ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவு
சமீப காலங்களில் உணவிலுள்ள கொழுப்புச் சத்தைப் பற்றிய விஷயத்திற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. அதிக கொழுப்புச்சத்து மிகுந்துள்ள உணவு வகைகளை சாப்பிடுவது, இருதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரித்திருக்கிறது; அதுமட்டுமல்லாமல் இது சில வகையான புற்றுநோயையும் ஏற்படுத்தும் என்பதாக அநேக மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இருந்தபோதிலும் நம்முடைய உணவில் நாம் முற்றும் முழுமையாக கொழுப்புச் சத்தை தவிர்க்க வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்தாது. ஆகவே கொழுப்பு மிகுந்த உணவுப் பொருட்களை குறைவாக உட்கொள்வதும் கொழுப்பை அதிகரிக்கும் மற்ற வழிமூலங்களை தடைசெய்வதும் மிகவும் அவசியம்.
ஆரோக்கியத்தை பாதிக்கும் மனம்
பயம், வருத்தம், பொறாமை, மனக்கசப்பு, பகைமைப் போன்ற மனம் சார்ந்த உணர்ச்சிகள் நம்முடைய நோய்களில் பெரும்பாலானவற்றிற்கு காரணமாயிருப்பதை மருத்துவ விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது.இதைக் குணப்படுத்த என்ன செய்யமுடியும் என்று பார்த்தால் நல்ல உடல் ஆரோக்கியத்தை அனுபவித்துக் களிக்க, நாம் நம்முடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இது நிச்சயமாகவே ஒருசில நவீன மனோதத்துவ ஞானிகளும் உளநூல் ஆய்வாளர்களும் கூறும் ஆலோசனைக்கு நேர் எதிர்மாறாக இருக்கிறது. நம்முடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வதற்குப் பதிலாக அவைகளைச் செயலில் வெளிப்படுத்திவிட வேண்டும் என்று அடிக்கடி அவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அடக்கி வைத்த உணர்ச்சிகளை வெளியிடுவதும், ஒருவரின் கோபத்தை வெளிக்காட்டுவதும்,
வளைந்து சூழப்பட்டும் அமைதியிழந்தும் இருப்பவருக்குத் தற்காலிகமான நிம்மதியைக் கொண்டுவரக்கூடும். ஆனால் அனைவருமே தங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வதற்கு மாறாக அதை செயலில் காட்டுவார்களேயானால், ஏற்படக்கூடிய மனஇறுக்கத்தையும் பலவீனப்பட்டுப் போகும் நரம்புகளையும் கற்பனை செய்வது கடினமல்ல. சாத்தியமான சரீரக் காயங்களைப் பற்றி குறிப்பிட வேண்டியதில்லை. அது வெறுமென ஒருபோதும் முடிவுறாத நச்சுச்சுழலை உருவாக்கி வைக்கிறது.
நிச்சயமாகவே தீங்கிழைக்கும் உணர்ச்சிகளை ஒருவர் கோபம் அல்லது சீற்றத்துக்கு இடமளிக்கும் மனச்சாய்வுடையவராக இருந்தால் இவைகளை அடக்கி ஆளுவது என்பது எளிதல்ல.
வார்த்தைகளில் சொன்னால் தீங்கிழைக்கும் எதிர்மறையான உணர்ச்சிகளை உடன்பாடானவற்றைக் கொண்டு மாற்றீடு செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக “அன்பு காட்டுவது இயற்கையாக இருக்கிறது” என்று நொறுங்கிய இதயம் என்ற தன்னுடைய புத்தகத்தில் டாக்டர் ஜேம்ஸ் லின்ச் எழுதுகிறார். “‘உன்னைப் போல உன் அயலானை நேசி’ என்ற கட்டளை வெறுமென ஒரு தார்மீகக் கட்டளையாக இல்லை—அது உடல் ஆரோக்கியம் சார்ந்த ஒன்றாகும்.நெருக்கடி ஏற்படுகையில் நீங்கள் தஞ்சம் கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள் என்று அறிந்திருப்பது, பாதுகாப்பு, எல்லாம் நன்மைக்கே என்ற திடநம்பிக்கை மற்றும் நம்பிக்கை என்ற சில அதிக முக்கியமான உணர்வுகளை அளிக்கக்கூடும். இவை அனைத்துமே அழுத்தத்துக்குச் சிறப்பான மாற்றுமருந்துகளாக இருக்கக்கூடும்.இதன் காரணமாக நவீன மருத்துவம் கவலைகளினால் ஏற்படும் நோய்கள் என்றழைக்கப்படும் சிலவற்றிற்கு நிவாரணத்தைக் கொண்டுவர முயற்சி செய்கிறது.
