உலகம் ஓர் அதிசயம் அதில் மனித இனம் ஒரு பொக்கிஷம் காரணம் என்ன என்று பார்த்தால் இயற்கையை போல் படைக்கும் திறன் நம் மனித இனத்திற்கு உள்ளது அந்த படைப்பாற்றலை நல்ல விதத்திலும் பயன்படுத்தி கொள்ளலாம் தீய வழியிலும் பயன்படுத்தி கொள்ளலாம்.
நல்ல விதத்தில் பயன்படுத்துவதால் இந்த இயற்கைக்கும் மற்றும் மற்ற உயிரினங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை .
ஆனால் நாம் அப்படியா ? இல்லை இல்லை நமது விஞ்ஞான அறிவு அழிவை நோக்கி தான் நம்மை நகர்த்தி கொண்டு போகிறது அதற்கு ஒரு அழகிய பெயர் ஒனறை நாம் வைத்து கொள்கிறோம் அதன் பெயர் “வளர்ச்சி”
இந்து வளர்ச்சியின் காரணமாக அனைத்தும் எளிதில் கிடைக்கிறது என்ற பிம்பம் ஒன்று உருவாகி போனது ஆனால் உண்மையில் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் நமது அறிவு சுருக்கப்படுகிறது எதையும் மேன்போக்கில் பார்த்து முடிவு செய்து கொள்ளும் மனப்பான்மை உருவாகி விட்டது .
சரி இதற்கும் விவசாயத்திற்கும் என்ன தொடர்பு என்று பார்ப்போம் . நாம் உயிர் வாழ தேவையான ஒன்று உணவு ஒரு நாள் ஒன்றிற்கு நாம் உட்கொள்ளும் உணவு பொருட்கள் குறைந்தபட்சம் 20 முதல் 50 வரை இருக்கலாம் …உதாரணத்திற்கு அரிசி பருப்பு காய்கறி பழம் கடுகு சோம்பு மிளகாய் மிளகு …….இது போன்று அடுக்கி கொண்டே போகலாம் அவ்வளவு உணவு பொருட்களை நாம் உண்ணுகிறோம் இவை அனைத்தும் எங்கே கிடைக்கும்? Super market அல்லது கடைகளில் தான் அல்லவா ? உடனே ஆம் என்று தான் சொல்லுவோம் ஆனால் அது அல்ல உண்மை நாம் உண்ணும் உணவு பொருட்களை விளைவிக்கும் விவசாய நிலத்தில் தான் அது கிடைக்கும் அங்கு கிடைத்தால் தான் நமக்கு சூப்பர் மார்க்கெட் லோ அல்லது கடைகளிலோ கிடைக்கும்.
இப்பொழுது இந்த விவசாய நிலத்தில் எதுவும் கிடைக்கவில்லை என்றால் சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்குமா? இல்லை நமக்கு உணவு பொருட்கள் கிடையாது . இதுதான் நமது அறியாமை நமக்கும் விவசாய நிலத்திற்கும் விவசாயிகளுக்கு மட்டும் தான் தொடர்பு உள்ளது.
விவசாயிகளுக்கும் விவசாய நிலத்திற்கும் ஏதேனும் பாதிப்பு வந்தால் பாதிக்கப்பட போவது வளர்ச்சி அடைந்து விட்டோம் என்று நம்பும் நம்மை போல் மனிதர்கள் தான்.
விவசாயம் காப்போம்………