நம்மை மெதுவாக கொல்லும் மைதா.

நாம் அன்றாடம் உண்ணும் அல்லது குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கும் முக்கால்வாசி உணவு பதார்த்தங்கள் மைதாவில் செய்யப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை ,

நாம் தொற்றாத நோய் கூட்டங்களால் மாட்டிக்கொண்டு தவிர்த்துக்கொண்டிருக்கின்றோம் அதன் மூல காரணம் எது என்று தேடி பார்த்தால் நாம் உண்ணும் உணவு தான்.

 இரத்த சர்க்கரை நீரிழிவு  , கொழுப்பு , இதய நோய் , எடை அதிகரிப்பு உடல் பருமன் , அழற்சி,  செரிமானக்கோளாறு , புற்றுநோய் போன்ற வியாதிகளும் அதன் விளைவுகளும் கண்களுக்கு தெரிந்தால் அதன் மீது அக்கறை பிறக்கும் அல்லவா  ?  ஏனோ  அது நம் உடலுக்குளே  கண்களால் பார்க்கமுடியாத நோய்களாகி போய்விட்டன அதன் மீது நமக்கு அக்கறை இல்லாமலும் போய்விட்டது .

நாம் ஆரோக்கியத்திற்காக உணவு உண்ட காலம் போய் ருசிக்காக உணவு உண்ண ஆரம்பித்து விட்டோம்.

எந்த கடையில் என்ன ருசியில் உணவு கிடைக்கும் என்ற அட்டவணை நமது புள்ளிங்கோ கையில் உள்ளது.

” நாவால்  கெட்டான்  ” என்ற பழமொழிக்கேற்ப நாவினை கட்டுப்படுத்த முடியாத மனித இனம் நோயை கட்டுப்படுத்த மருந்துகளை கண்டு பிடிக்கிறது இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் மருத்துவமனைகள் அதிகமாகி போய் விட்டன .  அப்படி என்றால் என்ன காரணம்  நோய்கள் அதிகமாகி விட்டன என்று அர்ததம் .

என்னதான் இருந்தாலும்  நம் மக்களுக்கு அனைத்தையும் சொல்ல வேண்டியது நம் கடமையாகி போனது .

மைதா என்ற மாவில் இருந்து தயாரிக்கும் கேக்குகள் ,பிஸ்கட்டுகள் , பரோட்டாக்கள் , நூடுல்ஸ்கள் ,மற்றும் மைதாவில் செய்யப்படும் துரித உணவுகள் இவைகள் இன்று மிக பெரிய சந்தையை உருவாக்கியுள்ளது – மிக பெரிய வணிகம் இந்த மைதாவினால் நடக்கிறது இன்றைய தேதியில் சாலை ஓரம் இருக்கும் fast food  கடைகளில்  ஹோட்டல்களில் பரோட்ட்களாக  சந்துக்குளே  இருக்கும் கடைகளில் biscut  பாக்கெட்டாக , bakerry களில்  பண்ணாகவும்  கேக்காகவும் வளம் வரும் இந்த மைதாவிற்கு நாம் அடிமையாகி போனோம் என்றே தான் சொல்ல வேண்டும் .

நாம் நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்ன செய்கின்றோம் ?  ஒன்று சரக்கடித்துவிட்டு மள்ளாக்க படுத்துவிடுவது  இரண்டு ஹோட்டலுக்கு சென்று treat வைப்பது  இப்படி செய்தால்  மகழ்ச்சியாகிவிடுவோம் அல்லவா ?

அந்த மகிழ்ச்சி தரும் சோகத்தை இப்போது பார்ப்போம்  மைதா ஏற்படுத்தும் பின்விளைவுகளை காண்போம் .

