கடலைப்பருப்பு

கடலைப்பருப்பை நாம் நாள்தோறும் எடுத்துக்கொள்ளும் பொழுது நமது சரும பாதுகாப்பு,வளர்ச்சி,நோய் எதிப்பு தன்மை,வலிமையான எலும்பு மற்றும் நரம்பு ஆகியவற்றை பெற முடியும்.அவற்றைப் பற்றி இங்கு விரிவாக காணலாம்.

கடலைப்பருப்பில் உள்ள சத்துக்கள்

இதில் புரதம்,குறைந்த கொழுப்பு,தாதுஉப்புக்கள்,கார்போஹைட்ரேட்,நார்ச்சத்து, கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்புச்சத்து,பொட்டாசியம்,வைட்டமின் C ஆகியவை காணப்படுகின்றன.

சரும பாதுகாப்பு

கடலை பருப்பு அதிகம் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் எளிதில் ஏற்படாது. தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை போன்ற பாதிப்புகளை விரைவில் நீக்கும் தன்மை இதற்கு உண்டு. தோலில் சுருக்கங்கள் ஏற்படும் தன்மையையும் குறைக்கும்.

உடல் வளர்ச்சி அடைய

கடலை பருப்பில் உடலில் வலிமையான தசைகள் மற்றும் அவற்றின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான புரதச்சத்து அதிகமாக உள்ளது.புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது.

நோய் எதிர்ப்பு ஆற்றல்

கடலை பருப்பில் உள்ள வைட்டமின் C மற்றும் இதர தாது சத்துகள் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ஆன்டிஆக்ஸிஜன்டாக செயல்பட்டு உடல்நலத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கிறது.

இதய நலம் கண்காணிக்க

கடலை பருப்பில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து ஆகியவை இதயநலத்தை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. நார்ச்சத்து கொழுப்பு சேகரமாவதைத் தடுக்கிறது. எனவே கடலை பருப்பை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்படும்.

நல்ல செரிமானம் மற்றும் எடை அதிகரிப்பு

கடலை பருப்பில் எளிதில் செரிமானமாக கூடிய புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களின் சுரப்பை தூண்டி சாப்பிடும் உணவு எளிதில் செரிக்கச் செய்கிறது. இதனால் வயிற்றில் புண்கள், மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. கடலை பருப்பு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீக்கிரத்தில் கூடும்.

வலிமையான எலும்புகள்

கால்சியம், மக்னீசியம் ஆகிய இரண்டு தாதுகளும் நரம்புகள் மட்டுமன்றி எலும்புகளின் வளர்ச்சிக்கும் மிகவும் தேவையான சத்துக்கள் இதில் உள்ளது.மேலும் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துகள் கடலை பருப்பில் உள்ளதால் இதை சாப்பிட்டு வரும் நபர்களுக்கு எலும்புகள் வலிமை பெறும்.

தலைமுடி

நமது தலையை அதிக வெப்பம் மற்றும் குளிரிலிருந்து காக்கும் கவசமாக தலைமுடி இருக்கிறது. இவை உதிராமல் இருப்பதற்கு நாம் உண்ணும் உணவில் புரத சத்து அதிகம் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். கடலை பருப்பை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடலில் புரத சத்து சேர்ந்து தலைமுடி உதிராமல் பாதுகாக்கப்படும்.

நரம்புகள்

கடலை பருப்பில் மக்னீசியம், கால்சியம் போன்ற சத்துகள் அதிகமுள்ளது. மக்னீசியம் எலும்புகளின் மேற்பரப்பில் இருப்பதால், அவை கால்சியம் நரம்பு செல்களுக்குள் நுழைவதைத் தடுப்பதுடன், இரத்த நாளங்கள் மற்றும் தசைகளில் இருக்கும் இறுக்கத்தை தளர்த்துகிறது. இதனால் நரம்பு தளர்ச்சி மற்றும் வாத நோய்கள் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது.

சர்க்கரை நோய்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுலபத்தில் உடல் பலத்தையும், ரத்தத்தில் அவசியமான சத்துக்களையும் இழந்து விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு கடலை பருப்பு கலந்து தயாரான உணவுகள் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது.

நமது பாரம்பரிய சமையலில் கடலைப் பருப்பு ஆனது உணவு பொருட்களை தாளிப்பதில் தொடங்கி கீரைகள்,கூட்டுகள்,குழம்பு வகைகள் போன்ற எராளமான வழிகளில் ஏற்கனவே பயன்படுத்துகிறார்கள். இங்கு இன்று முதல் இதன் நன்மைகளை இன்றைய தலைமுறையினரும் தெரிந்து கொண்டு சமைக்கலாம்.