பூச்சி கொல்லி விஷத்தின் பெயர்கள்

உணவே மருந்து தமிழ்

பூச்சி கொல்லி என்பது மனிதனுக்கும், பயிர்களுக்கும் பாதகமான பூச்சிகளை அழித்தல், தடுத்தல், விரட்டுதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்ட ஏதாவதொரு பொருளையோ பொருள்களின் கலவையையோ குறிக்கும்.

பூச்சிக்கொல்லிகள், பூச்சிகளின் வளர்ச்சிக் கட்டங்களின் பல மட்டங்களில் அவற்றைத் தாக்குகின்றன. எடுத்துக்காட்டாகச் சில பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளின் முட்டைகளையோ, அவற்றின் லார்வாக்களையோ அழிக்க வல்லவை.இவை வேளாண்மையிலும் மருத்துவத்திலும் தொழிலகத்திலும் பயன்படுகின்றன. இவை இருபதாம் நூற்றாண்டின் வேளாண் விளைச்சலைப் பெருக வழிவகுத்துள்ளன

பூச்சிக் கொல்லிகளுள் பல விவசாயத்தில் பயன்படும் வேதிப் பொருள்களாகும். இவை சுற்றுச் சூழல் மாசுபடுத்தும் பிரச்சினையையும் கிளப்பியிருக்கிறது. சில வேதிப் பொருள்கள் காய்கறிகளிலுள்ள திசுக்களில் சேர்ந்து மனிதரையும் பாதிக்கக்கூடிய அளவு நச்சுத்தன்மையை அடைகின்றன. இவ்வாறான நச்சுப்பொருள்கள், உணவுச் சங்கிலியில் செறிவடைந்து வருகின்றன. மேலும் சில பூச்சி மருந்துகள் இரண்டாம் நிலப் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திவிடுகின்றன.

விவசாய நிலங்களில் இவை பூச்சிகளை அழிப்பதோடு தேவையற்ற களைகளை அழிக்கவும், பூஞ்சைகளை அகற்றவும், நுண் உயிரினங்களை அழிக்கவும், எலிகள், பறவைகள் போன்றவற்றை விரட்டவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் தீவிரம் பூச்சிகளை மட்டுமல்ல அதை அடிக்கும் மனிதர்களையும் தாக்குகிறது.

பூச்சி கொல்லி பாதிப்புகள்

  • மலேரியா, டெங்கு போன்று கொசுக்களை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளும் நாள்பட்ட உடல் நல பாதிப்புக்கு காரணமாக அமைகிறது.
  • நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள், புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
  • பூச்சிக் கொல்லி மருந்துகள் மனச் சோர்வை ஏற்படுத்துகிறது.
  • மன நல கோளாறுகள், மன இறுக்கம், கவனக் குறைவு, நரம்பியல் கோளாறுகளும் ஏற்பட காரணமாகவும் உள்ளன.

 

  • விவசாயிகளின் நரம்பியல் பாதிப்பதோடு அவர்களின் உணர்திறனும் பாதிப்படைந்து உள்ளதை தெரிவித்து உள்ளது.
  • இந்த பூச்சிக் கொல்லி மருந்துகள் மூளையை மட்டுமல்ல மற்ற உடல் பாகங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நுரையீரல் செயலிழப்பு, கடுமையான கல்லீரல் பாதிப்பு, பிறப்பு குறைபாடுகள், நோய் எதிர்ப்பு சக்தியை முடக்குதல், ஒவ்வாமை, கண் மற்றும் சரும எரிச்சல், வாந்தி, தலைவலி, குமட்டல் மற்றும் பலவீனம் போன்ற ஏராளமான பாதிப்புகளையும் ஏற்படுத்திச் செல்கிறது.

சில பாதிப்பு விளைவிக்கக் கூடிய பூச்சிக்கொல்லிகளின் பெயர்கள் பின்வருமாறு

அல்டிகார்ப், அல்டிரின், பி.எச்.சி., கால்சியம் சயனைடு, குளோர் பென்சிலேட், குளோர்டேன், குளோர்பென்வின்பாஸ், காப்பர் அசிடோ ஆர்சினைட், பைபுரோமோ குளோரோ புரபேன், டைஎல்டிரின், என்டிரின், ஈதைல் மெர்குரி குளோரைடு, ஈதைல் பாரத்தியான், எத்திலீன் டைபுரோமைடு, ஹைப்டாகுளோர்.மெனாசான்,

மெட்டாக்சூரான், நைட்ரோபென, பாரக்குவாட் டை மீத்தைல் சல்பேட், பெண்டா குளோரை நைட்ரோ பெனசீன், பெண்டா குளோரோ பீனால், பீனைல் மெர்குரி அசிட்டேட், சோடியம் மீத்தேன் ஆர்சனேட், டிரைகுளோரோ அசிட்டிக் ஆசிட், டெட்ராடைபான், டாக்சாபீன் போன்றவை ஆகும்.