ரத்தத்தில் உள்ள கழிவுகள் மற்றும் கிருமிகளை அகற்றும் பணியை நமது உடலில் உள்ள நிணநீர் சுரப்பி செய்து வருகிறது. இந்தப் பணி முறையாக நடைபெறாத போது இயல்புக்கு மாறாக நிணநீர் சுரப்பி பெரிதாக விரிவடையும். இந்தக் காரணத்தால் உண்டாகும் பாதிப்பைத்தான் நெறிகட்டுதல் (Lymphadenopathy) எனக் குறிப்பிடுகின்றனர். தொடை இடுக்குப் பகுதியிலும் சிலருக்கு உடல் முழுவதும் நெறிகட்டுதல் உண்டாகும்.
உண்மையில் அவை, உடல் உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் ஏதாவது ஒரு நோயின் வெளிப்பாடாக இருக்கலாம். உடலின் எந்தப் பகுதியில் கிருமித்தொற்று ஏற்பட்டாலும், அதனருகே இருக்கும் `லிம்ப் நோடு’ (Lymph Node) எனப்படும் நிணநீர்க்கட்டி வீங்கிவிடும். கழுத்தின் பின்பகுதியில் தலைமுடிக்குச் சற்றுக் கீழே சிறு கட்டிகள் காணப்படும். தலையில் பேன், பொடுகு, வேனல் கட்டி போன்றவற்றால் இவை ஏற்படலாம். இந்த வகைக் கட்டிகள் அரை சென்டிமீட்டர் முதல் ஒரு சென்டிமீட்டர் அகலம்வரை இருக்கும். லேசாக உருளும் தன்மையுடன், சற்று வலுவாக இருக்கும். ஒன்றுடன் ஒன்று ஒட்டாது. தலையில் காணப்படும் பேன், பொடுகு போன்றவற்றை குணப்படுத்தினால், இவை தாமாக மறைந்துவிடும்.
இதேபோன்று தொந்தரவுகளை அனுபவித்த நமது காணொளியை பார்த்த ஒருவர் அவருக்கு இந்த நெறி கட்டி பிரச்சனை சரி செய்ய எடுத்துக்கொண்ட முறையினை நம்முடன் பகிர்ந்துள்ளார் அதைத்தான் இந்த காணொளி மூலமாக உங்களுக்கு பதிவிட்டுள்ளேன். பாருங்கள் பயன் பெறுங்கள்… உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்… #nextday360 #நெறிக்கட்டி