நம் உடலின் ரத்த உற்பத்திக்கும், மூளை மற்றும் நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளுக்கும் மிக அவசியமானது வைட்டமின் பி12 ஆகும். எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமை, சின்னதாக ஒரு வேலையைச் செய்தால்கூட உடல் சோர்வு, கொஞ்ச தூரம் நடந்தாலே கை, கால் மூட்டுகளில் வலி, அடிக்கடி ஓய்வெடுக்கத் தூண்டும் மனநிலை போன்றவை வைட்டமின் பி12 குறைபாடும் காரணமாக இருக்கலாம்.
வைட்டமின்களில் இரண்டு வகைகள் உள்ளன.அவை நீரில் கரையக் கூடியவை, கொழுப்பில் கரையக்கூடியவை. விட்டமின்கள் A,D,E,K ஆகியவை கொழுப்பில் கரையக்கூடியவை. வைட்டமின் B மற்றும் C இரண்டும் நீரில் கரையக்கூடியவை. வைட்டமின் B யில் பி1, பி6, பி7, பி12 என நான்கு வகைகள் உள்ளன. இவற்றில் மிக முக்கியமான ஒன்று சயனோகோபாலமின் என்று அழைக்கப்படும் வைட்டமின் B12.
வைட்டமின் B12 அசைவ உணவுகளில் அதிகமாகக் காணப்படுகிறது. சுவைக்காக இல்லையென்றாலும், உடல் ஆரோக்கியத்திற்காக அசைவ உணவுகளைச் சாப்பிட வேண்டும்.வைட்டமின் பி12 ஆனது நம் உடலின் செல்களிலிருக்கும் டி.என்.ஏ-க்கள் வேலை செய்வதற்கும், ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கும் பயன்படுகிறது. இது நம் உடலின் வயிற்றுப் பகுதியில் இருந்துதான் உறிஞ்சப்படுகிறது.
சைவ உணவுகளைச் சாப்பிடுபவர்களுக்கும், மது அருந்துபவர்களுக்கும், எடைக் குறைப்புக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கும், வாயுக் கோளாறு பிரச்னைகளுக்கு மருந்துகள் உட்கொள்பவர்களுக்கும், அதிகமாக விரதம் இருப்பவர்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், ஐம்பது வயதைத் தாண்டியவர்களுக்கும் இந்தக் குறைபாடு ஏற்படலாம். இது அதிகமாகும்போது `அனீமியா’ எனப்படும் ரத்தச்சோகைப் பிரச்னை, ஞாபகமறதி போன்ற பாதிப்புகளும் உண்டாகிறது.
வைட்டமின் B12 குறைபாட்டின் அறிகுறிகள்
- வாய்ப்புண் தோன்றுதல்
- நாக்கு வெந்து சிவப்பாதல்
- தோல் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுதல்
- காதுகளில் சத்தம் வருதல்
வைட்டமின் B12 காணப்படும் உணவுகள்
மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் வைட்டமின் B12 அதிகமாகக் கிடைக்கும். சைவ உணவுகளைப் பொறுத்தவரை சோயாபீன்ஸ், பால், தயிர் ஆகியவற்றில் ஓரளவுக்கு வைட்டமின் B12 கிடைக்கும்.
வைட்டமின்கள், நம் உடலுக்குக் குறைபாடாகவும் இருக்கக் கூடாது. அதே நேரத்தில், தேவையைவிட அதிகமாகவும் இருக்கக் கூடாது. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உடலில் தேங்கினால் அவை பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை உண்டாக்கிவிடும். ஆனால், வைட்டமின் பி 12-ஐப் பொறுத்தவரை அந்தப் பிரச்னையும் இல்லை. இது நீரில் கரையக்கூடிய வைட்டமின் என்பதால், தேவைக்கு அதிகமாகக் கிடைத்தாலும், உடலில் தங்காமல் சிறுநீர் மூலமாகவோ வியர்வை மூலமாகவோ எளிதாக வெளியேறிவிடும்
பல வகை சீஸ்களில் உள்ளன. அனைத்திலுமே வைட்டமின் B12 ஏராளமான அளவில் உள்ளது. ஆகவே வைட்டமின் பி12 குறைபாட்டை சரிசெய்ய வேண்டுமானால், சீஸை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பாலில் கால்சியத்திற்கு அடுத்து வைட்டமின் B12 தான் அதிகம் உள்ளது.
காளானில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உங்களுக்கு வைட்டமின் B12 குறைபாடு இருந்தால், காளானை உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்களுக்கு சோயா பால் சிறந்தது. இதில் கலோரிகள் குறைவு மற்றும் வைட்டமின் B12 அதிகம். எனவே வைட்டமின் B12 குறைபாடு இருப்பவர்கள், சோயா பொருட்களை அன்றாட உணவில் சேர்க்க, அந்த குறைபாட்டில் இருந்து விடுபடலாம்.
காலை உணவாக உட்கொள்ளும் செரில்களிலும் வைட்டமின் B12 உள்ளது. அதிலும் வலுவூட்டப்பட்ட செரில்களில் வளமான அளவில் வைட்டமின் B12 நிறைந்துள்ளது. ஆகவே வைட்டமின் B12 குறைபாடு இருப்பவர்கள், செரில்களை சோயா பால் சேர்த்து தினமும் உட்கொள்ள விரைவில் B12 குறைபாட்டினால் வரும் நோய்களைத் தவிர்க்கலாம்.
உங்களுக்கு பாதாம் பால் பிடிக்குமானால், அடிக்கடி குடியுங்கள். பாதாம் பாலில் கலோரிகள் குறைவு மற்றும் வலிமையான வைட்டமின் பி12 சத்துக்கள் அதிகம். மேலும் இது மாட்டு பாலுக்கு சிறந்த மாற்றுப் பொருளாகும்.