மாம்பழத்தில் இருக்கும் 4 முக்கிய மருத்துவ குணங்கள்
மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும், சில சற்றே புளிப்பாக இருக்கும்.
உலகிலேயே மாம்பழம்தான் மற்ற எல்லாப் பழங்களையும் விட கூடுதலாக மக்கள் உண்ணும் பழம். மாப்பழத்தின் விளைச்சல் வாழைப்பழம், ஆரஞ்சுப்பழம் ஆகிய மற்றெல்லாப் பழங்களைக்காட்டிலும் கூடுதல் ஆகும். சரி மாம்பழத்தில் இருக்கும் மருத்துவ குணங்களை பார்ப்போம்.
1.மாம்பழத்தில் இருக்கும் 19 ஊட்டச்சத்துக்கள் அளவுகள்
RDI Reference Daily Intake கூற்றுப்படி ஒரு கப் (165 கிராம்) வெட்டப்பட்ட மாம்பழத்தில்
1.கலோரிகள்: 99
2.புரதம்: 1.4 கிராம்
3.கார்ப்ஸ்: 24.7 கிராம்
4.கொழுப்பு: 0.6 கிராம்
5.உணவு நார்: 2.6 கிராம்
6.வைட்டமின் சி: 67%
7.தாமிரம்: 20%
8.ஃபோலேட்: 18%
9.வைட்டமின் பி 6: 11.6%
10.வைட்டமின் ஏ: 10%
11.வைட்டமின் ஈ: 9.7%
12.வைட்டமின் பி 5: 6.5%
13.வைட்டமின் கே: 6%
14.நியாசின்: 7%
15.பொட்டாசியம்: 6%
16.ரிபோஃப்ளேவின்: 5%
17.மாங்கனீசு: 4.5%
18.தியாமின்: 4%
19.மெக்னீசியம்: 4%
இதில் பாஸ்பரஸ், பாந்தோத்தேனிக் அமிலம், கால்சியம், செலினியம் மற்றும் இரும்புச்சத்து சிறிய அளவில் உள்ளது.
2 . நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
மாம்பழங்களில் folate, வைட்டமின் K , வைட்டமின் A வைட்டமின் E மற்றும் வைட்டமின் C யை கொண்டுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மாம்பழங்கள் பெரிதும் உதவுகின்றன
நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு இந்த வைட்டமின்கள் தேவைபடுகிறது மற்றும் இந்த வைட்டமின் உங்கள் உடலில் நோய்களை எதிர்க்கும் வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்கவும் உதவுகிறது.
இதனால் நோய் எதிப்பு சக்தி அதிகமாக்க மாம்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது .
- கண்களுக்கு நன்மையளிக்கும் மாம்பழம்
மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் நம்முடைய கண்பார்வையை தெளிவாக இருக்க மாம்பழம் உதவுகிறது .
மாம்பழத்தில் லுடீன், ஜீயாக்சாண்டின் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன , லுடீன், ஜீயாக்சாண்டின் சூரியனிடம் இருந்து கண்பார்வையை பாதுகாக்கின்றன .
- முடி மற்றும் தேக ஆரோக்கியத்திற்கு உதவும் மாம்பழம்
மாம்பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது, இது நமது உடலில் ஆரோக்கியமான முடி வளர்வதையும் மற்றும் சருமத்தை மேம்படுத்த உதவுகிறது.
மேலும் வைட்டமின் ஏ மற்றும் பிற ரெட்டினாய்டுகள் உங்கள் சருமத்தை சூரியனிடம் இருந்து பாதுகாக்கின்றன.
இறுதி குறுந்தகவல்
மாம்பலத்தில் எண்ணற்ற பல நன்மைகள் இருந்தாலும் அதை பழுக்க வைக்க செயற்கை வழிமுறைகளை பின்பற்றுகின்றனர் ஆகவே அத்தகைய தீமைகளில் இருந்தும் விலகி இருப்பதும் அவசியம்.