இரத்த சோகையை சரி செய்யும் பசலைக்கீரை

உணவே மருந்து தமிழ்

அனைத்து தாவரங்களும் நிறைய மருத்துவ குணம் கொண்டது. மிகவும் சாதாரணமாக காணப்படும் இந்த வகை தாவரங்கள் மனிதர்களான நமக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் மருந்தாகிறது.

பொதுவாக  நாம் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, யானை, குதிரை, ஒட்டகம், மற்றும் சில வளர்ப்பு பிராணிகளுக்கு நோய்கள் வந்தால் கால்நடை மருத்துவரிடம் செல்லுவோம். ஆனால் இந்த மருத்துவம் செல்லும் உயிரினங்கள் வெறும் 3 சதவீதம் மட்டுமே மற்ற 97 சதவீத உயிர்களுக்கான மருதுக்கடை தான் இந்த தாவரங்கள். இங்கு நாம் பசலைக் கீரையைப் பற்றியும் அதன் பயன்களை பற்றியும் காண்போம்.

கொடிப்பசலை தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இதன் பூர்வீகம் அமரிக்கா, பின் ஆப்பிரிகாவுக்கும் இந்தியாவுக்கும் பரவியது. இதை வீட்டுப்பந்தல்களில் கீரைக்காகவும், அழகுக்காகவும் கிராமங்களில் வளர்க்கிறார்கள். வாழ்க்கைக்கு மிகவும் ஆதரமாக இருப்பவை கீரைகள். அவை நீண்ட ஆயுளைப் பெறுவதற்கு உதவுகின்றன. வாழ்க்கைக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஊட்டச் சக்தியாக கீரைகளிலும் காய்கறிகளிலும் இயற்கை நமக்கு வழங்குகிறது.

பசலையில் செடிப்பசலை என்ற இனம் உண்டு. இது குத்துச் செடியினம். இது இலங்கையிலிருந்து வந்ததால் சிலோன்கீரை என்றும் அழைப்பர். இதன் இலைகள் சிறிதாக எதிர் அடுக்கில் இருக்கும். இதன் தண்டைக் கிள்ளி வைத்தால் வளரும். தரைப்பசலை என்பது தரையில் படர்ந்து வளரும்.

இலைகள் சிவப்பாகவும் பசுமையாகவும் இருக்கும். குணம் எல்லாம் ஒன்று தான். கொடிப்பசலையின் இலைகள் பச்சையாகவும், வட்டமாக நீண்டு இருக்கும். கொடியை வெட்டி வைத்தால் வளரும். விதை மூலமும் வளரும்.

  • பசலைக்கீரை இலையாக அமைந்த உணவாகும்.அதில் இரும்பு சத்து ஏராளமாக உள்ளது. எனவே இரத்தம் குன்றியுள்ள மற்றும் ரத்தசோகை நோயாளிகளுக்கு அது மிகவும் நன்மை தருகின்றது.
  • பசலைக்கீரை மிகுந்த ஊட்டச்சத்து உள்ளது. இதில் பெரும் அளவில் வைட்டமின் சத்துக்கள், சுண்ணாம்புச்சத்து ,இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு உதவும் சிவப்புச்சத்து (ஹிமொகுளோபின்) உள்ளது.

 

  • நம்மைப் பேணிப் பாதுகாக்கும் புரதங்களைப் பலப்படுத்தும் அமிலங்கள் உள்ளன.அதில் காரசத்துள்ள தாதுப் பொருள்கள் ஏராளமாக உள்ளன. ஆதலால் அது தொத்து நோயிக்கு எதிர்பான தடுப்புச் சக்தியை மிகவும் ஆற்றலுடன் கொடுக்கிறது.
  • பசலைக்கீரையை உட்கொண்டால் எரிச்சலூட்டும் ஒரு வகை நச்சு அமிலச்சத்து மிகமிகச் சிறிய அளவில் உண்டு. தண்ணீரில் கரையக்கூடிய ஒரு வகைப் புரதச்சத்தும் இதில் மிகமிகச்சிறிய அளவில் உண்டு.

