துரித உணவின் ஆபத்து என்ன?

துரித உணவின் ஆபத்து என்ன?

பரோட்டோ, நூடில்ஸ், பன், சமோசா,பீசா,குல்சா,பர்கர் போன்றவற்றில் நார்ச்சத்து என்பது இருக்காது. மேலும் துரித உணகளில் சேர்க்கப்படும் சாயம் மற்றும் அஜினோமோட்டோ போன்ற வேதிப் பொருட்கள் நமது குடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் கொலஸ்ட்ரால் கூடுவதற்கும் காரணமாக இருக்கிறது.

ஏற்படும் தீமைகள்

1. துரித உணவுகள் சாப்பிடுவதாலும், உடற்பயிற்சி செய்யாததாலும் நீரழிவு நோய் ஏற்படும் .இதில் அலட்சியம் காட்டினால் உடலின் மற்ற உறுப்புகள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

2. ஞாபக சக்தி குறைவு, கவனக்குறைவு, திட்டமிட்டு செயற்படும் திறன் குறைவு எனப் பல பிரச்சினைகள் ஏற்படும்.

3.தலைவலி, மனச்சோர்வு,உடற்சோர்வு, உடல் எடைஅதிகரிப்பு போன்ற வியாதிகளும் உண்டாகும்.

 4. உணர்ச்சிகள் கட்டுக்குள் இல்லாமை, வயிற்றுவலி,மூட்டுவலி நாக்கு வீங்குதல் ஏற்படுவதுடன் நரம்பு செல்களும் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும்.

5.இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சிறுவயதிலேயே பருவமடைகின்றனர். இதற்குப் பல காரணங்கள் உண்டு. எனினும் நம்முடைய உணவுப் பழக்கத்திற்கு அதில் முக்கிய இடம் உண்டு.பெண்கள் பருவமடைவதற்கு காரணமான ஈஸ்ட்ரோஜன் எனும் ஹோர்மோனை அதிகம் சுரக்கச் செய்வதில் பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளுக்கு முக்கிய இடம் உண்டு.

கொலஸ்ட்ரால் என்றால் என்ன?