்தான பயிறு பாசிப்பயிறு. இது பண்டைய காலம் முதல் இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் மழை காலங்களில் புஞ்சை நிலப்பயிராகவே விளைவிக்கப்படுகிறது. இதில் புரதம், கார்பொஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை அடங்கியுள்ளது. பாசிப்பயிறு கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவாகும். இதனால் கருவில் உள்ள குழந்தைக்கு செல்லும் உணவு ஊட்டச்சத்துள்ளதாக இருக்கும்.[/box]
முளைகட்டிய பயிரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
- உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாக இருக்கும்
- நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
- இரத்த அழுத்தத்தை சரியாகப் பராமரிக்கும்.
- கொழுப்பு அளவை குறைக்க உதவும்.
- முலைகட்டிய பயிறு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் அளவு அதிகரிக்கும்.இதனால் எப்பொழுதும் களைப்பின்றி வேலை செய்ய முடியும்.
பாசிப்பயிரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
- பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்தினால் வயிறு கோளாறு சரியாகும்.மேலும் இந்த தண்ணீர் சின்னம்மை மற்றும் பெரியம்மை, காலரா, டைபாய்டு போன்ற நோய்க்கு அருமறுந்தகிறது.
- பாசிப்பருப்பை அரைத்து உடலுக்கு தேய்த்து குளித்து வந்தால் சருமம் பொழிவு பெறும். தலைக்கு தேய்த்து குழித்து வருவதால் பொடுகு தொல்லை நீங்கும்.
- கீரைகளோடு பாசிப்பருப்பை சேர்த்து உணவாக உட்கொண்டால் உடல் குளிர்ச்சி அடையும். இதனால் உடல் வெப்பம் சீராக்கப்படும். இதனால் மூல நோய்கள் குணமாகும்.
- புளியங்கொளுந்துடன் பாசிப்பருப்பை சேர்த்துக் கடைந்து உணவாக உட்கொள்வதன் மூலம் உடலுக்கு பலம் உண்டாகும்.
- பாசிப்பருப்பு பொங்கல் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் மற்றும் பித்தத்தை குணமாக்கும்.
- பாசிப்பருப்பினை உணவுடன் சேர்த்து வந்தால் உடல் பருமன் கட்டுக் கோப்பாக இருக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதால் நோய் தாக்கும் அபாயம் குறையும்.
- சரும புற்று நோய்க்கு ஒரு சரியான மருந்தாக இது பயன்படுகிறது.எனவே இதன் பொடியை அல்லது மாவை குளியலுக்குப் பயன்படுத்தலாம்.
- குழந்தைகளுக்கு நன்றாக வேகவைத்து, கடைந்து அதனுடன் நெய் சேர்த்து கொடுத்து வந்தால் குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
- இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு பாசிப்பயிறு ஒரு சிறந்த உணவாகும். அன்றாடம் இதை உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் இரத்தச்சோகை நோய் ஏற்படுவதிலிருந்து நம்மை காத்து நிற்கும்.
- கால்சியம் சத்து குறைபாடு நோய்க்கு இது நல்ல உணவாகும். முதியவர்களில் ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு நோய் உள்ளவர்கள் இதை உணவாக எடுத்துக்கொண்டால் நோய் எளிதில் குணமாகும்.
- கோடைகாலம் முடிந்துவிட்டாலும் வாட்டி வதைக்கும் வெயிலால் பலருக்கு உடல்சூடு ஏற்படும் அல்லது சிலருக்கு இயற்கையிலேயே உடல் அமைப்பு சூடாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்துக் கடைந்து அதனுடன் சிறிது நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டு வந்தால் உடல்சூடு தணியும்.
[box type=”shadow” align=”” class=”” width=””]ஆகவே பாசிப்பயிரை உணவாக உட்கொள்வதன் மூலம் நாம் நீண்ட காலம் நோய் இல்லாமல் வாழலாம்.[/box]