 

  • ஆனால் வைட்டமின் சத்துக்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி ‘ ஆகியனவும், பொட்டாசிய உப்பின் காரச்சத்தும் ஏராளமாக உள்ளன. வைட்டமின் ‘ஏ’ பார்வைக் கோளாரைக் குணப்படுத்தும், இரத்த விருத்தி உண்டாக்கும்.
  • இரும்புச் சத்து மிகவும் சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது. சோடியம், போலாசின், கால்சியம் உள்ளன. ஆனால் கொழுப்பு சத்துக்கிடையாது. எனவே பசலைக்கீரை மிகவும் சுலபமாக செரிகின்றது,

 

  • உடலுக்கு குளிர்ச்சி தருகின்றது. ஊட்டச்சத்து உள்ளது. எரிச்சலைத் தணிக்கின்றது.
  • பித்தம், நீர்தாரை, வெட்ட நோய்கள் போன்றவை குணமாகின்றன. தோல் நோய்கள், சீதபேதி குறைகின்றது. இதன் இலைச் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க நீர்கோவை குணமாகும்.
  • இந்தக் கீரை சாப்பிடும் போது தாது கெட்டியாகி, மூளைக்கு சக்தியைக் கொடுக்கும். இலையை வாட்டி தலையில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.

 

  • இந்த கீரையை சிறிதளவு தண்ணீரில் சமைக்க வேண்டும். சமைத்த பின் தண்ணீரை வெளியில் கொட்டிவிடக் கூடாது ஏனெனில் அதில் மிகுந்த ஊட்டச்சத்துப் பொருள்கள் உள்ளன. மிளகு, பூண்டு, தக்காளி சேர்த்து ரசம் வைக்கலாம்.
  • பசலைக்கீரையின் இளம், மென்மையான முளைகளைச் சமைக்காத பச்சடிகளில் பயன்படுத்தலாம்.

 

  • இவற்றைப் பச்சடிக் கீரையின் கொழுந்துகளுடன் செர்த்துக் கொள்ளலாம். இது நல்ல பசியைத் தூண்டிவிடுகின்றது. பருப்புகளுடன் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளும் கீரை வகைகள் மிகவும் நன்மை தருகின்ற முக்கியமான கீரை வகையாகும்.
  • பசலைக்கீரை மலத்தை நன்றாக இளகச் செய்கின்றது. எரிச்சலைத் தணிக்கின்றது. திசுக்களின் சிதைவை இது குறைக்கின்றது.
  • உடல் வறட்சிக்கு எதிரான பெரிபெரி என்னும் வீக்க நோயிக்கு எதிரான, கரப்பான் வியாதிக்கு எதிரான சத்துக்கள் கணிசமான அளவில் உள்ளன. கொழுந்தாக உள்ள கொடிச் சுருளைப் பச்சையாகவே உண்பது மிகுந்த நன்மையைத் தருகின்றது.

 

  • நீரிழிவு, இரத்தக் குறைவு, கால் விரல்களில் உள்ள வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பசலைக்கீரை மிகவும் உதவுகின்றது.
  • பாலைக் கீரைச்சாறு, சிறுநீரில் கற்கள் இருந்தால் அவற்றைக் கரைத்து வெளியேற்றும் சக்தி அதற்கு உள்ளது. சிறுநீரகக் கோளாறுகளையும் இது அகற்றுகின்றது. இதன் சாற்றைக் கொப்பளித்தால் தொண்டைப்புண் குணமாகின்றது.
  • ஒரு பத்து இலைகளை கசாயம் வைத்து அருந்தினால் காய்ச்சல்கள், கல்லடைப்பு, சுவாசப்பைகளிலும், குடல்களிலும் ஏற்பட்டுள்ள வீக்கங்கள், சுவாசிப்பதில் சிரமம், வேகமாக இயங்கும் சுவாசம் ஆகியவை குணமாகின்றன.

 

  • மேலும் இத்தகைய நோய்களின் போது ஏற்படும்  எரிச்சலைத் தணிக்கின்றது. துவர்ப்பு மருந்தாக உதவுகின்றது. சிறுநீரைப் பெருக்குகின்றது.
  • வளரும் இளம்பெண்கள் பசலைக் கீரையை ஏராளமாக உண்ணவேண்டும், அதில் இரும்புச் சத்து ஏராளமாக உள்ளது, சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது.மேலும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும் தீர்வாகிறது.