சராசரியாக ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறதோ அதை விட கர்ப்பகாலத்தில் 350-500 கலோரிகள் அதிகமாக தேவைப்படும். அந்த காலகட்டத்தில் பெண்களுக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் இல்லை என்றால் குழந்தை வளர்ச்சி என்பது பெரும் அளவில் பாதிக்கப்படும். அதே நேரத்தில் அளவுவிற்கு அதிகமாக ஊட்டச்சத்துக்கள் உடல் எடையை மிக அதிகமாக கூட்டி விடும்.இது கர்ப காலத்தில் பெண்களுக்கு பெரும் பிரச்சனையாக அமையும். கர்ப்பிணிகள் உண்ணும் சில உணவுகளில் கருச்சிதைவையோ அல்லது கரு வளர்ச்சியில் பாதிப்பையோ ஏற்படுத்தும். எனவே ஒவ்வொரு முறையும் கர்ப்பிணி பெண்கள், அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
கர்ப்பிணிகள் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. அரை வயிறுதான் சாப்பிட வேண்டும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. இது முற்றிலும் தவறு. அப்படியாக அரை வயிற்றுக்கு சாப்பிட்டால், பிரசவத்தின்போது கருச்சிதைவோ, குறைப்பிரசவமோ நிகழும்.அதேவேளையில் `இரண்டு பேருக்கு சாப்பிட வேண்டுமே?’ என்று ஊட்டமாக சாப்பிட்டாலும், சங்கடம்தான். அதிலும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் அதிகபட்சம் பத்து கிலோ எடைவரையில் கூடுதலாக இருக்கலாம். அதற்குமேல் அதிகரிக்க கூடாது. கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவது அவர்கள் சந்திக்கும் சூழ்நிலையும், உண்ணும் உணவுகளும் தான். கர்ப்ப காலத்தில் ஒரு சில உணவுகளின் மனம் கர்ப்பிணி பெண்ணுக்கு குமட்டலை ஏற்படுத்தும்.
இதற்கு முக்கிய காரணம், கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினாலே ஆகும். அதுவும் முக்கியமாக எஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் கர்ப்பத்தின் முதல் நிலையில் சுரக்க, இதனால் கர்ப்பிணிகளுக்கு குமட்டல் என்பது காணப்படுகிறது. எனவே கர்ப்பிணிகள் ஒரு சில ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துக்கொண்டு தவிர்ப்பது மிகவும் நல்லது.
சாப்பிட வேண்டிய பொருட்கள்
- பால் பொருட்கள்
- பருப்பு வகைகள்
- சீனி கிழங்கு/ சக்கரைவள்ளி கிழங்கு
- சால்மோன் மீன்கள்
- அவித்த முட்டைகள்
- ப்ரோக்கோலி மற்றும் பச்சை இலைகள்
- பெர்ரி பழங்கள்
- தானியங்கள்
- அவக்கோடா
- உலர் பழங்கள்
கர்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
- சமைக்காத பச்சை கறிகளான சிக்கன் மட்டன் என எதையும் பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது டோக்ஸா பிளாஸ்மோசிஸ் எனும் வியாதியை ஏற்படுத்த வழி வகுக்கும். அதற்கான வாய்ப்புகள் குறைவு தான் என்றாலும் அதை தவிர்த்து விடுவது நல்லது.
- பொதுவாக பால்கள் விற்பனைக்கு வரும் போது பேஸ்டரைஸ்டு எனப்படும் 100 டிகிரி செல்சியஸிற்கு மிதமான சூட்டில் சுட வைக்கப்படும். பெரும்பாலான பாக்கெட் பால்கள் இவ்வாறு தான் வருகிறது. இந்த முறையின் போது பாலில் உள்ள சில கேடு விளைவிக்கும் பாக்டிரீயாக்கள் அழிந்து விடுகின்றன. நேரடியா கறக்கப்பட்ட பாலில் இது அழிவது இல்லை. அதனால் நீங்கள் சுட வைக்காத பாலை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
- அதிகமான விட்டமின் ஏ உள்ள அசைவ உணவில் ஈரல் உணவை தவிர்த்து விடுங்கள். அதிகமான விட்டமின் ஏ என்பது வயிற்றில் உள்ள குழந்தையை பாதிக்கும். அதனால் அந்த உணவை தவிர்த்து விடுவது நல்லது. வேறு உணவுகள் மூலம் அந்த விட்டமின் ஏ வை பெற்றுக்கொள்ளலாம்.
- கர்ப்பிணிகள் அதிகம் டீ, காபி அருந்தக்கூடாது. கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் மாறக்கூடும்.
- பொதுவாக எண்ணெய், அதிக மசாலா-காரம் செறிந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
- துரித உணவகங்களில் தயாரிக்கப்படும் உண்வு வகைகளையும் பதப்படுத்தப்பட்டு கேன்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பால் பொருட்களை சாப்பிடக்கூடாது.
- ஆட்டுக்கறி, கோழிக்கறி, மற்றும் இதர அசைவ உணவுகள், முட்டை & பால் பொருட்கள் ஆகிய உணவுகளை பாதி வேக்காட்டில் சமைத்து சாப்பிடக் கூடாது.
- பதப்படுத்தப்பட்டு பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள் காலாவதியாகியிருந்தால் அவற்றை குடிக்ககூடாது.
- உடலுக்கு குடைச்சல் தரும் வாய்வு உணவுபொருட்களான வாழைக்காய், உருளைக்கிழங்கு, இறால்மீன் போன்றவைகளை அறவே தவிருங்கள்.
- அதிக காரம் மற்றும் சோடியம் கொண்ட ஊறுகாய் போன்ற உணவுகள், ஜாம், ஜெல்லி, பப்படம் போன்ற உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.
- உப்பு அதிகமுள்ள உணவுகளை உண்பது கர்ப்பகால ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல.
- பேரிச்சை பழத்தில் அதிக அளவிலான இயற்கை சர்க்கரை நிரம்பியுள்ளது. கர்ப்ப கால சிக்கலை தவிர்க்க, நீங்கள் இதை கட்டாயம் இதை தவிர்க்க வேண்டும்.
- கர்ப்பகாலத்தில் வாழைப்பழத்தை தவிர்த்து கொள்வது சிறந்தது.
- திராட்சை கொடிகள் மீது தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளின் அளவு அதிகமாக இருப்பதன் காரணமாக திராட்சைகளை தவிர்க்க வேண்டும்
- கர்ப்ப காலத்தில் சீஸை தவிர்ப்பதே சிறந்தது. அதிலும் மிகவும் மென்மையான சீஸ் வகைகளில் பாக்டீரியாக்கள் அதிகமிருக்கும். அவை கருவின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியவை.
- தெருவோர கடைகளில் விற்கும் பண்டங்கள், பாக்கெட் உணவுகள், ஜூஸ் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது.