கருப்பட்டி ஆப்பம்

கருப்பட்டி ஆப்பம் செய்ய தேவையான

பொருட்கள்

பச்சரிசி ஒரு கப்

புழுங்கலரிசி ஒரு கப்

உளுத்தம்பருப்பு கால் கப்

வெந்தயம் ஒரு டீஸ்பூன்

கருப்பட்டி பொடித்தது 2 கப்

புளிக்க வைத்த இளநீர் அரை கப் எண்ணெய் சிறிதளவு

செய்முறை 

  • அரிசி பருப்பு வெந்தயம் மூன்றையும் சேர்த்து ஊறவையுங்கள்
  • ஒரு மணி நேரம் நன்றாக ஊறிய பிறகு அரைத்துக்கொள்ளுங்கள்
  • இளநீரை முதல்நாளே வாங்கி வைத்து புளிக்க வைக்க வேண்டும் .
  • புளித்த  அந்த இளநீரை மாவில் ஊற்றி மாவை கரைத்து வையுங்கள் 6 முதல் 8 மணி நேரம் மாவு புளிக்க வேண்டும்
  • கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள்
  • கொதித்ததும் அப்படியே சூடாக வடிகட்டி மாவில் கரைத்துக்கொள்ளுங்கள்
  • நன்கு கரைத்த மாவை ஆப்பச் சட்டியில் லேசாக எண்ணெய் தடவி மாவை ஊற்றி வேக  வையுங்கள்
  • வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள் .

இந்த உணவில் இருக்கும் ஆரோக்கியத்தை இப்பொழுது பார்ப்போம் முதலில்

கருப்பட்டியின் நன்மைகள் 

இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது இது ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது மற்றும் இதை  தவறாமல் உட்கொண்டால் இரத்தசோகையை சரிசெய்கிறது . இதில் மெக்னீசியம் நிறைந்துள்ளது அது நரம்பு மண்டலத்தை சீராக உதவுகின்றது.

இதில் கால்சியம் இருப்பது வலுவான எலும்புகளை உருவாக்கும் மற்றும் பராமரிக்கவும் உதவுகிறது

இதில் இருக்கும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

கருப்பட்டி பல நன்மைகளைக் கொண்டுள்ளது இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது இதனால் ரத்தம் தொடர்பான மற்றும் பிற கோளாறுகளை வரவிடாமல் தடுக்கிறது.

வெந்தயம் 

குழந்தை பெற்றுள்ள தாய்மார்களுக்கு அதிகம் பால் சுரக்க இந்த வெந்தயம் பயன்படுகிறது இரத்த சர்க்கரை அளவே சீராக வைக்கிறது.

உளுத்தம் பருப்பு 

உளுத்தம் பருப்பில் நார்ச் சத்து அதிகம் உள்ளது இது செரிமானத்திற்கு சிறந்தது .

இதில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இதயத்தை பாதுகாக்கும் சக்தி கொண்டது இதிலிருக்கும் இரும்பு சத்து ஆற்றலை அதிகரிக்கிறது.