மனிதனை தின்னும் வணிகம் – தூங்கியது போதும் எப்போது விழிப்பாய்?
இது விழிப்புணர்வு கட்டுரை மனிதனை தின்னும் வணிகம் – தூங்கிது போதும் என்ற பெயரில் பல ஆராய்ச்சி கட்டுரைகள் நமது இணைய தளத்தில் வரும் காலங்களில் எழுதப்படும்.
இன்றைய தலைப்பு
ரொட்டியை ( biscuits ) பற்றிய விழிப்புணர்வு நமக்கு இருக்கின்றதா ?
வெளுத்ததெல்லாம் பால் என நாம் நினைக்கிறோம் ஆனால் பினாயில் என்பது மூடியை திறக்கும் பொழுது தான்
தெரிகின்றது . இது ஒரு விழிப்புணர்வு கட்டுரை இதில் வரும் தகவல்கள் கற்பனையல்ல . நம் உடம்பில் உள்ள உறுப்புகள் சரியாக வேலை செய்ய சரியான உணவை நாம் உட்கொள்ள வேண்டும் அந்த உணவு சரியானதுதானா என நாம் எப்பொழுது பார்க்க துவங்குகின்றோமோ அப்பொழுது இருந்து நாம் நோய்களில் இருந்து விடுபட துவங்குகிறோம். நாம் உண்ணும் உணவு தான் நம்மை ஆரோக்கியமுள்ள மனிதனாகவும் மாற்றும் அல்லது அட்டை மாத்திரையைக உண்ணும் நோயாளியாகவும் மாற்றும்.
நாம் எப்படியெல்லாம் கவனக்குறைவு இருக்கின்றோம் என்று இப்போது சிறு உதாரணத்தோடு பார்ப்போம் .
சில ஆங்கில வார்த்தைகளை நான் எழுதுகின்றேன் அது என்ன என்று உங்களுக்குத் தெரிகிறதா என பார்ப்போம்?
1.Refined wheat flour
2.Ediable vegetable oil ( palm )
3.sugar
4.Cashew nuts
5.invert syrub
6.milk solids
7.Butter
8.Raising agent ( 503 500 )
9.iodised salt
10.imulsifier 322 471 472e
ஏதேனும் புரிந்ததா ஒரு சில வார்த்தைகள் புரிந்திருக்கும் மீதியை நான் சொல்கின்றேன் இது ஒரு பிரபல பிஸ்கட் பாக்கெட்டில் எழுதியிருந்த ingredients அந்த பிஸ்கட் பாக்கெட் (நல்ல நாள்) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த ingredients என்ன என்பதை நாம் இப்பொழுது பார்ப்போம் .
இதில் உள்ள முக்கிய ingredients பற்றி மட்டும் பார்ப்போம்.
Refined wheat (மைதா)
மைதா ஒரு இறுதியாக அரைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு ஆகும்.இழைம தவிடுகள் நீக்கப்பட்ட தானியத்தின் வித்தகவிழையம் (மாச்சத்துக்கொண்ட வெள்ளை பகுதி) கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் மஞ்சள் நிற மாவாக இருந்தாலும், பென்சோயில் பெராக்சைடு சலவை செய்யப்பட்டு வெள்ளை நிறமாக மாறுகிறது. இந்த பென்சோயில்பெராக்சைடு சீனா,ஐரோப்பிய ஒன்றியம்,பிரிட்டன்உட்பட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அலொட்சான் மூலம் மென்மையாக்கப்படுவதால் மற்றும் மைதாவை உணவாக உட்கொள்ளும் போது கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிக்கப்பட்டு, நீரிழிவு நோய் வருவதற்கு காரணமாக அமைகிறது.
Palm oil ( பாமாயில்)
இதில் உள்ள கொழுப்பு கொலஸ்ட்ராலை உண்டாக்கும் . கொலஸ்ட்ரால் தான் இதய நோய் மற்றும் பக்கவாதத்தின் ஆரம்ப நிலை.
Emulsifier என்றால் என்ன ?
