உடலில் எலும்பு வலிமைக்கு மூல ஆதாரமும் உடலே தயாரித்துக்கொள்ளும் விதமாகவும் இருப்பது வைட்டமின் D.இந்த வைட்டமினின் இயற்கையான மூல ஆதாரம் சூரியக் கதிர்கள்.இதனால் தான் என்னவோ,எலும்புகள் வளரும் தன்மையில் இருக்கக் கூடிய இளம் குழந்தைகளை சிறிது நேரம் காலை இளம் வெயிலில் வைக்க வேண்டும் என நம் முன்னோர்கள் கூறியிருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.மேலும் இந்த வைட்டமின் குறைபாட்டினால் சோர்வு,முதுமைத் தோற்றம்,நோய் எதிர்ப்பு மண்டல பாதிப்புகள்,மூளைக் கோளாறுகள் போன்றவை தோன்றும்.எனவே பின்வரும் காணொளியைக் கண்டு எந்த உணவுகளில் எல்லாம் வைட்டமின் D உள்ளது என்று நன்கு அறிந்து நலமான வாழ்வைப் பெறுங்கள்.