காய் வகைகளில் குறைந்தது நான்கு நாட்கள் வைத்து சமையலுக்கு பயன்படுத்த உகந்த இந்தியாவில் மிகவும் பொதுவான காய் இந்த கொத்தவரங்காய் ஆகும்.மேலும் இவை இளம் காய்களாக கிடைக்கும்போது சிறந்தது.
1.கொத்தவரங்காயின் ஆரோக்கிய நன்மைகள்
இந்தக் காய்களில் கலோரிகள் குறைவாக உள்ளது. ஆனால் ஊட்டச்சத்தின் ஒரு சக்தி, புரதங்கள், நார்ச்சத்துக்கள்,வைட்டமின் K, வைட்டமின் C, வைட்டமின் A, ஃபோலியேட்டுகள் மற்றும் ஏராளமான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. மேலும் பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, பொட்டாசியம் ஆகியவை காணப்படுகின்றன.கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புகள் இல்லை.
2.இரத்த சோகையைத் தீர்க்கிறது
இரத்த சோகைக்கான வாய்ப்புகளை குறைக்க இரும்பு கரையக்கூடிய மற்றும் உறிஞ்சக்கூடிய வடிவத்தில் இருக்க வேண்டும்.கொத்தவரங்காய் இரும்பின் முக்கிய மூலமாகும்.மேலும் உங்கள் உடலில் உள்ள இரும்பை கரையக் கூடிய வடிவத்தில் உறிஞ்ச உதவுகிறது.
3.நீரிழிவு நோயாளிகளின் கவனத்திற்கு
கொத்தவரங்காய்களில் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் கில்கோனியூட்ரியண்ட்ஸ் உள்ளன.எனவே, நீங்கள் அவற்றை சாப்பிடும்போது இரத்த சர்க்கரை அளவுகளில் விரைவான ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்த வாய்ப்பில்லை. நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், இந்த கொத்தவரங்காய் உணவை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
4.இருதய ஆரோக்கியத்திற்கு வழங்கும் நன்மை
கொத்தவரங்காய் நார்ச்சத்துடன் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும். இந்த குறிப்பிட்ட காய்கறியில் உள்ள பொட்டாசியம், நார்சத்து மற்றும் ஃபோலியேட் ஆகியவை இதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கான பாதுகாப்பை கூடுதலாக உறுதி செய்கின்றது.
5.எலும்பை வலிமையாக்கும் கொத்தவரங்காய்
கொத்தவரங்காயில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் எலும்புகளை பலப்படுத்துவதோடு எலும்பு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
6.நலமான இரத்த ஓட்டம்
கொத்தவரங்காய் கொண்டுள்ள இரும்புச்சத்து ரத்த சிவப்பனுகளில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரித்து இரத்தத்தின் ஆக்ஸிஜன் கடத்தும் திறனை மேம்படுத்துகிறது. எனவே சிறந்த இரத்த ஓட்டத்தை தருகிறது எனலாம்.
7.கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமிலத்தின் பயன்
ஃபோலிக் அமிலத்தைப் பெறுவதற்கான சிறந்த முறையாக இருப்பதால், கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு கொத்தவரங்காய் உட்கொள்வது மிகவும் நல்லது.இத னால் ஏராளமான பிறப்பு பிரச்சினைகள் மற்றும் கர்ப்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக இருக்கலாம்.மேலும் கருவில் பெண் குழந்தையாக இருப்பின் இரும்பு மற்றும் கால்சியம் குறைபாடுகளை பூர்த்தி செய்ய கொத்தவரங்காய் உதவும்.
கொத்தவரங்காய் கறி, வேகவைத்த, பொரியலாக என உட்கொள்ளப் படுகிறது. கருவில் ஆரம்பித்து வயது முதிர்ச்சி வரை நமக்கு தேவையான ஏதாவது ஒரு நன்மை அடங்கியுள்ள இந்தக் கொத்தவரங்காயை உண்டு நோய் இன்றி நல்வாழ்வை வாழுங்கள்.