ஆரோக்கியத்தை பாதிக்கும் சுற்றுச்சூழல்
சுற்றுசூழல் என்பது இயற்கையோடு மனிதர்களும் இணைந்தது எனலாம்.இதில் குழந்தைகளில் நாம் ஏற்படுத்தும் மாற்றமானது அவர்களின் ஆரோக்கியமான வாழ்வையே மாற்றி அமைக்கும் திறமை வாய்ந்தது. எடுத்துக்காட்டாக குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அவர்கள் விரும்பியதை எல்லாம் வாங்கிக் கொடுப்பது, அவர்கள் பருமனான பிறகு அவற்றை ஒரேயடியாக தவிர்த்து விடச் செய்வது. இதுதான் பல குடும்பங்களில் நடந்து வருகிறது. அதுவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் நிறமூட்டிகளும் சுவையூட்டிகளும் நாக்குக்கு இனிமையே தவிர, உடலுக்கு நல்லதல்ல.
இப்போதெல்லாம் தெருவில் இறங்கி விளையாடுகிற குழந்தைகளை பார்க்கவே முடிவதில்லை. செல்போன், கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் என உட்கார்ந்த நிலையிலேயே விளையாட பழகிவிட்டார்கள். அதை தவிர்த்துவிட்டு குழந்தைகளை குறைந்தது முக்கால் மணி நேரமாவது, அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து ஓடியாடி விளையாடப் பழக்க வேண்டும். இதனால் உடல் தசைகள் வலுப்பெறுவதுடன், உடலில் தேவையில்லாமல் கொழுப்பு சேர்வதும் குறையும்.மேலும் மனிதன் தான் சுற்றுசூழல் மாசுபாட்டிற்கு முக்கிய காரணியாக விளங்குகிறான். இதனால் ஏற்படும் பாதிப்புகள் பின்வருமாறு.
- சுவாசம் சம்பந்தபட்ட வியாதிகளுக்கு, வீட்டிற்குள்ளும் வெளியேயும் இருக்கும் அசுத்த காற்றே காரணம். ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 40 லட்சம் பிள்ளைகள் இந்த வியாதிகளால் சாகின்றனர்.
- சுத்தமான தண்ணீர் தட்டுப்பாட்டாலும் சுகாதாரமற்ற சுற்றுப்புறத்தாலும் வயிற்றுப்போக்கு சம்பந்தமான வியாதிகள் வருகின்றன.
இப்போதிருக்கும் தொழிநுட்பத்தால் குறைந்த செலவில் தவிர்க்கப்படக் கூடியவை என்பது மறுக்க முடியாத உண்மை. உதாரணமாக, எல்லாருக்கும் சுத்தமான தண்ணீரும் சுற்றுப்புற வசதியும் ஏற்படுத்தி தருவதன்மூலம் சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடையலா.
விளைச்சலை அதிகரிக்க ரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லி மருந்துகளையும் அதிக அளவில் பயன்படுத்துவதால், அதிலிருந்து பயிராகும் பொருட்களை நுகர்வதால் உடலில் நச்சுசேருகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கிறது. இன்று உணவு உற்பத்தியை பெருக்க பூச்சி கொல்லி மருந்து இல்லாத தொழில்நுட்பம் வந்துள்ளது. நீரை சிக்கனமாக பயன்படுத்தும் முறையும் வந்துள்ளது. அதனை புகுத்திட அரசுகள் உதவிட வேண்டும்.
ஆரோக்கியத்தை பாதிக்கும் அரசியல்
பெட்ரோல், டீசல் போன்றவற்றை பயன்படுத்துவது அரசியல் பொருளாதார காரணங்களால் தவிர்க்க இயலாமல் போய்விட்டது. இதனால் காற்று மண்டலத்தின் சராசரி வெப்ப நிலை 1.47 செல்சியஸ் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக பனி உருகி கடல் மட்டம் 9.88 செ.மீ. உயருமென்று கணித்துள்ளன. இது பல நாடுகளின் நிலப்பரப்பை அழிக்கும் தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகள் இந்தியா போன்ற நாடுகளை தங்கள் கழிவுகளைக் கொட்டும் கொல்லைப் புறங்களாகவே பார்க்கின்றன. பசுமைக்குழல் வாயுக்களை அதிகமாக வெளிப்படுத்துகின்றன.
மேலும் அரசு பல சட்டங்களை தீட்டி கண்காணிக்க வேண்டிய ஒலி மாசுபாட்டால் விளையும் தீமைகள் பின்வருமாறு
உயர் ரத்தஅழுத்தம், படபடப்பு, காது கேட்கும் தன்மை குறைவது போன்ற எல்லோரும் அறிந்த உடனடி பாதிப்புகள் மட்டுமில்லாமல் இன்சோம்னியா என்ற தூக்கமின்மை, குடல் அழற்சி, சிறுநீரகக் கோளாறுகள் போன்ற நீண்ட கால உடல் உபாதைகளும் நமக்கு ஏற்படலாம்.