Emulsifier என்பது தின்பண்டங்களில் கலக்கும்
பொருள் E471 என்று பாக்கெட்டில் எழுதியிருந்தால் அது விலங்குகள் அல்லது தாவரங்களில் இருந்து பிரித்தெடுக்கும்
எண்ணெயாகும் . பச்சை symbolல் இருந்தால் அது தாவரம் . சிகப்பு symbolல் இருந்தால்
விலங்கு ( அந்த விலங்கு பன்றி )
Sugar and invert syrub
இது இரத்ததின் சர்க்கரை அளவை உயர்தும் தன்மை உள்ளது நீரிழிவு நோயை உருவாக்க முதல் காரணமே வெள்ளை சர்க்கரை தான்
Raising agent 503 – E503 (i) – Ammonium carbonate; 503 (ii) – Ammonium hydrogen carbonate.
Raising agent 500 – 500 (ii) – Sodium hydrogen carbonate: Sodium hydrogen carbonate (Bicarbonate of soda)
ஒரு அண்டா பாலில் ஒரு செட்டு விசம் தான் இந்த ingredients
இதெல்லாம் சேர்ந்துதான் ஒரு ரொட்டித் துண்டு உருவாக்கப்படுகின்றது இந்த பொருட்களை தனித்தனியாக கொடுத்தால் நம்மால் உண்ண முடியுமா ? தனித்தனியாக உண்டால் பக்க விளைவுகள் நிறைய ஏற்படும் அல்லவா இவை அனைத்தையும் சேர்த்து ஒரு ரொட்டியாக மாற்றி அதை சாப்பிட்டால் ஏதேனும் பிரச்சினை வராதா? வரத்தான் செய்யும் parts per million என்ற அளவில் இந்த இராயன மூலக்கூறுகள் உடம்பில் சேர்ந்து சேர்த்து இருபது வருடங்கள் முப்பது வருடங்கள் கழித்து புற்றுநோயோ அல்லது வேறேதும் தொற்றாத நோய்களை உண்டாக்விடும் என்பது மறுக்க முடியாத உண்மை.
தெரிந்தோ தெரியாமலோ நாம் அதை உட்கொள்கிறோம் நம் குழந்தைகளுக்கும் இதை கொடுக்கின்றோம் ஒரு உணவுப் பொருள் நாக்கிற்கும் மூளைக்கும் பிடித்ததாக இருக்க கூடாது.
கழுத்துக்கு கீழே இருக்கும் உறுப்புகளை எந்த சேதாரமும் ஏற்படுத்தாத மாதிரி இருக்க வேண்டும் . ஆனால் கவனக் குறைவின் காரணமாக அட்டைப்படத்தையும் கலர் கலர் காகிதங்கலையும் மட்டும் பார்த்துவிட்டு அதை பிரித்து அதில் உள்ள உணவு பொருளை எடுத்து லபக் லபக் என்று முழங்கி விடுகிறோம்.
ஆனால் அது எதுவும் இப்பொழுது பிரச்சினை ஏற்படுத்தாது இன்னும் பத்து வருடங்கள் கழித்தோ 15 வருடங்கள் கழித்தோ பெரிய பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
ஆகவே விழிப்புடன் இருக்க வேண்டும் ஒரு பொருளை வாங்குகிறீர்கள் என்றால் அதில் என்ன கலந்துள்ளனர் இதை சாப்பிட்டால் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா ? இல்லை பக்க விளைவுகள் ஏற்படுமா? இது குழந்தைகளுக்கு ஏற்றதா ? பெரியவர்களுக்கு ஏற்றதா ? இது குடலில் போய் எந்த பிரச்சனையும் ஏற்படுத்துமா?
இது நீரிழிவு நோயை ஏற்படுத்துமா ?
இது புற்றுநோய் பிரச்சினையை ஏற்படுத்துமா?
இது கொலஸ்ட்ராலை ஏற்படுத்துமா ?
இது உள் மூலத்தை ஏற்படுத்துமா?
இது ஹார்ட் அட்டாக்கை உண்டாகுமா?
இது எல்லாத்தையும் பார்த்துதான் அந்த உணவை நாம் உட்கொள்ள வேண்டும்.
“தீதும் நன்றும் பிறர் தர வாரா” எல்லாத்துக்கும் காரணம் நாம தான் நாம் தீய உணவு முறையில் இருந்து ஒதுங்கி இருந்தால் ஆஸ்பத்திரியில போய் கட்டு கட்ட நோட்டை நீட்ட தேவையில்லை.
இது ஒரே ஒரு எடுத்துக்காட்டு தான் ஆனால் நம்மை சுற்றி இருக்கிறது அதை நாம் இனம் காணாமல் நமக்கு தெரியாமலே நிரைய தீய உணவு பொருட்களை உட்கொண்டிருக்கின்றோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.