உடல் எடை அதிகரிப்பு

நாம் ஒரு உணவை உட்கொண்டால் அந்த உணவு நம்மை போதும் என்று உணர வைக்கவேண்டும் அப்படி உணர வைக்கும்   micro and macronutrients  மைதாவில் இல்லை ஆதலால் அளவுக்கு மீறி மைதா வை உட்கொள்ளுகின்றோம் . ஒரு ஆய்வு 3000 பேர்களிடம் நடத்த பட்டுள்ளது 12 வாரங்களுக்கு முன்னத்தாக அவர்களின் எடையும் , cholesterol levels  குறித்து வைத்து கொண்டனர் . 12 வாரங்களில் அவர்களுக்கு ஒரு வேலை  உணவாக JUNK FOOD கொடுக்கப்பட்டுள்ளது  அந்த JUNK FOOD  முழுவதும் மைதாவால் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது , 12 வாரங்கள்  கழித்து 3000 பேரின் உடல் எடை அதிகளவு உயர்ந்துள்ளது காரணம் கொழுப்பு அதிகரித்தது தான் ஆம்  அவர்களின் cholesterol levels அதிகப்படியாக உயர்ந்துள்ளது .

இரத்த சர்க்கரை நீரிழிவு

பீட்டா செல்கள் இரத்தச் சர்க்கரை என்கின்ற குளுக்கோசு செறிவினால் தூண்டப்படுகின்றன. சர்க்கரை அளவு கூடும்போது பீட்டாசெல்கள் இன்சுலினைச் சுரக்கின்றன; சர்க்கரையளவு குறையும்போது இன்சுலின் சுரப்பது நிறுத்தப்படுகிறது போதுமான அளவு இன்சுலின் சுரக்காவிடில் தசைகள், கல்லீரல் இவற்றால் குளுக்கோஸை, கிளைகோசனாக மாற்ற இயலாது.

இதன் விளைவாக இரத்தத்தில் குளுக்கோசு அதிக அளவு சேர்வதால் இரத்தச் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கிறது. இந்த மிகைச் சர்க்கரை நிலைக்கு மிகை குருதிக்குளுகோசு என்று பெயர்.  நாம் உண்ணும் மைதாவினால் செய்யப்படும் பொருட்கள் இந்த பீட்டா செல்களை செயலிழக்க செய்கிறது ஆகவே இன்சுலின் சுரப்பதும் குறைந்து விடுகிறது இந்த நிலை  இரத்த சர்க்கரை நீரழிவை ஏற்படுத்துகிறது.

இருதய நோய்.

அதிக அளவு சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை உட்கொள்வது நமது இதய நோய்க்கான அபாயத்தை அதிகரிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன, அதே நேரத்தில் பல பெரிய அளவிலான ஆய்வுகள் மற்றும் மெட்டா பகுப்பாய்வுகள் அதிக தானியங்களை சாப்பிடுவது இருதய நோயிலிருந்து பாதுகாக்கும் என்பதைக் காட்டுகின்றன. (சுத்திகரிக்கப்பட்ட கோதுமை தான்  மைதா )

புற்றுநோய்.

முறையற்ற இன்சுலின் சுரப்பு மற்றும் உடலுக்கு ஒவ்வாத ரத்த சர்க்கரை அளவின்  மாற்றங்கள் புற்றுநோய் செல்களை வளர வைக்கின்றன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது  ஆகவே மைதா  மாவு மற்றும் வெள்ளை மாவுகளில்  செய்யப்பட்ட  தயாரிப்புகளை  உட்கொள்ளுவதை தவிர்க்க  பரிந்துரைக்கின்றன

இது முக்கியமான நோய்கள் தான் ஆனால் இதை விட முக்கியம் இதயநோய்  மைதாவிற்கு

இதயநோய்க்கும்  சம்பந்தம் இல்லை என்று மட்டும் நினைத்திட வேண்டாம் .

எதையும் முற்றிலுமாக நிறுத்த முடியாது ஆனால்  குறைத்து கொள்ள முடியும் முடிந்த வரை மைதா தயாரிப்புகளை குறைத்து கொள்ளுங்கள்

அதற்கு முன்பு  எந்த எந்த பொருட்கள் மைதாவில் செய்கின்றனர் என்று  இணையத்தில் தேடி  தெரிந்து கொள்ளுங்கள் .

இந்த தகவல்களை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்