சித்த மருத்துவம் நாட்டுப்புற மருத்துவத்தில் இருந்து வளர்ந்த இயற்கை மூலிகை மருத்துவ முறையாக விளங்குவது சித்த மருத்துவம் ஆகும் சித்த மருத்துவத்தை தமிழ் மருத்துவம் என்றும் கலைக்களஞ்சியம் சுட்டுகின்றது. தமிழ் தமிழரின் மருத்துவ முறையான சித்த மருத்துவ முறை அனைத்துத் தரப்பு மக்களாலும் பின்பற்றத் தக்க எளிமையான மருத்துவ முறையாக விளங்குகின்றது
நோய் உடலை மட்டுமல்லாமல் மனதையும் சார்ந்தது என்பதை உணர்த்தியது சித்த மருத்துவமே ஆகும்.
மருத்துவ நூலோர் குறிப்பிடும் வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்றும் அளவில் குறைந்தாலும் மிகுந்தாலும் நோய் உண்டாகும் என்பதே வள்ளுவரின் கருத்தாகும் மேலும் அவர் மருந்து என்னும் அதிகாரத்தில் 95 மருத்துவம் குறித்து சிறப்பாக விளக்கியுள்ளார் .
●வாதம்
சித்த மருத்துவம் கூறும் வாதம் என்பது உடல் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் வாயுவை குறிப்பதாகும்.
●பித்தம்
பித்தம் என்பது உடலில் உயிர் தங்குவதற்கு ஆதரவு நிலையாக இருக்கும் உடல் வெப்பத்தை குறிப்பதாகும் இந்த வெப்பம் உணவு எரிக்கப்பட்டு சக்தியாக மாற்றப்படும்போது உண்டாவதாகும்.
●கபம்
கபம் என்பது உடலில் குளிர்ச்சியை குறிப்பிடுவதாகும்.
இதன் அடிப்படையிலேயே 1482 வகையான நோய்கள் வாதத்தினாலும் 1483 வகையான நோய்கள் பித்தத்தினாலும் 1483 வகையான நோய்கள் கபத்தினாலு தோன்றுகின்றது என்று சித்த மருத்துவர்கள் மருத்துவ நூலில் எழுதி உள்ளனர்.